கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் 42 தீங்கிழைக்கும் செயலிகள்(ஆப்) நீக்கம்!
கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் 42 தீங்கிழைக்கும் பயன்பாடுகளை நீக்கியுள்ளது. இந்த தீங்கிழைக்கும் பயன்பாடுகள் அனைத்தும் ஆண்ட்ராய்டு பயனர்களால் சுமார் 8 மில்லியன் முறை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் கூகுள் வெளியிட்டுள்ளது.

ஸ்லோவாக் இணையப் பாதுகாப்பு நிறுவனமான ESET, கூகிள் பிளே ஸ்டோரில் உள்ள 42 பயன்பாடுகள் ஜூலை 2018 முதல் இயங்கி வருகிறது என்று அடையாளம் கண்டுள்ளது. தீங்கிழைக்கும் இந்த 42 பயன்பாடுகளில் சுமார் 21 பயன்பாடுகள் இன்னும் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயன்பாடுகள் குறித்து, கூகுள் பாதுகாப்புக் குழுவிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. புகாரளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அனைத்து ஆப்களும் விரைவாக அகற்றப்பட்டன. இருப்பினும், இந்த பயன்பாடுகள் மூன்றாம் தரப்பு பயன்பாட்டுக்கா ஸ்டோர்களில் இன்னும் கிடைக்கின்றன" என்று ஆராய்ச்சியாளர்கள் வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்த வகை மால்வேர்களை, இந்த செயலிகள் விளம்பரங்கள் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் நுழையச் செய்து, உங்கள் தகவல்களை உங்களுக்குத் தெரியாமலே திருடி வருகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் ஆராய்ச்சியகர்கள் வெளியிட்டுள்ளனர். உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யும்படி இரண்டாம் முறையாகக் கூகுள் எச்சரித்து வெளியிட்டுள்ள 24 ஆப்ஸ்கள் இவைதான்.


Click it and Unblock the Notifications