பில்லிங் மோசடியை உருவாக்கும் 11 ஆப்ஸ்களை நீக்கம் செய்த கூகிள்! உடனே டெலீட் செய்யுங்கள்!

|

மிகவும் ஆபத்தான கடினமான ஆண்ட்ராய்டு தீம்பொருளில் என்று அழைக்கப்படும் மால்வேர் தான் ஜோக்கர் மால்வேர். இந்த மால்வேரின் பெயர் மட்டும் தான் வேடிக்கையானது, ஆனால் இதனுடைய செயல்கள் எல்லாம் ஆண்ட்ராய்டு போன்களுக்கு வில்லனைப் போன்றது. கூகிளின் ஆப் ஸ்டோரான கூகிள் பிளே ஸ்டோரில் இந்த மால்வேர் மீண்டும் திரும்பியுள்ளது.

செக் பாயிண்ட்

பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான செக் பாயிண்ட் கூறுவது போல், ஜோக்கர் அதன் குறியீட்டில் சிறிய மாற்றங்களை மேற்கொண்டு அதன் விளைவாகக் கூகிள் பிளே ஸ்டோரில் எதேனும் ஒரு வழியைக் கண்டுபிடித்துத் தொடர்ந்து பல காலமாக ஊடுருவி வருகிறது. இந்த சிறிய மாற்றங்கள் ஜோக்கர் மால்வேரை பிளே ஸ்டோரின் பாதுகாப்பு மற்றும் சோதனைத் தடைகளைத் தாண்டிச் செல்ல உதவுகின்றது.

 ஜோக்கர் மால்வேர்

இந்த முறை ஜோக்கர் மால்வேருக்குப் பின்னால் உள்ள ஹேக்கர்கள், கூகிளிடமிருந்து தவிர்ப்பதற்காக PC அச்சுறுத்தல் நிலப்பரப்பில் இருந்து ஒரு பழைய நுட்பத்தைப் பின்பற்றியுள்ளது. இந்த சிறிய மாற்றம், தீங்கிழைக்கும் இந்த தீம்பொருளை பயனர்கள் பயன்படுத்தியதும் பிரீமியம் சேவைகளுக்குச் சந்தா கட்டணத்தை அவர்களுக்கே தெரியாமல் வசூலிக்கிறது.

இனி உங்கள் வாகனம் பஞ்சர் ஆன கவலை வேண்டாம்.! வருகிறது தரமான சியோமி சாதனம்.!இனி உங்கள் வாகனம் பஞ்சர் ஆன கவலை வேண்டாம்.! வருகிறது தரமான சியோமி சாதனம்.!

 பில்லிங் மோசடி

பயனர்களுடைய கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளிலிருந்து பணத்தை எடுத்த பின்னர் தான் பயனர்களுக்கு நோட்டிபிகேஷன் செல்கிறது. இதனால் இந்த மால்வேர் பில்லிங் மோசடிக்கு வழிவகுக்கிறது. கூகிள் சமீபத்தில் 11 ஜோக்கர் பாதிக்கப்பட்ட பயன்பாடுகளை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்துள்ளது. இவை சுமார் 5,00,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட பயன்பாடுகள் என்பதால் உடனே நீங்களும் செக் செய்து உங்கள் போனிலிருந்து நீக்கிவிடுங்கள்.

பாதிக்கப்பட்ட 11 ஆப்ஸ்

பாதிக்கப்பட்ட 11 ஆப்ஸ்களையும் செக் பாயிண்ட் நிறுவனம் அடையாளம் கண்டு கூகிள் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளது. கூகிள் நிறுவனம் ஜோக்கர் மால்வேர் இருக்கும் தடயங்களை உறுதி செய்து தற்பொழுது பாதிக்கப்பட்ட 11 மொபைல் ஆப்ஸ்களையும் தனது கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்துள்ளது. கூகிள் நிறுவனம் இதற்கு முன்பும் ஜோக்கர் மால்வேரால் கடந்த 2017 ஆண்டு தாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரமாகக் கண்காணித்து வரும் கூகிள்

அப்போதிலிருந்தே, கூகிள் நிறுவனம் ஜோக்கர் மால்வேர் தாக்குதல்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மீண்டும் ஜோக்கர் மால்வேர் தன் வேலையை ஆண்ட்ராய்டு பயனர்களிடம் காட்ட துவங்கியுள்ளது. பிளே ஸ்டோரில் தற்பொழுது இந்த மால்வேர் 11 ஆப்ஸ்களுக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கூகிள் நிறுவனம் புதிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.

Google எச்சரிக்கை! உடனே இந்த 11 ஆப்ஸ்களை டெலீட் செய்யுங்கள் - ஜோக்கர் மால்வேர் அட்டாக்!Google எச்சரிக்கை! உடனே இந்த 11 ஆப்ஸ்களை டெலீட் செய்யுங்கள் - ஜோக்கர் மால்வேர் அட்டாக்!

உடனே நீக்கம் செய்யுங்கள்

ஜோக்கர் மால்வேரால் பதிக்கப்பட்டுள்ள 11 ஆப்ஸ்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம். இந்த பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு பயன்பாடு உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் கூட உங்களுக்கு ஆபத்து தான். ஆகையால், பாட்டியலில் உள்ள ஆப்ஸ்களை செக் செய்துவிட்டு, உங்கள் போனில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே அவற்றை நீக்கம் செய்யுங்கள் என்று கூகிள் அனைவரையும் எச்சரித்துள்ளது.

11 ஆப்ஸ்
 • Loving Message - com.peason.lovinglovemessage - காம்.பேஷன்.லாவ்விங்லவ்மெசேஜ்
 • Friend SMS - com.hmvoice.friendsms - காம்.எச்எம்வாய்ஸ்.பிரண்ட்ஸ்எம்எஸ்
 • Contact Message - com.contact.withme.texts - காம்.காண்டாக்ட்.வித்மீ.டெக்ஸ்ட்ஸ்
 • Compress Image - com.imagecompress.android - காம்.இமேஜ்கம்ப்ரெஸ். ஆண்ட்ராய்டு
 • App Locker - com.LPlocker.lockapps - காம்.எல்பிலாக்கர்.லாக்ஆப்ஸ்
 • உடனே டெலீட்
  • Recover File - com.file.recovefiles - காம்.பைல்.ரீகோவ்ஃபைல்ஸ்
  • Remind Alarm - Alarm & Timer & Stopwatch App -com.remindme.alram - காம்.ரிமைண்டமி.அலாரம்
  • Relaxation Message - com.relax.relaxation.androidsms - காம்.ரிலாக்ஸ்.ரிலாக்சேஷன்.ஆன்ட்ராய்டுஸ்எம்எஸ்
  • Cheery Message - com.cheery.message.sendsms -காம்.சீரி.மெசேஜ்.சென்ட்எஸ்எம்எஸ் (இரண்டு வெவ்வேறு இன்ஸ்டன்சஸ்)
  • Memory Game - com.training.memorygame - காம்.ட்ரைனிங்.மெமரிகேம்

Best Mobiles in India

English summary
Google Removed These 11 Apps From Play Store For Billing Fraud : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X