கூகுள் மொழிபெயர்ப்பு செயலியில் கூடுதல் வசதி

இன்று முதல் கூகுள் மொழிபெயர்ப்பு செயலியில் இந்திய மொழிகளான மராத்தி, தமிழ், தெலுங்கும் கன்னடம், குஜராத்தி, உருது மற்றும் பெங்காலி மொழிகளில் ஆஃபலைன் மொழிபெயர்ப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

By Siva
|

கூகுள் அளித்து வரும் பல்வேறு சேவைகளில் ஒன்று கூகுள் மொழிபெயர்ப்பு. இதில் பல இந்திய மொழிகள் இடம்பெற்றிருக்கும் நிலையில் தற்போது ஆஃப்லைன் மொழிபெயர்ப்பு என்ற புதிய வசதி செய்யப்பட்டுள்ளது

கூகுள் மொழிபெயர்ப்பு செயலியில் கூடுதல் வசதி

இன்று முதல் கூகுள் மொழிபெயர்ப்பு செயலியில் இந்திய மொழிகளான மராத்தி, தமிழ், தெலுங்கும் கன்னடம், குஜராத்தி, உருது மற்றும் பெங்காலி மொழிகளில் ஆஃபலைன் மொழிபெயர்ப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி உடனடியாக மொழிபெயர்ப்பு காட்சிக்கும் தெரியும் வகையில் உள்ளது. ஏற்கனவே ஆஃப்லைன் மொழிபெயர்ப்பு இந்தி மொழியில் உள்ள நிலையில் தற்போது அது மேலும் ஏழு இந்திய மொழிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆஃப்லைன் மொழிபெயர்ப்பை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வைபை நெட் கனெக்சன் இருக்கும்போது எந்த மொழியை மொழிபெயர்க்க விரும்புகின்றீர்களோ அந்த மொழிக்கான மொழி பேக்கிங்கை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.

1ஜிபி வரம்பை தாண்டிய பின்னர் 10ஜிபி அளவிலான டேட்டாவை பெறுவதெப்படி.?1ஜிபி வரம்பை தாண்டிய பின்னர் 10ஜிபி அளவிலான டேட்டாவை பெறுவதெப்படி.?

பின்னர் நீங்கள் உங்களுக்கு தேவையானபோது மொழிபெயர்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் ஆங்கில மொழி மட்டும் ஏற்கனவே இருக்கும். நீங்கள் தேர்வு செய்த மொழியை ஆங்கிலத்திலோ அல்லது ஆங்கிலத்தில் இருந்து தேர்வு செய்யும் மொழிக்கோ மொழிபெயர்த்து கொள்ளலாம்

மேலும் கூகுள் மொழிபெயர்ப்பு தந்துள்ள அடுத்த வசதி இன்ஸ்டண்ட் விஷூவல் வசதி. இந்த வசதி தற்போது மேலே கூறிய ஏழு மொழிகளுக்கும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியின் மூலம் நீங்கள் உங்கள் கேமிரா போன் மூலம் ஆங்கில வார்த்தைகளை புகைப்படம் எடுத்தால் அந்த வார்த்தைகள் உங்களுக்கு தேவையான மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அளிக்கும். நீங்கள் டைப் அடிக்காமலேயே கேமிராவின் மூலம் எவ்வளவு பெரிய வாக்கியங்களையும் பாராக்களையும் மொழி பெயர்க்கலாம்

இந்த புதிய வசதியை நீங்கள் பெற வேண்டும் என்றால் மொழிபெயர்ப்பு செயலியை ஓப்பன் செய்து கொண்டு பின்னர் கேமிராவை ஆன் செய்து பின்னர் ஆங்கில வார்த்தைகளை புகைப்படம் எடுக்க வேண்டும்.

ஒருவேளை நீங்கள் முதன்முதலில் இந்த வசதியை பயன்படுத்துபவராக இருந்தால் வேர்ட் லென்ஸ் என்பதை டவுன்லோடு செய்யும்படி அறிவுறுத்தும். எனவே அதை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்

மேலும் கூகுள் மொழிபெயர்ப்பு செயலியில் தமிழ் மற்றும் பெங்காலி மொழிகளுக்கு கூடுதலாக ஒரு வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதன்படி நீங்கள் மைக் மூலம் தமிழ் மொழியை பேசினால் அது பெங்காலி மொழிக்கும், பெங்காலியில் பேசினால் தமிழ் மொழிக்கும் மொழிபெயர்க்கும். இந்த வசதி ஏற்கனவே இந்தி மொழிக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
The Google Translate app gets features such as offline translation, instant visualization and more for both Android and iOS.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X