கூகுள் தேடல் பயன்பாட்டில் புதிய ஷார்ட்கட்ஸ்: பயன்படுத்துவது எப்படி.?

|

இந்திய ஆண்டராய்டு பயனர்களுக்கு கூகுள் தேடல் பயன்பாடானது இன்று முதல் சில சிறப்பான ஷார்ட்கட்ஸ்களை சேர்த்திருக்கிறது. இது பயனர்களுக்கு விரைவாகவும், சுலபமாகவும் பொருத்தமான தகவலைப் பெற உதவுகிறது. இந்த குறுக்குவழிகள் கருவிகளை விரைவாக அணுகவும் மற்றும் பயனர்கள் பயன்பாட்டில் உள்ள தலைப்புகளை ஆழமாக ஆராயவும் அனுமதிக்கிறது.

கூகுள் தேடல் பயன்பாட்டில் புதிய ஷார்ட்கட்ஸ்: பயன்படுத்துவது எப்படி.?

அதாவது, கிரிக்கெட் ஸ்கோர்கள், வானிலை, அருகிலுள்ள உணவகங்கள், ஏடிஎம், திரைப்பட நிகழ்ச்சி நேரங்கள் போன்றவற்றை விரைவாக அணுகலாம். என்னென்ன ஷார்ட்கட்ஸ்.? அவைகளை அணுகவது எப்படி.?

அம்புக்குறியை தட்டுவதன் மூலம்

அம்புக்குறியை தட்டுவதன் மூலம்

இந்த ஷார்ட்கட்ஸ்கள் கூகுள் ஆப் பயன்பாட்டின் முகப்புத் திரையிலேயே இடம்பெறுகின்றன. ஹோம் ஸ்க்ரீனில் அடிக்கடி பயன்படுத்தப்படும் நான்கு குறுக்குவழிகள் கட்சிப்படுத்தப்படும். மற்றவர்கள் வெறுமனே வலது பக்கத்தில் உள்ள சிறு அம்புக்குறியை தட்டுவதன் மூலம் ஷார்ட்கட்ஸ்களை காணலாம். கூகுள் வழங்கும் அனைத்து குறுக்குவழிகளையும் பார்க்க, வலதுபுறமாக ஸ்க்ரோலிங் செய்யலாம்.

நெருக்கமான கடைகள்

நெருக்கமான கடைகள்

மாபெரும் தேடல் நிறுவனமான கூகுள் - எரிவாயு நிலையங்கள், மருந்தகங்கள், கடைகள் ஆகியவற்றை அணுகவும் குறுக்குவழிகளைச் சேர்த்திருக்கிறது. உதாரணமாக, நீங்கள் அருகாமை கடைகள் என்ற விருப்பத்தை தத்துவதின் மூலம் எந்தெந்த திசைகளில், என்னென்ன எண்ணிக்கையில் கடைகள் உள்ளன போன்ற தகவல்கள் உட்பட உங்களுக்கு மிக நெருக்கமான கடைகள் பட்டியலிடப்படும்.

நேரடியாக பெறலாம்

நேரடியாக பெறலாம்

விமான டிக்கட்களுக்கான முன்பதிவு குறுக்குவழிகளை கூகுள் தேடல் பயன்பாட்டிலிருந்து நேரடியாக பெறலாம். உங்களின் எதிர்வரும் பயணங்கள் பற்றி விவரங்களை மை ட்ரிப்ஸ் காண்பிக்கும். வேடிக்கைகளுக்காக ஆப்பில் டிக்-டாக்-டூ, ரோலிங் டைஸ், சாலிட்டைர் ஆகியவைகளுக்கான குறுக்குவழிகள் உள்ளன. மேலும் ஒரு ஃபிட்ஜெட் ஸ்பின்னரையும் நீங்கள் முயற்சி செய்யலாம்.

கிரிக்கெட் ஸ்கோர்

கிரிக்கெட் ஸ்கோர்

இந்த ஷார்ட்கட்ஸ் மூலம் கிரிக்கெட் ஸ்கோர்களை மிக விரைவாக அணுகலாம் என்பது சிறப்பம்சம். கடந்த கால கிரிக்கெட் ஸ்கோர், கிரிக்கெட் செய்திகள் மற்றும் ஐசிசி அணிக்கான தற்போதைய தரவரிசைகளையும் உள்ளடக்கியுள்ளது. உடன் ஆட்டத்தின் புள்ளிவிவரங்களையும் கூகுள் ஆப் காண்பிக்கும்.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே

கூகுள் தேடல் பயன்பாட்டின், கூகுள் மொழியாக்கத்திற்க்கும் ஷார்ட்கட் குஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 10 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பைப் பெறுவதற்கும் குறுக்குவழிகளை பயன்படுத்தப்படலாம். கூகுளின் இந்த குறுக்குவழிகள் சார்ந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

புதுப்பிக்க வேண்டும்

புதுப்பிக்க வேண்டும்

இந்த புதிய அம்சத்தை பெற, பயனர்கள் தங்கள் கூகுள் பயன்பாட்டைப் புதுப்பிக்க வேண்டும். இந்த குறுக்குவழிகளை சேர்ப்பதற்கான விளக்கத்தில் "கூகுள் தேடல் சார்ந்த அப்டேட்ஸ்களை மொபைலுக்கு நகர்த்துவதன் மூலம், பயனர்கள் தங்கள் தேடல் பயன்பாட்டை பொருத்தமாகவும் வசதியாகவும் பயன்படுத்துவதை கூகுள் உறுதி செய்யுள்ளது" என்று கூகுள் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Google Search app adds new shortcuts: Here’s how to use these. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X