கூகுளின் டூரிங் பேடு வெப் சைட் அறிமுகம்: இனி காசு கொடுக்காம ஹாய ஊர் சுற்றலாம்.!
கொடுக்காம ஹாய ஊர் சுற்றலாம்.!கூகுள் நிறுவனம் தற்போது சுற்றுலா பயணிகளுக்காக டூரிங் பேடு என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனம் தற்போது சுற்றுலா பயணிகளுக்காக டூரிங் பேடு என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏரியா 120 என்ற சுற்றுலா வலைதளத்தில் இருந்து டூரிங் பேடு இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது. உலகளில் சிறப்பு வாய்ந்த கண்கவரும் சுற்றுலா தளங்களும், எங்கு என்னென்ன இருக்கின்றது. அங்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. தலைசிறந்த சுற்றுலாபகுதிகளை கூகுள் நிறுவனம் பட்டியிடுகின்றது.

இந்த வலைதளத்தால் பல்வேறு வழிகளில் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும், சுற்றுலா தளங்களுக்கு செல்வது, அங்கு கிடைக்கும் உணவு, ஹோட்டல்கள் உள்ளிட்ட முக்கிய குறிப்புகள் இதில் இடம் பெற்று இருக்கும். தற்போது தான் சுற்றுலா பயணிகளுக்காக வழிகாட்டியாக இது துவங்கப்பட்டுள்ளது. தற்சமயம் இது துவக்க நிலையில் இருக்கின்றது.

20 நகரங்கள்:
நியூடெல்லி, ப்ராக், சிகாகோ, ஆம்ஸ்டெர்டாம், பார்சிலோனா, பெர்லின், லாஸ்வேகாஸ் ஆகிய நகரங்களில் உள்ள 20 இடங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் வரும் மாதங்களில் பல்வேறு இடங்களையும் தேர்வு செய்து இதில் இடம்பெற செய்யும் நோக்கில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இலவச வழிகாட்டி:
நீங்கள் ஒரு நகரத்தை தேர்வு செய்யும் போது, பிரபலாமன இடங்கள் பரிந்துரைக்கப்படும் சுற்றுலாப்பயணங்கள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றை காண்பீர்கள், உள்ளூர் வழிகாட்டிகள், பயணிகளின் இலவச வழிகாட்டிலின்படி சுற்றுலா பயணங்கள் மற்றும் பரிந்துறைகள் இருக்கும் என டூரிங்பேடு இணைய தளம் தெரிவித்துள்ளது.

முன்பதிவுகளை ரத்து செய்யலாம்:
நீங்களே உங்களின் செலவுகளை தீர்மானிக்கும் அம்சத்துடன் இந்த வெப்சைட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான கட்டணத்தில் பயணிக்கலாம். மேலும், கட்டணங்கள் குறித்து விவாதிக்கலாம். நீங்கள் செல்லும் இடங்களில் விலை அதிகமாக இருந்தாலும், அதை நிராகரிக்கவும் முடியும் வகையில் இந்த தளம் உருவாக்கபட்டுள்ளது.

பயண தயாரிப்பு:
கூகுளின் பயண தயாரிப்புகளை உருவாக்கும் ஒரு பின்னணி நம்மிடம் இருப்பதாக உணர்கின்றோம். பலரின் பயண சிக்கல்களுக்கு தீர்வு செல்வதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம் என டூரிங்பேடு தெரிவித்துள்ளது.

சுற்றுலா தளங்கள்:
உணவு, ரூம்கள், பொழுது போக்கு, சுற்றுலா தளங்கள் மற்றும் விருப்பமான நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை பயணிகளுக்கு பட்டியல் ஈடுவதையும் மற்றொரு வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்தும் கொள்ள முடியும் டூரிங்பேடு வலைதளத்தில்.


Click it and Unblock the Notifications