கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய அட்டகாசமான புதிய அம்சம் என்னவென்று தெரியுமா?

|

கூகுள் போட்டோஸ் தினசரி அடிப்படையில் பயன்படுத்தக்கூடிய ஏராளமான அம்சங்கள் கொண்ட கூகுளின் சிறந்த செயலியாகும். தற்பொழுது கூகுள் நிறுவனம் கூகுள் போட்டோஸ் பயன்பாட்டு செயலியில் அனைவருக்கும் பயன்படும் ஒரு புதிய அம்சத்தைக் களமிறக்கியுள்ளது.

கூகுள் போட்டோஸ்

கூகுள் போட்டோஸ்

கூகுள் போட்டோஸ் செயலியில் முன்பே டேக்கிங் அம்சம் செயல்பட்டு வருகிறது. இந்த அம்சத்தின் மூலம் மக்களின் முகங்களைத் தானாக அடையாளம் கண்டு அவற்றை டேக் செய்துகொள்ளும் படி இச்சேவைச் செயல்படுகிறது. இருப்பினும், பல நேரங்களில் பலரின் முகங்கள் தவறான டேக்கிங் அல்லது டேக் செய்யாமல் விடப்படுகிறது.

புதிய பேஸ் டேக்கிங் அம்சம்

புதிய பேஸ் டேக்கிங் அம்சம்

இந்த சிக்கலுக்கான தீர்வைக் தற்பொழுது கூகுள் நிறுவனம் புதிய அம்சத்தின் மூலம் மாற்றம் செய்துள்ளது. கூகிளின் சமீபத்திய கூகிள் போட்டோஸ் 4.3 வெர்ஷன் அப்டேட்டில், பயனர்கள் தங்கள் புகைப்படங்களில் உள்ளன நண்பர்களின் முகங்களை மேனுவல் முறைப்படி தேர்வு செய்து டேக்கிங் செய்துகொள்ளலாம்.

வாட்ஸ்ஆப் செயலியில் இந்த மூன்று புளூ டிக் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?வாட்ஸ்ஆப் செயலியில் இந்த மூன்று புளூ டிக் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

செல்லப்பிராணிகளையும் டேக் செய்யலாம்

செல்லப்பிராணிகளையும் டேக் செய்யலாம்

இந்த புதிய டேக்கிங் அம்சம் உங்கள் நண்பர்களை மட்டும் டேக் செய்ய அனுமதிக்கிறது என்று நினைக்காதீர்கள். இனிமேல் உங்கள் செல்லப்பிராணிகளையும், உங்கள் கூகுள் போட்டோஸ் மூலம் நீங்கள் டேக்கிங் செய்துகொள்ளலாம். ஒருமுறை டேக் செய்துவிட்டால் அடுத்தமுறை தானாக டேக் செய்துகொள்ளும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

மேனுவல் டேக்கிங்

மேனுவல் டேக்கிங்

ஆட்டோமேட்டிக்காக உங்கள் கூகுள் போட்டோஸ், புகைப்படங்களை டேக் செய்யவில்லை என்றால், இனி இந்த அம்சத்தைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை, தங்களுக்குப் பிடித்த பெயரிலோ அல்லது அவர்களுடைய செல்ல பெயரையோ கொண்டு டேக்கிங் செய்துகொள்ளலாம்.

ரூ.222 கோடிக்கு ஏலம் போன கைக்கடிகாரம்: அப்படி என்னதான் இருக்கு?ரூ.222 கோடிக்கு ஏலம் போன கைக்கடிகாரம்: அப்படி என்னதான் இருக்கு?

டெலீட் டேக் சேவையும் உள்ளது

டெலீட் டேக் சேவையும் உள்ளது

தவறுதலாகப் பெயர்கள் டேக் செய்யப்பட்டால் அதை எடிட் செய்வதற்கான புதிய அம்சத்தையும் கூகுள் நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ள கூகுள் போட்டோஸ் அப்டேட்டில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு இருந்த டெலீட் டேக் சேவையும் செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google Photos Launched New Exciting Manual Face Tagging Feature : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X