Google 3D விலங்குகளை வைத்து உங்கள் குழந்தைகளை குஷி படுத்தலாம்; எப்படி தெரியுமா?

|

கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த மோசமான நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர முக்கிய கட்டுப்பாடு நடவடிக்கையாகப் பல உலக நாடுகளில் ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இப்போது இருக்கும் பெரிய சவால்

இப்போது இருக்கும் பெரிய சவால்

இந்த மோசமான நிலையில் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் பெரியவர்கள் பலருக்கும் மன உளைச்சல் அதிகமாகியுள்ளது. பெரியவர்களுக்கே இந்த நிலை என்றால் ஓடியாடி விளையாடித் திரிந்த குழந்தைகளுக்குச் சொல்லவா வேண்டும், குழந்தைகளை வீட்டிற்குள் வைத்துப் பார்த்துக்கொள்வதென்பது பெற்றோர்களுக்கு இப்போது பெரிய சவாலாகவே மாறிவிட்டது. இவர்களைக் கருத்தில் கொண்டு கூகிள் நிறுவனம் புதிய அம்சத்தைக் குழந்தைகளுக்காக வெளியிட்டுள்ளது.

கூகிள் 3D ஹோலோகிராம்

கூகிள் 3D ஹோலோகிராம்

ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் குழந்தைகளை மகிழ்விக்க புதிய தொழில்நுட்ப அம்சத்தைக் கூகுள் தனது கூகிள் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கூகிள் 3D ஹோலோகிராம் என்ற இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் காட்டு விலங்குகளை நமது வீட்டிற்கே கூகிள் அழைத்து வந்துள்ளது.

அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!

காட்டு விலங்குகளை நமது வீட்டிற்கே வரவழைப்பது எப்படி?

காட்டு விலங்குகளை நமது வீட்டிற்கே வரவழைப்பது எப்படி?

இதன் மூலம் குழந்தைகளை சிறுது நேரம் மகிழ்விக்க முடியும். அதேசமயம், பெற்றோர்களும் சிறிது நேரம் ஓய்வு எடுக்க முடியும் என்று கூகிள் தெரிவித்துள்ளது.

  • உங்கள் ஸ்மார்ட்போனில் முதலில் கூகிள் பிரௌசர் ஓபன் செய்யுங்கள்.
  • கூகிள் தளத்தின் சர்ச் பார் சென்று ஏதேனும் ஒரு விலங்கின் பெயரை டைப் செய்யுங்கள். உதாரணமாக, புலி எனத் டாய் செய்து சர்ச் கிளிக் செய்யுங்கள்.
  • 3D விலங்கு

    3D விலங்கு

    • முதல் பக்கத்தில் விக்கிப்பீடியா விளக்கத்துக்குக்கீழ் புலியின் 3D உருவம் இடம் பெற்றிருக்கும். அதன் அருகில் கொடுக்கப்பட்டிருக்கும் View in 3D ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
    • இது 3D விலங்கு என்பதினால் உங்கள் விரல் அசைவுகளுக்கு ஏற்றவாறு அனைத்து பக்கத்திலும் இந்த படத்தை நீங்கள் திருப்பி பார்க்க முடியும்.
    • Xiaomi அட்டகாச அறிவிப்பு: ரூ.10,600-க்கு அறிமுகமாகிறதா பக்கா 5G போன்?Xiaomi அட்டகாச அறிவிப்பு: ரூ.10,600-க்கு அறிமுகமாகிறதா பக்கா 5G போன்?

      நீங்கள் இருக்கும் அறையிலேயே கட்டு விலங்கு

      நீங்கள் இருக்கும் அறையிலேயே கட்டு விலங்கு

      • உங்கள் வீட்டிற்குள் விலங்கை வரவழைக்க View in your space ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
      • கூகிள் பயன்பாட்டிற்கு உங்கள் மொபைல் கேமிரா ஆக்சஸ் அளிக்கவும்.
      • இதன் பின் உங்கள் கேமரா ஓபன் செய்யப்படும் நீங்கள் இருக்கும் அறையிலேயே இந்த விலங்கின் தோற்றம் தெரியும்.
      • இன்னும் என்ன என்ன விலங்குகள் இருக்கிறதோ?

        இன்னும் என்ன என்ன விலங்குகள் இருக்கிறதோ?

        இப்படி சிங்கம், புலி, கரடி, ஆடு, ஓநாய், பென்குயின் எனப் பல விலங்குகளை உங்கள் குழந்தைகளுக்காக வீட்டுக்கே அழைத்து வர முடியும். அடுத்து லிஸ்டில் என்ன விலங்கு இருக்கிறது என்று சோதனை செய்யலாம் வாங்க...

Best Mobiles in India

English summary
Google Released 3D Animal Feature To Engage Childrens During Lockdown : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X