Google வைத்த அடுத்த ஆப்பு! வாட்ஸ்அப், மெசேன்ஜர், இன்ஸ்டாக்ராமிற்கு 'இந்த' சேவை இனி கிடையாது!
கூகிள் நிறுவனம் அண்மையில் யாரும் எதிர்பார்த்திடாத ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற மெசேஜிங் பயன்பாடுகளால் உருவாக்கப்பட்ட ஃபோல்டர்களில் இனி போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் காப்புப்பிரதி செய்யப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளது. அதாவது பேக்கப் மற்றும் சிங்க் (Backup & Sync) சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

கூகிளின் இந்த அதிரடி முடிவிற்குக் காரணம் என்ன?
கூகிள் நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவிற்குக் காரணம் என்ன என்பதையும் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் இணைய வளங்களைப் பாதுகாக்க நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. COVID-19 காரணமாக, மக்கள் அதிகமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்கின்றனர்.

கூகிள் போட்டோஸ்
இணைய ஆதாரங்களைச் சேமிக்க, வாட்ஸ்அப், மெசேன்ஜர் மற்றும் கிக் போன்ற மெசேஜிங் பயன்பாடுகளால் உருவாக்கப்பட்ட சாதன கோப்புறைகளுக்கு காப்புப்பிரதி மற்றும் சிங்க் முடக்கப்பட்டுள்ளது "என்று கூகிள் போட்டோஸ் தனது ஃபோறம் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கூகிள் போட்டோஸ் பயன்பாட்டில் இது தொடர்பாகப் பயனர்கள் அறிவிப்பை விரைவில் பெறுவார்கள்.

இனி பேக்கப் சேவையே கிடையாதா?
இனி பேக்கப் சேவையே கிடையாதா என்று நினைக்காதீர்கள், இனிமேல் உங்கள் மெசேஜ் தளத்தில் வரும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களைச் சேமிக்க, நீங்கள் கைமுறையாகப் பயன்பாட்டிற்குச் சென்று, பேக்கப் எடுக்க அந்த ஃபோல்டர்களை நீங்களே தேர்வு செய்ய வேண்டும். முதற்கட்டமாக வாட்ஸ்அப், மெசேஜ்கள் மற்றும் கிக் போன்ற சில மெசேஜிங் பயன்பாடுகளில் மட்டுமே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

லிஸ்டில் இருக்கும் கூடுதல் ஆப்ஸ்கள்
ஆனால் கூகிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப வலைத்தளத்தில் இத்துடன் கூடுதலாக சில முக்கிய மெசேஜிங் பயன்பாடுகளின் பட்டியலைக் குறிப்பிட்டுள்ளது, அதன்படி பேஸ்புக், ஹெலோ, இன்ஸ்டாகிராம், லைன், மெசேஜஸ், மெசஞ்சர், ஸ்னாப்சாட், ட்விட்டர், வைபர் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய பயன்பாடுகளுக்கு ஆட்டோமேட்டிக் பேக்கப் வசதியை இனி வழங்கப்படாது.

கொரோனாவால் குறைந்த வீடியோ தரம்
கூகிள் போட்டோஸ் நடவடிக்கைக்கு முன்பு, யூடியூப் அதன் வீடியோ தரத்தை 480p ஆகக் குறைத்தது. இருப்பினும், பயனர்கள் எச்டியில் வீடியோக்களைப் பார்க்க விரும்பினால், அவர்கள் அந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில், வீடியோக்கள் எப்பொழுதும் போல 480p இல் மட்டுமே இயங்கும். அதேபோல், கடந்த மே மாதத்தில் நெட்ஃபிலிக்ஸ் கூட தனது ஸ்ட்ரீமிங் தரத்தையும் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications