Home
Apps

2020 இறுதியில் சிக்கிய கூகிள் நிறுவனம்.. கூகிள், யூடியூப், ஜிமெயில் இன்னும் பல சேவைகள் உலகளவில் செயல்படவில்லை.

2020 ஆம் ஆண்டின் இறுதியை நெருங்கிவிட்டோம், இந்த மோசமான ஆண்டு ஒரு வழியாக நிறைவு பெறப்போகிறது என்று பெருமூச்சுவிட்டுக் கொண்டே ஸ்மார்ட்போனை ஸ்க்ரோல் செய்தவர்களுக்கு இன்று அவர்களின் கூகிள் பயன்பாடுகள் அனைத்தும் செயல்படாமல் இருப்பதைக் கண்டு சிறிது நேரம் குழம்பி இருப்பார்கள். ஆம், உலகத்தின் உள்ள பல இடங்களில் கூகிள் நிறுவனத்தின் பல பயன்பாடுகள் செயல்படவில்லை.

யூடியூப் முதல் ஜிமெயில் வரை பல சேவைகள் செயல்படவில்லை

யூடியூப் முதல் ஜிமெயில் வரை பல சேவைகள் செயல்படவில்லை

இந்தியா முழுவதும் பல பயனர்களுக்கு யூடியூப் மற்றும் ஜிமெயில் வலைத்தளங்கள் செயல்படவில்லை என்று பல்லாயிரக்கணக்கான பயனர்கள் கூகிள் நிறுவனத்தின் பக்கத்தில் புகார் அளித்துள்ளனர். பிரபலமான வலைத்தளமான டவுன் டிடெக்டர் படி, யூடியூப், ஜிமெயில், கூகிள் மற்றும் கூகிள் டிரைவ் உள்ளிட்ட பல கூகிள் சேவைகள் பல பயனர்களுக்கு வேலை செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வர் கோளாறு.. Retry மெசேஜ்..

சர்வர் கோளாறு.. Retry மெசேஜ்..

இந்த வலைத்தளங்களைத் தவிர, கூகிள் பிளே ஸ்டோர் உட்பட, கூகிள் மேப்ஸ், கூகிள் ஹேங்கவுட்ஸ், கூகுள் டியோ மற்றும் கூகுள் மீட் போன்ற பிரபலமான பயன்பாடுகளும் கடந்த சில மணி நேரமாகப் பல பயனர்களுக்குச் செயல்படாமல் Retry என்ற மெசேஜ் உடன் ஸ்தம்பித்து நிற்கிறது என்று டவுன் டிடெக்டர் கூறியுள்ளது. 2020 ஆம் ஆண்டின் இறுதியில் கூகிள் இப்படி ஒரு தொழில்நுட்ப சிக்கலில் சிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

உலகின் பல நாடுகளிலும் முக்கிய கூகிள் சேவைகள் செயல்படவில்லை

உலகின் பல நாடுகளிலும் முக்கிய கூகிள் சேவைகள் செயல்படவில்லை

மேற்கூறிய சேவைகள் இந்தியாவில் மட்டுமல்ல, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் பல பகுதிகள் உட்பட உலகின் பல நாடுகளிலும், பல பகுதிகளிலும் இந்த சிக்கல்களை மக்கள் எதிர்கொள்கின்றன என்று வலைத்தளம் மேலும் கூறியுள்ளது. இந்த பதிவை வலைத்தளம் பதிவிடும் நேரத்தில், யூடியூபில் மட்டும் சுமார் 26,000-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து வலைத்தளத்திற்குப் புகார்கள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 விரைவில் கோளாறை சரி செய்யப்படும்

விரைவில் கோளாறை சரி செய்யப்படும்

யூடியூப் தனது பயனர்களுக்கு தங்கள் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் பதிலளித்துள்ளது. அதன் ட்வீட்டில், யூடியூப் குழு, உங்களில் பலருக்கு இப்போது யூடியூப்பை அணுகுவதில் சிக்கல்கள் இருப்பதை உணர்ந்துள்ளது. எங்கள் குழு சிக்கலை அறிந்து, அதைச் சரி செய்வதற்கான வேலைகளைச் செய்து வருகிறது. இந்த கோளாறுக்கான காரணம் என்ன என்பது சரியாக தெரியவில்லை, விரைவில் கோளாறை சரி செய்து அப்டேட் செய்கிறோம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google, YouTube, Gmail and Other Services Not Working Globally : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X