கூகிள் போட்டோஸ் இல் வெளியான புதிய சேவை.. இனி வீடியோவை கூட ஜூம் செய்யலாம்..

|

கூகிள் போட்டோஸ் இப்போது அதன் பயனர்களுக்கு வீடியோவை பெரிதாக்கி ஜூம் செய்து பார்க்க அனுமதிக்கிறது. இந்த புதிய அப்டேட் எப்படி செயல்படுகிறது? யாருக்கெல்லாம் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

கூகிள் போட்டோஸ் புதிய அப்டேட்

கூகிள் போட்டோஸ் புதிய அப்டேட்

வீடியோவை கூகிள் போட்டோஸ் மூலம் பார்க்கும் போது பயனர் தனது டிஸ்பிளேவை இரண்டு முறை தட்டினால் ஆட்டோமேட்டிக்காக வீடியோ ஜூம் செய்யப்படும். இந்த அம்சம் சேவையக பக்க சுவிட்சாக வெளிவருவதாகத் தெரிகிறது.

சமீபத்திய வெர்ஷன் 5.28.0 அப்டேட்

சமீபத்திய வெர்ஷன் 5.28.0 அப்டேட்

பயனர்களின் கூற்றுப்படி, பயன்பாட்டு வெர்ஷன் எதுவாக இருந்தாலும் இந்த அம்சம் செயல்படுகிறது. இருப்பினும், ஆண்ட்ராய்டில் கூகிள் போட்டோஸ் பயன்பாட்டின் சமீபத்திய வெர்ஷன் 5.28.0 அப்டேட் செய்துகொண்டால் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. டபுள் டேப் செய்தவுடன் உங்களின் வீடியோ டிஸ்பிளேவை நிரப்புகிறது.

நோக்கியாவின் அடுத்த பாகுபலி 'Nokia 3650 5G (2021)' தான்.. எதிர்பார்பில் மக்கள்.!நோக்கியாவின் அடுத்த பாகுபலி 'Nokia 3650 5G (2021)' தான்.. எதிர்பார்பில் மக்கள்.!

பிஞ்ச் மற்றும் டபுள் டேப்

பிஞ்ச் மற்றும் டபுள் டேப்

வீடியோவை பெரிதாக்க பிஞ்ச் மற்றும் டபுள் டேப் அம்சத்தை தட்டினால் போதும். இப்போது கூகிள் போட்டோஸ் பயனர்களின் வீடியோவில் உள்ள விவரங்களைப் பார்ப்பதற்கு இந்த சேவை அனுமதிக்கிறது என்று கூகிள் நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய அம்சம் சில பயனர்களுக்காக வெளிவரத் தொடங்கியது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே முதற்கட்டமாக இந்த அப்டேட் வெளிவந்துள்ளது.

இவர்களுக்கு மட்டும் இப்போதைக்கு இந்த அப்டேட் கிடையாது

இவர்களுக்கு மட்டும் இப்போதைக்கு இந்த அப்டேட் கிடையாது

இந்த அம்சம் உங்களுக்கும் கிடைக்கிறதா என்பதைச் சரிபார்க்க, சமீபத்திய Google போட்டோஸ் அப்டேட்டை பதிவிறக்கம் செய்யுங்கள். இது செயல்படுகிறதா என்று சோதித்து முயற்சி செய்து பாருங்கள். இந்த அம்சம் சேவையக சர்வர் அப்டேட் போல் தோன்றுவதால், கூகிள் இதைத் தொகுப்பாகவும் பிரிவாகவும் வெளியிடும். iOS இல் இன்னும் இந்த அப்டேட் வெளியிடப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Google Photos Now Allows You To Double Tap or Pinch to Zoom In on Videos : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X