பேக்கப் & சின்க் செய்ய பிரத்தியேக செயலி அறிமுகம்: கூகுள் அசத்தல்

|

ஆப்பிள் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் டிஜிட்டல் தரவுகளை பேக்கப் செய்ய உதவும் பிரத்தியேக செயலியை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

பேக்கப் & சின்க் செய்ய பிரத்தியேக செயலி அறிமுகம்: கூகுள் அசத்தல்

மேக் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களுக்கான கூகுளின் பேக்கப் மற்றும் சின்க் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புகைப்படங்கள் மற்றும் தரவுகளை பாதுகாப்பாக சேமித்து வைக்க உதவும் இந்த செயலி கூகுளின் போட்டோஸ் மற்றும் டிரைவ் டெஸ்க்டாப் செயலிகளுக்கு மாற்றாக அமையும்.

வாடிக்கையாளர்கள் மிக எளிமையாக முக்கிய தரவுகள் மற்றும் புகைப்படங்களை தங்களது டெஸ்க்டாப்பில் இருந்து பேக்கப் செய்ய முடியும். ஒருமுறை அப்லோடு செய்த பின் தரவு மற்றும் புகைப்படங்களை கூகுள் டிரைவ் செயலி வாயிலாக மிக எளிமையாாக இயக்க முடியும்.

பேக்கப் & சின்க் செய்ய பிரத்தியேக செயலி அறிமுகம்: கூகுள் அசத்தல்

இத்துடன் ஸ்மார்ட்போன், எஸ்.டி. கார்டுகள், டிஜிட்டல் கேமரா உள்ளிட்டவற்றில் இருந்தும் தரவுகளை பேக்கப் செய்யும் வசதியை இந்த செயலி வழங்குகிறது. மேலும் புகைப்படங்களின் தரத்தை உயர்த்தும் வசதியை கூகுள் வழங்குகிறது. இதை பேக்கப் செய்யும் முன் செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு நேரமும், உங்களது முக்கிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை டெஸ்க்டாப், ஸ்மார்ட்போன், டிஜிட்டல் கேமரா உள்ளிட்டவற்றில் பதிவு செய்து விடுவீர்கள். அனைத்து தகவல்களையும் பாதுகாப்பாகவும், ஒருங்கிணைத்து வைப்பதும் மிகவும் சவாலான காரியமாக இருக்கும், இதை எதிர்கொள்ளவே புதிய பேக்கப் மற்றும் சின்க் செயலியை அறிமுகம் செய்துள்ளோம்.

மிக எளிமையாகவும், அதிவேகமாகவும் தகவல்களை பாதுகாத்து அதனை பேக்கப் மற்றும் சின்ர் செய்ய இந்த செயலி வழி செய்யும், புதிய சேவை கூகுள் போட்டோஸ் டெஸ்க்டாப் அப்லோடர் மற்றும் மேக் அல்லது கணினிகளின் டிரைவ்களுக்கு மாற்றாக இருக்கும் என கூகுளின் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

பேக்கப் மற்றும் சின்க் வாடிக்கையாளர்கள் தங்களது கூகுள் அக்கவுண்ட் மூலம் சைன்-இன் செய்து தேவையான போல்டர்களை தேர்வு செய்தால் தானாக அப்லோடு துவங்கி விடும். இவ்வாறு செய்யும் போது பயனுள்ள பல்வேறு ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றது. டிரைவ் ஸ்டோரேஜிற்கு அப்கிரேடு செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Google has rolled out the Backup and Sync app for Mac and Windows which is supposed to ease the backup process of files and photos.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X