ஆபாச மால்வேர் தாக்கிய 60 கேம்களை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்

|

ப்ளே ஸ்டோரில் குழந்தைகளுக்கான 60 கேம்களில் ஆபாசமான மால்வேர் தாக்கம் இருப்பதாக, பாதுகாப்பு ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்ததால், அவற்றை கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த செக் பாயிண்ட் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், இந்த மால்வேரை முதன் முதலாக கண்டறிந்துள்ளது.

ஆபாச மால்வேர் தாக்கிய 60 கேம்களை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகு

அவர்கள் கூறுகையில், அடல்ட்ஸ்வைன் என்று அழைக்கப்படும் இந்த மால்வேர், ஆபாசமான படங்களைக் காட்டி பாதுகாப்பிற்கான சாஃப்ட்வேரைப் போன்ற போலியைப் பயனர்கள் பதிவிறக்கம் செய்ய ஊக்கப்படுத்தும் விளம்பரம் போலத் தெரிகிறது.

இந்த ஆராய்ச்சி குழுவினரைப் பொறுத்த வரை, மேற்கூறிய தீங்கு விளைவிக்கக்கூடிய அப்ளிகேஷன்களின் மூலம் ஏற்படக் கூடிய 3 அழிவுகள் பின்வருமாறு:

இந்த வலைத்தளத்தில் அடிக்கடி காட்டப்படும் விளம்பரங்கள் மிகவும் பொருத்தமற்றதாகவும் ஆபாசமானதாகவும் உள்ளது.

இதன்மூலம் பயனர்களை ஏமாற்றி போலியான பாதுகாப்பு தொடர்பான அப்ளிகேஷன்களை நிறுவ செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பிரிமியம் சேவைகளைப் பெறுவதற்கு பயனர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பயனர்களைத் தூண்டிவிடுவதும் உட்படுகிறது.

அதே நேரத்தில், மேற்கூறிய மால்வேர் அப்ளிகேஷன் சாதனத்தில் நிறுவிய பிறகு, ஒரு முறை பூட் ஆகும் வரை அல்லது திரையைப் பயனர் திறக்கும் வரை காத்திருந்த பிறகே, அது ஒரு மால்வேர் செயல்பாடு என்பது தெரிய வருகிறது.

இது குறித்து அறிந்த கூகுள் நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த அப்ளிகேஷன்களை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது. இது குறித்து ஃபைனான்ஸியல் டைம்ஸில் கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறியிருப்பதாவது, "ப்ளே ஸ்டோரில் இருந்து அந்த அப்ளிகேஷன்களை நாங்கள் நீக்கியதோடு, டெவலப்பர்களின் கணக்குகளையும் முடக்கியுள்ளோம்.

மேலும் அவற்றை நிறுவியுள்ளவர்களுக்கு, இது குறித்த கடும் எச்சரிப்புகளைத் தொடர்ந்து காட்டுவோம். பயனர்களைப் பாதுகாப்பிற்கு உதவிய செக் பாயிண்ட் நிறுவனத்தின் பணியை நாங்கள் பாராட்டுகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சனையினால் ஆண்ட்ராய்டு பாதுகாப்பில் எந்தொரு பாதிப்பும் ஏற்பட்டு, பயனர்களின் சாதனங்களும் பாதிக்கப்படாத வகையில் கூகுள் நிறுவனம் பராமரித்து கொண்டது. இந்த பாதிக்கப்பட்ட அப்ளிகேஷன்களை 3 முதல் 7 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கூகுள் ப்ளே டேட்டாவை மேற்கொள்காட்டி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

How To Increase the Speed of your Laptop (TAMIL)

இது குறித்து செக் பாயிண்ட் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "இந்த தீமை விளைவிக்கக் கூடிய ஆப்களைப் பதிவிறக்கம் செய்து, பிரிமியம் சேவைகளுக்கான கட்டணத்தை வசூலிக்க, பயனர்களை ஊக்கப்படுத்துவதோடு, தேவைப்படும் முக்கிய ஆவணங்களையும் அடல்ட்ஸ்வைன் திருடி விடுகின்றன" என்றனர்.

இந்த அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்த உடனே, டெவலப்பர்களின் கமெண்ட் மற்றும் கண்ட்ரோல் சர்வரைத் தொடர்பு கொள்ளும் இந்த மால்வேர், பாதிக்கப்பட்ட சாதனத்தின் டேட்டாக்களை அனுப்பி வைத்து, அடுத்தப்படியாக செய்ய வேண்டிய காரியங்களுக்கான அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொள்ளும்.

சூப்பர் பட்ஜெட் விலையில் சியோமி ரெட்மீ 5-ன் இந்திய விற்பனை அறிவிப்பு.!சூப்பர் பட்ஜெட் விலையில் சியோமி ரெட்மீ 5-ன் இந்திய விற்பனை அறிவிப்பு.!

செக் பாயிண்ட்டைப் பொறுத்த வரை, மேற்கூறிய அறிவுறுத்தல்களில் போலியான விளம்பரங்களைக் காட்டுதல், போலியான பாதுகாப்பு அப்ளிகேஷன்களை நிறுவுமாறு பயனர்களைப் பயப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்காத அல்லது பெற்றாத சேவைகளுக்காக கட்டணம் வசூலிக்கப்படுவது உள்ளிட்டவை காணப்படும். தனது ஆராய்ச்சி இடுகையில், எல்லா பாதிக்கப்பட்ட அப்ளிகேஷன்களையும் செக் பாயிண்ட் பட்டியலிட்டு உள்ளது.

மேற்கூறிய இந்த அப்ளிகேஷன்கள் எப்படி ப்ளே ஸ்டோரை வந்தடைந்தன என்பது இன்னும் வியப்பிற்குரியதாக உள்ளது. ஏனெனில் இந்த தளத்தில், கூகுள் ப்ளே பாதுகாப்பு ஒருங்கிணைப்பு என்று அழைக்கப்படும் ஒரு பாதுகாப்பு அம்சத்தை ஏற்கனவே கூகுள் வைத்துள்ளது. இந்த அம்சமானது எல்லா அப்ளிகேஷன்களையும் தொடர்ந்து சோதித்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் சாதனங்களை ஸ்கேன் செய்து, ஏதாவது தீங்கு விளைவிக்கக் கூடிய அப்ளிகேஷன்கள் இருந்தால் அவற்றை நீக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அபத்தமான பிரச்சனையின் இடையே, த வெர்ஜ் நிறுவனத்திற்கு கூகுள் அனுப்பிய ஒரு அறிக்கையில், "ப்ளே ஸ்டோரில் ஒரு குடும்ப தேர்வு கூட காணப்படுகிறது. இதன்மூலம் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற அப்ளிகேஷன்களை நிர்வகிக்கும் ஒரு குடும்ப பாதுகாப்புத் திட்டமாக அமையும் குடும்ப லிங் மற்றும் வயதிற்கு ஏற்ற உள்ளடக்கத்தை கண்டறிய பெற்றோருக்கு உதவும்" என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து கூகுள் கூறுகையில், இந்நிறுவனமானது விளம்பரங்களை நேரடியாக மதிப்பாய்வு செய்து, குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான அனுபவத்தை அளிக்கும் வகையில் கண்டிப்பான பிரிவின் கீழ் சோதிக்கிறது. எனவே குடும்ப திட்டத்தின் கீழ் இந்த அப்ளிகேஷன்கள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Google has removed nearly 60 games, many of which were for children, from its Play Store after a security research firm found they were infected with a pornographic malware.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X