Home
Apps

பெண்களை கண்காணிக்கும் மொபைல் அப்ளிகேஷன்-நீக்க கூகுள் மறுப்பு.!

பெண்களை கண்காணிக்கும் மொபைல் அப்ளிகேஷன் கூகுள் நிறுவனத்தால், வழங்கப்பட்டுள்ளது. இதை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதை கூகுள் நிறுவனம் நீக்க மறுத்து தெரிவித்துள்ள

பெண்களை கண்காணிக்கும் மொபைல் அப்ளிகேஷன் கூகுள் நிறுவனத்தால், வழங்கப்பட்டுள்ளது. இதை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

பெண்களை கண்காணிக்கும் மொபைல் அப்ளிகேஷன்-நீக்க கூகுள் மறுப்பு.!

இதை கூகுள் நிறுவனம் நீக்க மறுத்து தெரிவித்துள்ளது. இதனால் தற்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அப்ஷர் ஆப்:

அப்ஷர் ஆப்:

பெண்களை கண்காணிப்பதற்காக அப்ஷர் என்ற ஆப் இருக்கின்றது. இதை வைத்து ஆண்கள் துணையில்லாமல் செல்லும் பெண்கள் குறித்தும், அவர்கள் எங்கு செல்கின்றார்கள், என்ன செய்கின்றார்கள் உள்ளிட்ட தகவல்கையும் ஆண்கள் பெற முடியும்.

தப்பியோடிய பெண்கள்:

தப்பியோடிய பெண்கள்:

சவூதியில் பெண்கள், ஆண் பாதுகாவலரின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணிக்கக் கூடாது என்ற விதி உள்ளது. சமீப காலங்களில் அரச குடும்பப் பெண் உள்பட சில பெண்கள் அங்குள்ள கடும் கட்டுப்பாட்டால் நாட்டை விட்டு தப்பினர்.

மொபைல் அப்ளிகேஷன்:

மொபைல் அப்ளிகேஷன்:

ஒருசிலர் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் ஆண் பாதுகாவலரின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் சவுதியில் அப்ஷர் (Absher) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசின் மொபைல் அப்ளிகேஷன் அறிமுகமானது.

 எஸ்எஸ்எம் அனுப்பும் வசதி:

எஸ்எஸ்எம் அனுப்பும் வசதி:

அதில் பெண்களின் பாஸ்போர்ட் எண்கள் இணைக்கப்பட்டிருக்கும். பெண்கள் பாஸ்போர்டைப் பயன்படுத்தும் போது, அவர்களின் ஆண் பாதுகாவலருடைய மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வகையில் அந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் மறுப்பு:

கூகுள் நிறுவனம் மறுப்பு:

பெண் சுதந்திரத்துக்கு எதிரான இதை நீக்குமாறு அமெரிக்க எம்பிக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அது தங்களுடைய ஆப் கொள்கை விதிமுறைகளை மீறவில்லை என கூகுள் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை.

Best Mobiles in India

English summary
google reportedly refuses to remove absher app which lets saudi men track women in their family : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X