Android ஸ்மார்ட்போன் பிராண்ட்களால் பயன்படுத்தப்பட்ட பிரபலமான அப்ஸ்-ஐ நீக்கம் செய்த கூகிள்!

|

சியோமி மற்றும் ரியல்மி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த செய்தி சற்று மனவருத்தத்தைத் தரலாம். காரணம், ஆண்ட்ராய்டு பயன்பாடுகளில் மிகவும் பிரபலமான பெஞ்ச்மார்க்கிங் பயன்பாடுகளில் ஒன்றான அன்டுட்டு (Antutu) எனப்படும் ஒரு முக்கிய பயன்பாடு அப்ஸ்-ஐ கூகிள் தனது பிளே ஸ்டோர் பக்கத்திலிருந்து நீக்கம் செய்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் என்னவென்று தெரியுமா?

பெஞ்ச்மார்க்கிங் பயன்பாட்டு செயலி

பெஞ்ச்மார்க்கிங் பயன்பாட்டு செயலி

சியோமி மற்றும் ரியல்மி போன்ற பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பிராண்டுகளால் இந்த பெஞ்ச்மார்க்கிங் பயன்பாட்டு செயலி பயன்படுத்தப்படுகிறது. அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தங்கள் செயல்திறனைக் காட்ட, அன்டுட்டு மதிப்பெண்களைப் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப் பயன்படுத்துகின்றது.

அன்டுட்டு (Antutu)

அன்டுட்டு (Antutu)

அன்டுட்டு மட்டுமின்றி, கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து அன்டுட்டு பிராண்டிங்கைக் சேர்ந்த இன்னும் இரண்டு பெஞ்ச்மார்க்கிங் பயன்பாடுகளையும் கூகிள் நீக்கம் செய்துள்ளது. அண்ட்ராய்டு போலீஸ் அறிக்கையின்படி, சீட்டா மொபைலில் இருந்து பயன்பாடுகளில் பெரும் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகக் கூகிள் அனைத்து அன்டுட்டு பயன்பாடுகளையும் அகற்றியுள்ளது.

மூன்று மிகப் பிரபலமான ஆப்ஸ் நீக்கம்

மூன்று மிகப் பிரபலமான ஆப்ஸ் நீக்கம்

கூகிள் நிறுவனம் அன்டுட்டு பெஞ்ச்மார்க், அன்டுட்டு 3D பெஞ்ச் மற்றும் அன்டுட்டு பெஞ்ச்மார்க் ஆகிய மூன்று மிகப் பிரபலமான பயன்பாடுகளைத் தனது கூகிள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. இறுதியாக இந்த பயன்பாட்டுச் செயலி பிப்ரவரி 22, 2020 வரை பிளே ஸ்டோரில் இருந்துள்ளது என்று வலைத்தள தகவல்கள் தெரிவிக்கிறது.

கூகிள் பிளே ஸ்டோரில் no result found

கூகிள் பிளே ஸ்டோரில் no result found

ஆனால் கூகிள் பிளே ஸ்டோரில் இப்போது இந்த பயன்பாடுகளைத் தேடும்போது 'no result found' என்று செய்தி வருகிறது. இருப்பினும் இந்த பிரபலமான பயன்பாடுகள் காணாமல் போனது குறித்து கூகிள் அல்லது சீட்டா மொபைல் நிறுவனம் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்று வலைத்தள தகவல் குறிப்பிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

600 பயன்பாடுகளை நீக்கம் செய்த கூகிள்

600 பயன்பாடுகளை நீக்கம் செய்த கூகிள்

சமீபத்தில், கூகிள் 600 பயன்பாடுகளை கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றியது, மேலும் அதன் விளம்பர பணமாக்குதல் தளங்களான கூகிள் ஆட்மொப் மற்றும் கூகிள் விளம்பர மேலாளரிடமிருந்தும் அவற்றைத் தடைசெய்திருக்கிறது. தடைசெய்யப்பட்ட பயன்பாடுகளில் பெரும்பாலானவை சீனா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவை என்றும் அவை ஆங்கிலம் பேசும் பயனர்களை இலக்காகக் கொண்டவை என்றும் Buzzfeed இன் அறிக்கை தெரிவிக்கிறது.

ஒழுங்குமுறை மிக முக்கியம்

ஒழுங்குமுறை மிக முக்கியம்

சீனாவின் சீட்டா மொபைல்ஸ் நிறுவனத்தின் 40-க்கும் மேற்பட்ட பயன்பாடுகளைக் கூகிள் நீக்கம் செய்துள்ளது. ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் இந்த பெஞ்ச்மார்க்கிங் பயன்பாடுகளைக் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

APK மாற்றம்

APK மாற்றம்

இருப்பினும், அன்டுட்டு தனது இணையதளத்தில் உள்ள பயன்பாடுகளுக்கான பதிவிறக்க APK இணைப்புகளை மாற்றியமைத்துள்ளதால், பிளே ஸ்டோரிலிருந்து பயன்பாடுகளை அகற்றியது குறித்து அன்டுட்டு கவனித்துள்ளது என்பது தெளிவாகிறது.

Best Mobiles in India

English summary
Google Removes Most Popular Benchmarking Antutu Apps From Play Store : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X