பிராகரஸ்ஸிவ் வெப் அப்ளிகேசன் வழியாக கூகுள் போட்டோஸ்.!

குரோம் 67 வெர்சன் மூலமாக பிராகரஸிவ் வெப் அப்ளிகேசனை கூகுள் இயங்க வைக்கிறது.

|

பயனாளர்களின் நீங்கா நினைவுகளைப் போட்டோக்களாக, வீடியோக்களாகப் பாதுகாத்து வைத்துக் கொள்ள கூகுள் நிறுவனம் வழங்கியுள்ள இலவச வாய்ப்புதான் கூகுள் போட்டோ (Google Photos) என்னும் சேமிப்பக வசதி. இப்பொழுது கூகுள் நிறுவனம் கூகுள் போட்டோவோடு மேம்பட்ட இணையப் பயன்பாட்டுச் செயலி (Progressive Wep Application) தொழில் நுடபத்தையும் இணைத்துள்ளது.

பிராகரஸ்ஸிவ் வெப் அப்ளிகேசன் வழியாக கூகுள் போட்டோஸ்.!

இணையம் வழியாகத் தேடப்படுகின்ற தகவல்கள் மிக விரைவாகவும் இடையீடு இன்றியும் பயளாளர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட தொழில் நுட்பம்தான் பிராகரஸிவ் வெப் அப்ளிகேசன் (PWA) தொழில் நுட்பம். இந்த பயன்பாட்டுச் செயலியின் வழியாக கூகுள் போட்டோ இயங்கும் பொழுது நாம் சேமித்து வைத்துள்ள போட்டோக்கள், வீடியோக்களை மிக விரைவாகப் பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் இயலும்.

ஆன்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப்பின் முகப்புத் திரையில்.....
இந்த வசதியைப் யன்படுத்தி குரோம் பிரவுசர் மூலமாக கூகுள் போட்டோவை உங்களுடைய ஆன்ட்ராய்டு மொபைல் மற்றும் டெஸ்க்டாப் கணிப்பொறி ஆகியவற்றின் முகப்புத் திரையில் வைத்துக் கொள்ளலாம். குரோம் 67 வெர்சன் மூலமாக பிராகரஸிவ் வெப் அப்ளிகேசனை கூகுள் இயங்க வைக்கிறது. இதற்கு முன்னால் கூகுள் மேப்ஸ் கோ (Google Maps Go) செயலிக்கும் இது போன்ற வசதியை கூகுள் நிறுவனம் வழங்கியிருந்தது. இதன் மூலமாக ஆன்ட்ராய்டு மொபைலுக்கு உரிய நேடிவ் ஆப்ரேடிங் சிஸ்டம் இல்லாமலேயே கூகுள் போட்டோவை இயக்கிக் கொள்ள முடியும். டுவிட்டர் நிறுவனமும் இது போன்ற பிராகரஸிவ் வெப் அப்ளிகேசன் மூலமாக விண்டோஸ் 10 செயலியை மேம்படுத்தி டுவிட்டரில் பதிவு செய்யப்படும் எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிராகரஸ்ஸிவ் வெப் அப்ளிகேசன் வழியாக கூகுள் போட்டோஸ்.!

