Home
Apps

Google எச்சரிக்கை.. குழந்தைகளை குறிவைக்கும் இந்த 3 ஆப்ஸை உடனே டெலீட் செய்யுங்கள்..

கூகிள் பிளே ஸ்டோரில் ஏராளமான பயன்பாடுகள் டவுன்லோட் செய்யக் கிடைக்கிறது. அதிலும் குழந்தைகளுக்கான கேமிங் பயன்பாடுகள் ஏராளமாகப் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. அப்படி, மூன்று பயன்பாடுகள் குழந்தைகள் சார்ந்த தரவைத் திருடியதாகக் குறிப்பிடப்பட்டு கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் ஒரு ஆப் உங்களிடம் இருந்தால் கூட, அதை உடனே டெலீட் செய்யுங்கள்.

கூகிள் பிளே ஸ்டோர் விதி

கூகிள் பிளே ஸ்டோர் விதி

கூகிள் பிளே ஸ்டோரில் ஒரு பயன்பாடு பதிவிறக்கத்திற்குக் கிடைப்பதற்கு முன்பு அது பலகட்ட சோதனைக்கு பின்பு, பாதுகாப்பானதாக அங்கீகரிக்கப்பட்ட பின்னரே பிளே ஸ்டோரில் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக கூகிள் நிறுவனத்தின் சில கட்டாய விதிகளை இந்த பயன்பாடுகள் பின்பற்றினால் மட்டுமே கூகிள் பிளே ஸ்டோரில் இடம் பிடிக்க முடியும்.

கூகிள் நிறுவனத்திற்கே சவாலாக இருக்கும் சிக்கல்

கூகிள் நிறுவனத்திற்கே சவாலாக இருக்கும் சிக்கல்

அதிலும் பயனர்களின் தகவலை எந்த பயன்பாடுகளும் கண்காணிக்கக் கூடாது என்ற முக்கிய விதி கடைப்பிடிக்கப்படுகிறது.இப்படி விதிகள் கடுமையாக இருக்கும் பொழுது கூட, சில நேரங்களில் கூகிள் பிளே ஸ்டோரில் சில தீங்கிழைக்கும் பயன்பாடுகளும் பதிவிறக்கத்திற்கு கிடைக்கிறது. இவை எந்த வழியில் உள்நுழைகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கூகிள் நிறுவனத்திற்கே சவாலாக உள்ளது.

கழுகு பார்வையிலிருந்து தப்பிக்கும் தீங்கிழைக்கும் ஆப்ஸ்

கழுகு பார்வையிலிருந்து தப்பிக்கும் தீங்கிழைக்கும் ஆப்ஸ்

இருப்பினும் பிளே ஸ்டோரில் இருக்கும் பயன்பாடுகளை கூகிள் கண்காணித்து வருகிறது. சந்தேகத்திற்குரிய பயன்பாடுகளை கூகிள் அடையாளம் காணும்பொழுது அவற்றை உடனடியாக நீக்கம் செய்கிறது.சில நேரங்களில், சில தீங்கு விளைவிக்கும் பயன்பாடுகள் கூகிளின் கழுகு பார்வையிலிருந்து தப்பி மறைந்துவிடுகிறது.

டிஜிட்டல் அக்கவுன்டபிலிட்டி கவுன்சில்

டிஜிட்டல் அக்கவுன்டபிலிட்டி கவுன்சில்

இப்படியான பயன்பாடுகளை அடையாளம் காண டிஜிட்டல் அக்கவுன்டபிலிட்டி கவுன்சில் (ஐடிசிஏ) உதவுகிறது. சமீபத்தில் இந்த கவுன்சில், குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மூன்று ஆப்ஸ்கள் பயனர்களிடமிருந்தும் தரவை சேகரிக்கின்றது என்பதைக் கண்டுபிடித்து, அது பற்றி கூகிள் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளது.

நீக்கம் செய்யப்பட்ட மூன்று ஆப்ஸ்

நீக்கம் செய்யப்பட்ட மூன்று ஆப்ஸ்

Princess Salon, Number Coloring மற்றும் Cats & Cosplay என்ற இந்த மூன்று ஆப்ஸ் தான் தற்பொழுது தீங்கு விளைவிக்கும் பயன்பாடுகளாக அடையாளம் காணப்பட்டு, கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆப்ஸ் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் அனைத்தும் மூன்றாம் தரப்பினருக்கு லீக் செய்யப்படுவதாக கவுன்சில் சந்தேகித்துள்ளது. இதன் காரணமாக இவை தற்பொழுது நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கூகிள் பிளே ஸ்டோர் விதியை மீறிய ஆப்ஸ்

கூகிள் பிளே ஸ்டோர் விதியை மீறிய ஆப்ஸ்

தீங்கு இளைக்கும் இந்த மூன்று ஆப்களும் எந்த வகையான தரவுகளை சேகரித்தது என்பதை கவுன்சில் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இருப்பினும், கூகிள் மற்றும் ஆப்பிள் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே குழந்தைகளின் தரவை சேகரிக்கும் பயன்பாடுகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தைகளின் தரவைச் சேகரிப்பதும், அவற்றை மூன்றாம் தரப்பினருடன் பகிர்வதும் விதியை மீறும் செயலாகும்.

உடனடியாக டெலீட் செய்யுங்கள்

உடனடியாக டெலீட் செய்யுங்கள்

இப்படி விதியை மீறும் பல பயன்பாடுகளை கூகிள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து இதற்கு முன்பும் நீக்கம் செய்துள்ளது. குழந்தைகளின் தரவுகளை சேகரித்த காரணத்திற்காக இந்த பயன்பாடுகள் தற்பொழுது கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் ஒரு பயன்பாடு கூட உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் அவற்றை உடனடியாக டெலீட் செய்யுங்கள் என்று கூகிள் அறிவுறுத்தியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Removes 3 Apps For Kids From Play Store And Advised To Uninstall Them Immediately : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X