சுற்றுலா பயணிகளுக்கு உதவும் அப்டேட் செய்யப்பட்ட கூகுள் டிரிப் செயலி

By Siva
|

கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் வெளியிட்ட செயலிகளில் மிகவும் பயன்படக்கூடியது கூகுள் டிரிப்ஸ் என்ற சுற்றுலா செயலி. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஒஎஸ் போன்களுக்கு பொருந்தும் வகையில் இந்த செயலி இருந்தால் போதும் நீங்கள் பெரிதாக சுற்றுலாவுக்கு திட்டமிட தேவையில்லை. இந்த செயலி உங்களுக்கு தேவையான விபரங்களை தரும்

சுற்றுலா பயணிகளுக்கு உதவும் அப்டேட் செய்யப்பட்ட கூகுள் டிரிப் செயலி

தற்போது கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து பலர் சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த கூகுள் டிரிப் செயலி தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்னும் பல புதிய வசதிகள் இந்த அப்டேட் மூலம் கிடைத்துள்ளது. கூகுள் டிரிப்ஸ் செயலியில் உள்ள ஐந்து முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

ஒரே இடத்தில் அனைத்து முன்பதிவும் சாத்தியம்:

ஒரே இடத்தில் அனைத்து முன்பதிவும் சாத்தியம்:

நீங்கள் சுற்றுலா செய்ய வேண்டும் என்றால் டிராவல், தங்குவதற்கு ஓட்டல், விமான, பஸ், ரயில் பயணம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு செயலியை பயன்படுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் கூகுள் டிரிப்ஸ் அப்டேட் வெர்ஷனில் ஒரே செயலியில் அனைத்து விதமான முன்பதிவுகளையும் ஒரே பட்டனை தட்டி முடித்துவிடலாம். அதுமட்டுமின்றி முன்பதிவு செய்த விபரங்களை அந்த செயலியின் மூலமே உங்களுக்கு தேவையானவர்களுகு இமெயில் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்

கடைசி நிமிட மாற்றங்களையும் செய்யலாம்:

கடைசி நிமிட மாற்றங்களையும் செய்யலாம்:

இந்த கூகுள் டிரிப்ஸ் உதவியால் ஒரே ஒரு ஜிமெயில் மூலமே உங்களுடைய முன்பதிவுகளை உறுதி செய்து கொள்ளலாம். ஒரு வேளை உங்களுடைய பயணத்திட்டமோ, தங்கும் வசதியை மாற்றவோ நீங்கள் கடைசி நேரத்தில் முடிவு செய்தால் கூட இதில் செய்து கொள்ளும் வசதி உண்டு.

இதனால் உங்களுக்கு எந்தவித பண நஷ்டமும் இருக்காது. எந்தவித இமெயில் கன்பர்மேஷனும் தேவையில்லை. இதற்கு நீங்கள் ரிசர்வெஷன் செக்சன் சென்று + என்ற பட்டனை தட்டி அதில் உங்களுடைய பிளைட் எண், கார் வாடகை நம்பர், ஓட்டல் பெயர் மற்றும் பிற விபரங்களை மிக எளிதில் நிரப்பி கொள்ளலாம்

100 எம்பிபிஎஸ் வேகத்தில் ஜியோ பைபர் : அடுத்த இலவச யுத்தம் தயார்.!100 எம்பிபிஎஸ் வேகத்தில் ஜியோ பைபர் : அடுத்த இலவச யுத்தம் தயார்.!

பேருந்து மற்றும் ரயில் வசதியும் உண்டு:

பேருந்து மற்றும் ரயில் வசதியும் உண்டு:

ஒரு புதிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்யும்போது அங்கு பல்வேறு நகரங்களையும் சுற்றி பார்ப்பதற்கு தேவையான ரயில் அல்லது பேருந்துகளையும் நீங்கள் கிளம்புவதற்கு முன்பே திட்டமிட்டு உங்களுடைய பேருந்து அல்லது ரயில் டிக்கெட்டுக்களை உறுதி செய்து கொள்ளலாம். இந்த செயலியில் அந்த வசதி உண்டு

ஒரு புதிய பயண அனுபவம் கிடைக்கும்:

ஒரு புதிய பயண அனுபவம் கிடைக்கும்:

ஒரு புதிய நாட்டிற்கு நீங்கள் சுற்றுலா பயணியாக சென்றால் அங்குள்ள முக்கிய இடங்கள், சுற்றுலா பகுதிகள் உங்கள் எவை எவை என்று தெரியாது. ஆனால் இந்த கூகுள் டிரிப் செயலி அந்த நாட்டில் உள்ள அனைத்து முக்கிய இடங்களையும் உங்களுக்கு வழிகாட்டுவதோடு, அந்த இடங்களுக்கு செல்லக் கூடிய வழிகளையும் எளிதில் காண்பிக்கும்

உங்கள் டிரிப்பை டவுன்லோடு செய்யுங்கள்:

உங்கள் டிரிப்பை டவுன்லோடு செய்யுங்கள்:

கூகுள் டிரிப் செயலி மூலம் உங்கள் பயணத்தை முடிவு செய்துவிட்டால் உங்களுக்கு தேவையான விபரங்களை டவுன்லோடு செய்து சேமித்து வைத்து கொள்ளுங்கள். நீங்கள் செல்லுமிடத்தில் ஒருவேளை இண்டர்நெட் கனெக்சன் இல்லையென்றாலும் ஆப்லைனில் நீங்கள் சேமித்த வைத்த விபரங்கள் உங்களுக்கு கைகொடுக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Google Trips app for both Android and iOS platforms has received an update. The update rolls out many features that will make your next vacation enjoyable.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X