Home
Apps

காசுக்காக இப்படி இறங்கிடீங்களே.. Gemini AI பற்றிய உண்மையை உளறிய Google அதிகாரி.. சில நாட்களில் வருது?

குருநாதா.. நீங்க இங்கயும் வந்துடீங்களா என்று கூகுள் (Google) நிறுவனத்தை பார்த்து "மறுபடியும்" கேட்கும் படியாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே கூகுள் நிறுவனமானது அதன் ஏஐ ஓவர்வியூஸ் பதில்களுக்கு (AI Overviews answers) கீழேயும், மேலேயும் விளம்பரங்களையும், விளம்பரதாரர் ஆதரவு பெற்ற சேர்ச் ரிசல்ட்களையும் (Search Result) காட்டி வருகிறது.

இது "கூகுள் சேர்ச்சில் தான் விளம்பரம் வருகிறது என்று பார்த்தால், கூகுளின் ஏஐ ஓவர்வியூஸ் ஆன்சர்களிலும் கூட விளம்பரமா? என்கிற விமர்சனத்தை எழுப்பி இருந்தது. இதற்கிடையில் கூகுள் நிறுவனம் அதன் ஏஐ மோட்டிலும் (AI Mode) கூட விளம்பரங்களை சோதித்து வருவதாக கடந்த கால அறிக்கைகள் சுட்டிக்காட்டி உள்ளன.

Gemini AI பற்றிய உண்மையை உளறிய Google அதிகாரி.. சில நாட்களில் வருது?

தற்போது எல்லாவற்றிற்கும் மேலாக - ​​இந்நிறுவனம் தனது கான்வர்ஷேஷனல் ஏஐ அசிஸ்டென்ட் ஆன ஜெமினி ஏஐ ஆப்பில் (Gemini AI App) விளம்பரங்களை கொண்டுவரத் தயாராகி வருவதாக தெரிகிறது. கூகுளின் காலாண்டு வருவாய் மாநாட்டு கூட்டத்தின் போது, நிறுவன நிர்வாகி ஒருவர், நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம், இந்த ஆப்பில் விளம்பரங்களை காட்ட கூகுள் நிறுவனம் தயாராகி வருவதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம் ஆல்ட்மேன் (Sam Altman) தலைமையிலான ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனமானது தனது ஏஐ-பவர்டு சாட்பாட் ஆன சாட்ஜிபிடி-யில் (ChatGPT) தரவரிசைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை வெளியிட தொடங்கியதாக அறிவித்த சில மாதங்களுக்கு பிறகு கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பிசினஸ் இன்சைடரின் சமீபத்திய அறிக்கையின்படி, கூகுள் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் குறித்த மாநாட்டு அழைப்பின் போது, ​​கூகுளின் தலைமை வணிக அதிகாரி (CBO) ஆன பிலிப் ஷிண்ட்லர், ஜெமினி ஏஐ ஆப்பில் விளம்பரங்களையும் ஸ்பான்சர் செய்யப்பட்ட முடிவுகளையும் (sponsored results) கொண்டு வருவதற்கு கூகுள் நிறுவனம் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும் அவர் ஜெமினி ஏஐ ஆப்பில் விளம்பரங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டால், அது "ஜெமினியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்" என்று கூறியதாகவும் பிசினஸ் இன்சைடரின் அறிக்கை குறிப்பிடுகிறது. சுவாரஸ்யமாக, கூகுள் நிறுவனம் ஏற்கனவே இந்தியா, இந்தோனேசியா, கென்யா, மலேசியா, நியூசிலாந்து, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில், மொபைல் மற்றும் டெஸ்க்டாப் டிவைஸ்களில் ஏஐ ஓவர்வியூஸ் சேர்ச் முடிவுகளில் ஆங்கிலத்தில் விளம்பரங்களை காட்டி வருகிறது

அதாவது ஒரு பயனரின் தேடலின் அடிப்படையில், ஏஐ ஓவர்வியூ கன்டென்ட் உடன் சேர்த்து விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. தற்போது, ஏஐ ​​ஓவர்வியூஸ் ஆனது ஏற்கனவே உள்ள சேர்ச் ரிசல்ட்களிலிருந்து டெக்ஸ்ட் மற்றும் ஷாப்பிங் விளம்பரங்களையும், அத்துடன் "ஷாப்பிங் மற்றும் செயல்திறன் அதிகரிப்பு" பிரச்சாரங்களையும் காட்டுகின்றன.

கூகுள் நிறுவனம் அதன் ஜெமினி ஏஐ ஆப்பில் விளம்பரங்களை வெளியிட்டால், அது அமெரிக்காவை சேர்ந்த ஏஐ ஜாம்பவானான ஓப்பன்ஏஐ நிறுவனத்துடன் நேரடியாக போட்டியிடக்கூடும். முன்னரே குறிப்பிட்டபடி - கடந்த பிப்ரவரியில், சாம் ஆல்ட்மேன் தலைமையிலான இந்த தொழில்நுட்ப நிறுவனம், அமெரிக்காவில் உள்ள ப்ரீ மற்றும் கோ யூசர்களுக்காக, தனது ஏஐ ஆதரவுடைய சாட்ஜிபிடி சாட்பாட்டில் விளம்பரங்களை வெளியிட தொடங்கியதாக அறிவித்தது.

இதை அறிவிக்கும்போது, ​​விளம்பரப்படுத்தப்பட்ட பரிந்துரைகள் சாட்ஜிபிடி-யின் ஏஐ உருவாக்கிய பதில்களை "பாதிக்காது" என்றும் அந்நிறுவனம் கூறியது. முன்னதாக சாட்ஜிபிடி விளம்பரங்கள் ஆனது லாக்-இன் செய்த வயது வந்த பயனர்களுக்கு மட்டுமே காட்டப்பட்டன, ஆனால் இப்போது 18 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கும் தோன்றுகின்றன என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Google to Show Ads in Gemini AI app For Making More Money and Compete OpenAI ChatGPT Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X