Home
Apps

Google Search யூஸ் பண்ணுவீங்களா? கிரியேட்டர்களுக்கு வெச்சான் பாரு ட்ரீட்.. புது அப்டேட்!

இன்டர்நெட் உலகத்தை பயன்படுத்தும் கோடிக்கணக்கான மக்களுக்கு துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களை கொண்டு சேர்க்கும் வகையில், கூகுள் (Google) நிறுவனமானது, அதனுடைய சர்ச் என்ஜினில் (Search Engine) புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இன்டர்நெட்டில் ஆர்டிகிள்கள், நியூஸ், ரிசர்ச் ரிப்போர்ட் மற்றும் பல்வேறு கன்டென்ட்களை உருவாக்கும் கிரேயேட்டர்கள் (Creators) மற்றும் பப்ளிஷர்களுக்கு (Publishers) தங்களை பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்களை வாசர்களுக்கு தெரிவிக்கும் வகையில் ப்ரொஃபைல் (Profile) பக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

டிஜிட்டல் காலத்தில் போலி செய்திகளும், ஏஐ (AI) மூலம் உருவாக்கப்படும் தரம் குறைந்த கன்டென்ட்களும் அதிகரித்து வரும் நேரத்தில், வாசகர்களுக்கு உண்மையான, தகுதியான நபர்களால் எழுதப்பட்ட தரமான ஆர்டிகிள்களை அடையாளம் காட்ட இந்த அம்சம் பெரிதும் உதவ இருக்கிறது. இந்த புதிய ப்ரொஃபைல் பீச்சரின் நோக்கம் என்ன?

Google Search யூஸ் பண்ணுவீங்களா? கிரியேட்டர்களுக்கு வெச்சான் பாரு!

இன்டர்நெட்டில் நாம் ஏதேனும் ஒரு முக்கியமான உடல்நலம் சார்ந்த குறிப்பையோ, நிதி ஆலோசனையையோ அல்லது அரசியல் செய்தியையோ தேடும்போது, அதை எழுதியவர் யார் என்ற கேள்வி நம் மனதில் எழுவது இயல்பானதாகும். ஒரு குறிப்பிட்ட துறையில் அனுபவமும் நிபுணத்துவமும் வாய்ந்த ஒருவர் எழுதிய கட்டுரைக்கு இருக்கும் மதிப்பு, பெயரே தெரியாத ஒருவர் எழுதும் கட்டுரைக்கு இருப்பதில்லை.

ஆகவே, வாசகர்களின் இந்த தேவையைப் புரிந்துகொண்டு, கூகுள் சர்ச்சில் வரும் கன்டென்ட்களுக்கு பின்னால் இருக்கும் கிரியேட்டர்கள் மற்றும் பப்ளிஷர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதே இந்த புதிய பீச்சரின் முக்கிய நோக்கமாகும். கிரியேட்டர்கள் மற்றும் பப்ளிஷர்களை தங்களுக்கென உருவாக்கி கொள்ளும் சுய விவரங்களை இதில் இணைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது:

கிரியேட்டர்கள் மற்றும் பப்ளிஷர்களின் கல்வி தகுதி, அவர்களது துறை, அவர்களின் பணி அனுபவம் மற்றும் அவர்கள் பெற்றுள்ள விருதுகள் போன்ற விவரங்களை இதில் சேர்க்கலாம். அவர்கள் வெவ்வேறு இணையதளங்கள், செய்தி நிறுவனங்கள் அல்லது சொந்த பிளாக்குகளில் (Blogs) எழுதிய சிறந்த ஆர்டிகிள்களின் லிங்க்குகளை (Links) ஒரே இடத்தில் தொகுத்து வழங்கி கொள்ளலாம்.

சமூக ஊடக கணக்குகள் (Social Media Accounts): எக்ஸ் (X - ட்விட்டர்), லிங்க்டுஇன் (LinkedIn), இன்ஸ்டாகிராம் போன்ற தங்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களை இதனுடன் இணைக்கலாம். இதன் மூலம் அவர்களின் உண்மைத்தன்மை வெளிப்படுகிறது. ஆகவே, ஏதேனும் ஒரு தலைப்பை தேடிப் படிக்கும்போது, அந்த கட்டுரையின் ஆசிரியரின் பெயருக்கு அருகில் இந்த ப்ரொஃபைல் பக்கத்திற்கான லிங்க் தோன்றும்.

அதை க்ளிக் செய்வதன் மூலம் தாங்கள் படிக்கும் விவரங்களை கொடுத்தது யார், அந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவரா அவர் என்பதை உடனடியாக அறியலாம். இந்த ப்ரொபைல் பீச்சர் தற்போது முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது. அமெரிக்காவில் முதல் கிடைத்துள்ளது. ஆகவே, ஆங்கில மொழி சார்ந்த கிரியேட்டர்கள் மற்றும் பப்ளிஷர்களுக்கு கிடைக்கிறது.

இது பீட்டா வெர்ஷன் என்னும் பரிசோதனை முறையில் (Beta Version) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆகவே, பல்வேறு கட்ட அப்கிரேட்கள் கொடுக்கப்பட்ட பிறகு மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும். ஆங்கிலம் மட்டுமல்லாமல், பிராந்திய மொழியிலும் ப்ரொபைல்களை உருவாக்க முடியும். இந்தியாவில் டிஜிட்டல் கன்டென்ட்டில் கிரியேட்டர்கள் மற்றும் பப்ளிஷர்களுக்கு பஞ்சமில்லை.

ஆகவே, இங்கு மிகப்பெரும் வரவேற்பை இந்த பீச்சர் பெற வாய்ப்புள்ளது. வெப் மட்டுமல்லாமல், குரோம் ஆப் வழியாக சர்ச் செய்தாலும் இந்த ப்ரொபைல் பீச்சரை பயன்படுத்த முடியும். இது நேரடியாக கூகுளில் தோன்றுவதால், சுய விவரங்களின் ஏதேனும் மாற்றம் செய்தாலும் உடனடியாக அப்டேட் செய்யப்பட்ட காண்பிக்கும். ஆகவே, உண்மையான கன்டென்ட்களுக்கு மதிப்பு கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Google Search Gets Search Profiles For Publishers Creators To Showcase Articles Videos Social Posts
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X