இன்டெல் டெவலப்பர் கென்னத் ரோட் கிறிஸ்டியன் (Kenneth Rohde Christiansen), கூகுள் போட்டோ, பிராகரஸிவ் வெப் அப்ளிகேசன் வழியாகக் கிடைக்கிறது என்பதை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த வசதி ஆப் லைனில் இயங்கக் கூடிய வகையில் இன்னும் மேம்படுத்தப்படவில்லை. கூகுள் போட்டோவுக்குள் மேற்கொள்ளப்படும் நுழைவு மற்றும் நடமாட்டங்கள் குறித்த விழிப்புணர்வுச் செய்திகளை டெஸ்க்டாப் நோடிவிகேசன்கள் மூலமாக அறிந்து கொள்ள இயலும். இந்த வசதியின் மூலமாக, போட்டோக்கள் குறித்துப் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை பார்வையிடவும் அவற்றை நீக்கவும் முடியும். போட்டேக்கள் மற்றும் வீடியோக்களைச் சேமித்து வைப்பதில் மிக மேம்பட்ட வழிமுறைகளைப் பெறுவதற்காக கூகுள் அஸிஸ்டென்டின் உதவியையும் பெற முடியும். பிராகரஸிவ் வெப் அப்ளிகேசன் வழியாக கூகுள் போட்டோ செயலிக்கு ஷேர் டார்கெட் சப்போர்ட், மற்றும் ஆட்டோமேட்டட் கிரியேசன்களுக்கான அறிவிப்புகள் பெறும் வசதி ஆகிவை தற்போதைக்கு ஆன்ட்ராய்டு மொபைல்களுக்கு கிடைக்காது எனத் தெரிகிறது. ஆனால், ஆன்ட்ராய்டு மொபைல்களுக்கு இத்தகைய வசதிகள் கிடைக்க கூகுள் நிறுவனம் மிகவிரைவில் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.

பிராகரஸ்ஸிவ் வெப் அப்ளிகேசன் வழியாக கூகுள் போட்டோஸ்.!

குரோம் 67 வெர்சன்
குரோம் 67 வெர்சனைப் பொறுத்தவரை பிராகரஸிவ் வெப் அப்ளிகேசனோடு இணைந்தே பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எனவே டெஸ்க்டாப் கணிப்பொறியில் மிக எளிதாக கூகுள் போட்டோ செயலியை இணைக்க முடியும். கூகுள் போட்டோவை இணைக்க, குரோம் பிரவுசரில் உள் நுழைந்து, வலது புற மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைக் கொண்ட மெனு பட்டனை கிளிக் செய்து, "Install Google Photos..." ஆப்சனைத் தேர்வு செய்ய வேண்டும். குரோம் 67 வெர்சனை உங்களுடைய கணிப்பொறியில் நிறுவிய பிறகும் கூகுள் போட்டோவை உங்களுடைய கணிப்பொறியில் இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், chrome://flags/#enable-desktop-pwas என்னும் தளத்திற்கச் சென்று தீர்வு காணலாம்.
பிராகரஸ்ஸிவ் வெப் அப்ளிகேசன் வழியாக கூகுள் போட்டோஸ்.!

ஆன்ட்ராய்டுக்கு ஏற்ற கூகுள் போட்டோஸ்

கூகுள் போட்டோ தளத்திற்குச் சென்று ஆன்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் கூகுள் போட்டோவை இணைத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட அளவு மட்டுமே சேமிப்பிட வசதி கொண்ட ஆன்ட்ராய்டு மொபைல் போன்களுக்கு கூகுள் போட்டோ மிகவும் உதவியாக இருக்கும்.

அனைத்தும் பிராகரஸிவ் வெப் அப்ளிகேசன் மயம்
இந்த வருட பிப்ரவரி மாதத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், விண்டோஸ் 10 பயன்பாட்டுக்காக மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் மூலமாக பிராகரஸிவ் வெப் அப்ளிகேசனை (PWA) சேர்த்துக் கொண்டது. மேலும் இந்நிறுவனம், தன்னுடைய வேகமான இணையத் தேடலுக்கான எட்ஜ் பிரவுசரின் (Edge browser) செயல்பாட்டுக்காகவும் பிராகரஸிவ் வெப் அப்ளிகேசனைத் துணையாகக் கொண்டுள்ளது. கூகுள் மற்றும் மோசில்லா ஆகிய இரண்டுமே தங்களுடைய இணையதளச் சேவையை மேம்படுத்துவதற்காக பிராகரஸிவ் வெப் அப்ளிகேசனை (PWA) முன்னிலைப்படுத்துகின்றன.

.

Best Mobiles in India

English summary
Google Photos Now a Progressive Web App on Android, Desktop : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X