கூகுள் ப்ளே மியூசிக்: வெறும் ரூ.89-ல் மில்லியன் கணக்கான பாட்டு கேட்க வேண்டுமா?

கூகுள் ப்ளே மியூசிக்கில் ரூ.89 மட்டும் செலுத்தி பாடல்களை கேளுங்கள்

By Siva
|

கடந்த ஆண்டு இசை ரசிகர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் கூகுள் நிறுவனம் 'கூகுள் பிளே மியூசிக்' என்ற புதிய வசதியை அறிமுகம் செய்தது. இந்த புதிய வசதி இந்தியர்களுக்கு மில்லியன்கணக்கான பாடல்களை வெறும் $0.02க்கு வழங்கி வந்தது.

கூகுள் ப்ளே மியூசிக்: வெறும் ரூ.89-ல் மில்லியன் கணக்கான பாட்டு கேட்க

மேலும் கூகுள் பிளே மியூசிக் ஆல் அக்சஸ் என்ற வசதி $9.99க்கு உள்ளது. ஆனால் இந்த வசதி இதுவரை இந்தியர்களுக்கு இல்லை. அமெரிக்கர்களுக்கு மட்டுமே இந்த வசதி உள்ளது. ஆனால் தற்போது இந்த வசதி இந்தியர்களுக்கு கிடைக்கும் வகையில் லட்சக்கணக்கான பாடல்களை கேட்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆப்பிள் மியூசிக் போன்று இனி கூகுள் மியூசிக்கையும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஒஎஸ் போன்களில் கேட்டு மகிழலாம்.

இந்த புதிய வசதி இந்தியர்களுக்கு முதல் 30 நாட்கள் டிரையல் வெர்ஷனாக இலவசமாக வழங்கப்படுகிறது. 30 நாட்களுக்கு பின்னர் ரூ.89 செலுத்தி இந்த வசதியை விரும்புபவர்கள் நிரந்தரமாக பெற்று கொள்ளலாம்.

இதற்கு முன்னர் கூகுள் பிளே ஒவ்வொரு பாடலுக்கும் ரூ.15 மற்றும் ஒரு ஆல்பத்தை பெற ரூ.100 என பெற்று கொண்டிருந்த நிலையில் இந்த ரூ.89 திட்டம் இந்தியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது.

மெஸ்ஸெஞ்சர் க்ரூப் மூலம் பணப்பரிவர்த்தனை.!

ஆப்பிள் மற்றும் பிற இசை நிறுவனங்கள் ரூ.120 மாதம் ஒன்றுக்கு பெற்று வரும் நிலையில் அதை ஒப்பிடும்போது இந்த தொகை மிகவும் குறைவு. மேலும் ஸ்டீரிம் செய்தோ டவுண்ட்லோடு செய்து வைத்து கொண்டு பாடல்களை நாம் ஆஃப்லைனிலும் கேட்டு கொள்ளும் வசதியும் இதில் உண்டு. மேலும் 30 நாட்கள் இலவச டிரையல் வெர்ஷன் என்பது கூடுதல் வசதி ஆகும்

மேலும் உங்களிடம் ஒரு கூகுள் அக்கவுண்ட் இருந்தால் நீங்கள் பாடல்களை அப்லோடும் செய்யலாம். அந்த வசதியும் இதில் உண்டு. எந்தவித கட்டணமும் செலுத்தாமல் நீங்கள் 50000 பாடல்கள் வரை அப்லோடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

லாவா இசெட்25 : விலை மற்றும் சிறப்பம்சங்கள்.!

மேலும் இந்த வசதியோடு உங்களுக்கு கூகுள் நிறுவனம் தரும் இன்னொரு புதிய வசதி வானொலி ஆகும். உங்களுக்கு விருப்பத்தின் வகைப்படி விதவிதமான பாடல்களையும் இசையையும் இந்த வானொலியில் நீங்கள் கேட்டு மகிழலாம்.

உங்களுடைய லொகேஷன்களுக்கு தகுந்த வானொலி சேனல்கள் இதில் கிடைக்கும் என்பதால் நீங்கள் விரும்பும் பாடல்கள் மிக எளிதில் கிடைக்கும். பிளே மியூசிக்கில் இதுவரை இருந்து வந்த ரூ.190 என்ற ஃபேமிலி பிளான் தற்போது இல்லை என்பதால் இந்த வானொலி திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது

இந்த வசதியை நீங்கள் பெறுவதற்கு உங்களுக்கு ஒரே ஒரு கூகுள் அக்கவுண்ட் இருந்தால் போது. அதில் நீங்கள் லாக்-இன் செய்து பின்னர் பிளே மியூசிக் இணையதளம் சென்று அதன் செயலியை நீங்கள் டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

இன்ஸ்டால் செய்தவுடன் ஒரே ஒரு முறை நீங்கள் உங்கள் கூகுள் அக்கவுண்டில் லாக் இன் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்கள் முன் ஒரு மியூசிக் ஸ்க்ரீன் தோன்றும். அதில் நீங்கள் உங்கள் விருப்பமுடைய இந்தி, பஞ்சாபி, பெங்காளி, குஜராத் மற்றும் உலகில் உள்ள முக்கிய மொழிகளில் பாடல்கள் இருப்பது தெரிய வரும். அதன் பின்னர் உங்கள் விருப்ப மொழியை தேர்வு செய்து பாடல்களை கேட்டு மகிழலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Google quietly made 'Google Play Music All Access' service accessible in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X