Home
Apps

Google Translate லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் பற்றி தெரியுமா? இன்று முதல் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு!

கூகிள் தனது கூகிள் மொழிபெயர்ப்பு பயன்பாட்டிற்கான அம்சத்தில் லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் எனப்படும் புதிய அம்சத்தை அண்மையில் சோதனை செய்து வருகிறது என்று நாங்கள் தெரிவித்திருந்தோம். லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் எனப்படும் இந்த சேவையை கூகிள் இன்று அறிமுகம் செய்யத் தயாராகிவிட்டது. லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் என்பது என்ன? எப்படிச் செயல்படும்? இந்த அம்சம் எப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகிறது என்று பார்க்கலாம்.

லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் என்றால் என்ன?

லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் என்றால் என்ன?

கூகிள் நிறுவனம் தனது சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் தொடர்ச்சியான செயற்கை நுண்ணறிவு டெமோக்களின் போது, இந்த அம்சத்தைச் சோதனை செய்துள்ளது என்று 'தி வெர்ஜ்' பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்த புதிய அம்சத்தின் படி, பயனர்கள் ஒரு மொழியை மற்றொரு மொழியில் நிகழ் நேரத்தில் உடனுக்குடன் நொடியில் உடனடியாக மொழிபெயர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைவ் மொழிபெயர்ப்பு பயன்படுத்த இது கட்டாயம் தேவை

லைவ் மொழிபெயர்ப்பு பயன்படுத்த இது கட்டாயம் தேவை

இந்த அம்சத்தைப் பயன்படுத்த இன்டர்நெட் இணைப்பு கட்டாயம் அவசியம் தேவைப்படும் என்று கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகிள் மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்படும் எளிய மொழிபெயர்ப்பு அம்சத்தை விட, நிகழ் நேரப் பன்மொழி மொழிபெயர்ப்பில் கூடுதல் சிக்கலான சவால்கள் மிகவும் அதிகம் என்பதே, இந்த சேவை வெளியிடப்படத் தாமதமானது என்றும் கூகிள் தெரிவித்துள்ளது.

நிறுத்தற்குறியீடு, வாக்கிய சொல் திருத்தும் செய்யும் AI

நிறுத்தற்குறியீடு, வாக்கிய சொல் திருத்தும் செய்யும் AI

டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சம், சாதனத்தின் மைக்ரோஃபோன் வழியாக முழு வாக்கியங்களையும் முதலில் பதிவு செய்வதைத் தொடர்ந்து மதிப்பீடு செய்துகொள்ளும். அடுத்து இந்த ஆடியோவைக் AI கேட்டவுடன், நிறுத்தற்குறியை எங்குச் சேர்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது மற்றும் சூழல் சொல் திருத்தம், உச்சரிப்புகள் மற்றும் கிளை மொழிகளைச் சரிசெய்தல் போன்ற பிற திருத்தங்களை நிகழ் நேரத்தில் செய்து முடித்து மொழிபெயர்த்து உங்களுக்கு வழங்குகிறது.

இன்று முதல் ஆன்டுராய்டு போன்களில்

இன்று முதல் ஆன்டுராய்டு போன்களில்

நீங்கள் கூறும் வார்த்தைகளை உங்களுக்குத் தேவையான மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்த்துத் தரும் இந்த புதிய கூகிள் ட்ரான்ஸ்லேட் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சம் இன்று முதல் ஆன்டுராய்டு போன்களில் கிடைக்க இருக்கிறது. இந்த அம்சத்தைக் கூகிள் எட்டு மொழிகளில் வெளியிட்டுள்ளது. இந்த கூகிள் ட்ரான்ஸ்லேட் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சம் ஐபோன்களுக்கு இன்னும் சில நாட்களுக்குள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

8 மொழிகளில் அறிமுகம்

8 மொழிகளில் அறிமுகம்

தற்போது இந்த அம்சம் ஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன், ஹிந்தி, போர்டுகீஸ், ரஷ்யன், ஸ்பானிஷ் மற்றும் தாய் ஆகிய மொழிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் பேசும் வார்த்தையை உடனடியாக நீங்கள் விரும்பும் வேறு மொழிக்கு மாற்றித் தருகிறது.

உடனே லைவ் மொழிபெயர்ப்பு

உடனே லைவ் மொழிபெயர்ப்பு

இந்த அம்சத்தைப் பயன்படுத்த உங்கள் கூகுள் ட்ரான்ஸ்லேட் பயன்பாட்டுச் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். கூகிள் ட்ரான்ஸ்லேட் செயலில் உள்ள ட்ரான்ஸ்கிரிப்ஷன் பட்டனை அழுத்தினாள் போதும் உடனே லைவ் மொழிபெயர்ப்பு நடந்துவிடும்.

Best Mobiles in India

English summary
Google Translate Live Transcribe Feature Rolling Out For Android From Tomorrow : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X