இண்டர்நெட் டேட்டாக்களை மிச்சப்படுத்த கூகுள் அறிமுகம் செய்துள்ள புதிய செயலி.!

By Siva
|

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் ஒரே கவலை இண்டர்நெட் டேட்டா தாறுமாறாக செலவாகின்றதே என்பதும் அதற்கென்றே ஒரு தனி பட்ஜெட் செலவு செய்ய வேண்டும் என்பதுதான்.

கூகுள் அறிமுகம் செய்துள்ள புதிய டேட்டா செயலி.!

இந்த நிலையில் டேட்டா செலவை கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. டிரையாங்கிள் (Triangle) என்று அழைக்கப்படும் இந்த செயலி தேவையில்லாமல் மறைமுகமாக செலவாகி கொண்டிருக்கும் டேட்டாக்களை கட்டுப்படுத்தி அதிக டேட்டா செலவில் இருந்து நம்மை காக்கின்றது. ஆனால் இந்த செயலி தற்போதைக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய வசதி பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு பயன் அளிக்கத்தக்க வகையில் இருக்கும். குறிப்பிட்ட அளவு டேட்டா ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்த செயலி மிக முக்கியம். மேலும் ஒரு குறிப்பிட்ட டேட்டா அளவை கடந்தவுடன் டேட்டா வேகம் குறைந்து காணப்படும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த செயலி கண்டிப்பாக தேவைப்படும்.

உங்கள் உங்களுக்கே தெரியாமல் பின்புலத்தில் இயங்கி கொண்டிருக்கும் ஒருசில டேட்டாக்களை இந்த செயலி கட் செய்து உங்களுடைய டேட்டாவை மிச்சப்படுத்தும்

முதலில் நீங்கள் இந்த செயலியை இன்ஸ்டால் செய்தவுடன் உங்களுடைய மொபைல் நம்ப்ரை கூகுளின் டிரையாங்கிள் செயலி கேட்கும். பின்னர் நம்பரை உறுதி செய்தவுடன் உங்களுக்கு சில டேட்டாக்களை இலவசமாகவே வழங்கும். அதாவது அதிகபட்சமாக 100MB வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

முதல்கட்ட பிராசஸ் முடிந்துவ்டன் உங்களுக்கு எவ்வளவு டேட்டா இலவசமாக கிடைத்துள்ளது என்ற தகவல் காண்பிக்கும். மேலும் இந்த டிரையாங்கிள் செயலி உங்கள் மொபைலில் உள்ள எந்த செயலி அதிக டேட்டாக்களை சாப்பிடுகிறது என்பதையும் எந்த செயலி டேட்டாவை குறைவாக எடுத்து கொள்கிறது என்பதையும் உடனே உங்களுக்கு தெரியப்படுத்தும் மேலும் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு கிடைக்கும் டேட்டா எவ்வளவு, இதுவரை எவ்வளவு டேட்டா பயன்படுத்தி உள்ளீர்கள், எவ்வளவு டேட்டா மீதம் இருக்கின்றது என்ற விபரத்தையும் இந்த டிரையாங்கிள் செயலி உங்களுக்கு தெரிவிக்கும்

மேலும் இந்த செயலியை நீங்கள் கூகுள் மூலமோ அல்லது கூகுள் குரோம் பிரெளசர் மூலமோ பயன்படுத்தினால் உங்களுக்கு மேலும் சில ரிவார்டுகள் கிடைக்கும். தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மட்டுமே செயல்பட்டு வரும் இந்த செயலி வெகுவிரைவில் உலகின் பிற நாடுகளுக்கும் அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Google has introduced a new app called The Triangle, which aims to better manage mobile data usage and block unwanted background data.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X