கூகுள் பிளே மியூசிக்கின் அதிரடி சலுகை. இசை ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

Written By:

கூகுள் நிறுவனம் ஏராளமான சலுகைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு அள்ளித்தரும் நிலையில் தற்போது மேலும் சலுகையை அறிவித்துள்ளது.

கூகுள் பிளே மியூசிக்கின் அதிரடி சலுகை. இசை ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

இசை ரசிகர்களுக்காக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் பிளே மியூசிக், நான்கு மாதங்களுக்கு இலவச சேவை செய்யவுள்ளதாகவும், இந்த சலுகை புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும் என்றும் அறிவித்துள்ளது.

கூகுள் பிளே மியூசிக்கில் வாடிக்கையாளர்கள் அதில் உள்ள மியூசிக் லைப்ரரியில் 50,000க்கும் அதிகமான பாடல்களை கேட்டு மகிழலாம் என்பது தெரிந்ததே. ஆரம்பத்தில் 90 நாட்கள் அதாவது மூன்று மாதங்களுக்கு இலவசமாக இந்த மியூசிக்கை கேட்டு மகிழலாம் என்று அறிவித்திருந்த கூகுள் தற்போது மேலும் ஒரு மாதம் கூடுதலாக அதாவது நான்கு மாதங்களுக்கு இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

ஆனால் இந்த சலுகையை ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடையாது என்றும், புதியதாக இணையும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவித்துள்ளது.

நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகளும், அதற்காக கொடுக்கும் விலையும்.!

மேலும் கூகுள் பிளே மியூசிக் செயலியில் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் மூலம் உலகில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களையும் பயன்படுத்தலாம். ஆனால் அதே நேரத்தில் இலவச சேவை பெறுபவர்களுக்கு விளம்பரம் இடையில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை விளம்பரம் இல்லா சேவை தேவைப்படுபவர்கள் $10 கட்டினால் விளம்பரம் இல்லா இலவச சேவையை பெறுவது மட்டுமின்றி யூடியூப் ரெட் தளம் மூலம் மில்லியன் கணக்கான பாடல்களை டவுன்லோடு செய்து கொள்ளவும் வசதி உண்டு.

English summary
Google is offering an increased tenure of free subscription to new subscribers of Google Play Music.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot