ஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி! எப்படி என்று தெரியுமா?

|

மால்வேர் தாக்குதலுக்கு உள்ளாகும் பாதிக்கப்பட்ட பயன்பாடுகளிலிருந்து உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் கூகுள் நிறுவனம் தற்பொழுது புதிய பயன்பாட்டு பாதுகாப்பு கூட்டணியை அமைக்க சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

மால்வேர்களை தவிர்ப்பதற்கான சிறந்த வழி

மால்வேர்களை தவிர்ப்பதற்கான சிறந்த வழி

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் மால்வேர்களை தவிர்ப்பதற்கான சிறந்த வழி கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்வது தான். இருப்பினும், சில நேரங்களில் தீங்கிழைக்கும் மால்வேர்கள் மற்றும் மால்வேர் செயலிகளை நாம் தெரியாமல் பதிவிறக்கம் செய்துவிடுகிறோம்.

 மால்வேர்களை அகற்ற பல முயற்சி

மால்வேர்களை அகற்ற பல முயற்சி

கூகிள் நிறுவனம், அதன் பிளே ஸ்டோரில் உள்ள தீங்கிழைக்கும் செயலிகளை அகற்றப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் பயனர்களக்குக்கான பாதுகாப்பை அதிகரிக்கக், கூகுள் நிறுவனம் புதிய பாதுகாப்பு கூட்டணியை அமைத்துள்ளது.

வாட்ஸ்அப் புதிய அப்டேட்: இனி அந்த நோபடி ஆப்ஷன் கிடையாது!வாட்ஸ்அப் புதிய அப்டேட்: இனி அந்த நோபடி ஆப்ஷன் கிடையாது!

ஆப் டிஃபென்ஸ் சேவை

ஆப் டிஃபென்ஸ் சேவை

இந்த புதிய பாதுகாப்பு கூட்டணியைக் கூகுள் நிறுவனம், இஎஸ்இடி (ESET), லுக்அவுட் (Lookout) மற்றும் ஜிம்பெறியம் (Zimperium) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அமைத்துள்ளது. இந்த நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்படும் ஆப் டிஃபென்ஸ் சேவை கூகுள் பிளே ஸ்டோரின் ஸ்கேன் டூல் உடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான பாதுகாப்பு

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான பாதுகாப்பு

இதன் மூலம் கூகுள் பிளே ஸ்டோரில் மால்வேர் செயலிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படும் என்றும், பயனர்கள் மால்வேர் பயன்பாடு செயலிகளைப் பதிவிறக்கம் செய்யாமல், பாதுகாப்பான செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

425நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்.!425நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்.!

கூடுதல் கண்காணிப்பு

கூடுதல் கண்காணிப்பு

தற்பொழுது கூகுள் பிளே ஸ்டோரின் பாதுகாப்பிற்கு பிளே ப்ரொடெக்ட் சேவை உள்ளது. இந்த ஆப் டிஃபென்ஸ் சேவையின் மூலம் பயனர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றும், புதிய செயலிகளைக் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிடும் பொழுது, இந்நிறுவனங்கள் இன்னொரு கண்களாக இருந்து பிளே ஸ்டோர் தளத்தைக் கண்காணிக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Google Set's App Defense Alliance In Partnership With Security Firms ESET, Lookout, and Zimperium : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X