கூகுள் டிரான்ஸ்லேசன் செயலியின் வருமானம் இவ்வளவா? சுந்தர் பிச்சை கூறியது என்ன?

கூகுள் செயலியான ஒரு வார்த்தை, முழு வாக்கியம் அல்லது முழு இணைய ஆவணத்தை கூட உள்ளீடாக பெற்றுக்கொண்டு , அதை 100க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து தரவல்லது.

|

கூகுள் சர்ச், யூடியூப், கூகுள் ஃடாக்ஸ், ஜிமெயில் என கூகுள் நிறுவனத்திற்கு தினமும் வருவாய் ஈட்டித்தரும் வெற்றி படைப்புகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். ஆனால் மற்றொரு கூகுள் படைப்பை பற்றி நீங்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டீர்கள். அது தான் தங்க சுரங்கம் போன்ற 'கூகுள் டிரான்ஸ்லேட்' செயலி.

கூகுள் டிரான்ஸ்லேசன் செயலியின் வருமானம் இவ்வளவா?

கடந்த திங்களன்று நடைபெற்ற கூகுளின் இரண்டாம் காலாண்டிற்காக வருவாய் தொடர்பான குழு கூட்டத்தில், இந்த டிரான்ஸ்லேசன் செயலியின் பணம் ஈட்டும் திறனை பற்றிய புதிரான தகவலை சுந்தர் பிச்சை வெளிப்படுத்தினார். இந்த செயலியானது தினமும் 143பில்லியன் வார்த்தைகளை மொழிபெயர்த்து வருகிறது என குறிப்பிட்ட அவர், சமீபத்திய உலககோப்பை கால்பந்து போட்டியின் போது இந்த எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்தாக தெரிவித்தார்.

மொழிபெயர்ப்பு சேவை

மொழிபெயர்ப்பு சேவை

கூகுள் செயலியான ஒரு வார்த்தை, முழு வாக்கியம் அல்லது முழு இணைய ஆவணத்தை கூட உள்ளீடாக பெற்றுக்கொண்டு , அதை 100க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து தரவல்லது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொழிபெயர்ப்பு சேவையானது, தற்போது வரை பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் திறன்களை கூடுதலாக பெற்றுள்ளது. எடுத்துக்காட்டாக தற்போது கூகுள் டிரான்ஸ்லேட் செயலியானது நிகழ்நேரத்தில் நடைபெறும் உரையாடல்களை மொழிபெயர்த்தல், ஸ்மார்ட்போன் கேமராவை பயன்படுத்தி மாற்று மொழியில் உள்ள தகவல்பலகையை மொழிபெயர்த்தல் போன்ற அதிநவீன அம்சங்களை கொண்டுள்ளது.

உலக கோப்பை

உலக கோப்பை

உலக கோப்பையின் போது இரஷ்யாவிற்கு பயணம் செய்ய மக்களுக்கு கூகுள் டிரான்ஸ்லேட் எவ்வளவு உதவிகரமாக என்பதை பற்றிய நேர்மறையான பின்னூட்டங்களை பார்த்து மிகவும் பெருமைபடுவதாக குறிப்பிட்ட சுந்தர் பிச்சை, "உங்களுக்கு பரிச்சையம் இல்லாத இடங்களில், மொழியும் தெரியாமல் இருக்கும் சமயங்களில், சரியான தகவல்களுடன் சரியான நேரத்தில் உங்களுக்கு உதவ கூகுள் எப்போதும் இருக்கும்" என தெரிவித்தார்.

பணத்தின் மொழி

பணத்தின் மொழி

கூகுள் நிறுவனம் தற்போது தனது மொழிபெயர்ப்பு சேவையை வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாவும், விளம்பரங்கள் ஏதும் இன்றியும் வழங்கி வருகிறது. ஆனால் இந்த செயலியை பணம் சம்பாதிக்கும் மாற்றுவதற்கு வெளிப்படையான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.

ராவல் கைடு மற்றும் லாங்குவேஜ் ஸ்கூல்

ராவல் கைடு மற்றும் லாங்குவேஜ் ஸ்கூல்

உள்ளூர் விடுதிகள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் மற்ற விளம்பரங்கள் ஏதும் இல்லாமல் இருப்பதால் தான், பெரும்பாலும் மக்கள் தாங்கள் பயணங்களை மேற்கொள்ளும் போது இந்த செயலியை விரும்புகின்றனர். மேலும் கூகுள் டிரான்ஸ்லேட் பயனர்கள் பயணங்கள் மேற்கொள்ளாதபோதும், இச்செயலி டிராவல் கைடு மற்றும் லாங்குவேஜ் ஸ்கூல் போன்ற தகவல்களை வழங்குகிறது.

15 நொடி வீடியோ விளம்பரம்

15 நொடி வீடியோ விளம்பரம்

அதனால் கண்டிப்பாக பயனர்களுக்கு தொந்தரவு ஏற்படாதவாறு தான் ( அவசரத்தில் கழிவறைக்கு வழி கேட்கும் போது கூட 15 நொடி வீடியோ விளம்பரம்!!!)கூகுள் விளம்பரங்களை உருவாக்கும். ஆனாலும் விளம்பரங்களை உருவாக்குவதில் கூகுளுக்கு ஏற்கனவே ஏராளமான அனுபவம் உள்ளது.மேலும் வர்த்தக நிறுவனங்களை சார்ந்த புதிய அம்சங்களையும் இந்த செயலி பெறவுள்ளது

பணம் ஈட்ட துவங்கிவிடும்

பணம் ஈட்ட துவங்கிவிடும்

அந்த கூட்டத்தில் டிரான்ஸ்லேட் செயலி வாயிலாக பணம் ஈட்டுவது பற்றி எதுவும் குறிப்பிடாத சுந்தர் பிச்சை, கூகுள் மேம்ஸ் வாயிலாக புதிதாக வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை கூகுள் நிறுவனம் ஆராய பரிந்துரைத்தார்.

ஆனால் கூகுள் டிரான்ஸ்லேட் செயலிக்கு உள்ள அதிகப்படியான பிரபலம், எப்போதும் அதை தவிர்க்க முடியாத ஒன்றாக்கியுள்ளது. அதனால் அடுத்த காலாண்டில் இந்த முடிவை கூகுள் எடுத்தால், இப்போது இருந்து 2 ஆண்டிற்குள் கூகுள் நிறுவனம் மொழிகளல வைத்து பணம் ஈட்ட துவங்கிவிடும்.

Best Mobiles in India

English summary
Google Translate could end up being the search giants next hit product : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X