அனைத்து தளங்களுக்கான கூகுள் போட்டோஸ் சேவையில் லைவ் போட்டோ வசதி அறிமுகம்

|

ஆப்பிள் நிறுவனம் லைவ் போட்டோஸ் அம்சத்தை அறிமுகம் செய்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அம்சம் புகைப்படங்களை சில நொடிகள் ஓடக்கூடிய சிறு வீடியோக்களாக ஐபோனில் சேமித்து வைக்கும்.

அனைத்து தளங்களுக்கான கூகுள் போட்டோஸ் சேவையில் லைவ் போட்டோ வசதி அறிமுகம

ஐபோனின் கேமராவானாது புகைப்படம் எடுக்க ஷட்டர் பட்டன் கிளிக் செய்யும் முன் மற்றும் செய்த பின் என மொத்தம் 1.5 நொடிகள் ஓடக்கூடிய அனிமேஷனை உருவாக்கும். எனினும் வழக்கமான வீடியோ போன்று இல்லாமல் ஒரே JPEG ஃபைலில் பல்வேறு புகைப்படங்களை கொண்டிருக்கும்.

இதனை ஜிஃப் என அழைக்கின்றனர், எனினும் இதில் ஆடியோ கேட்க முடியும். சாதாரணமாக லைவ் போட்டோ அம்சம் பார்க்க புகைப்படம் போன்று காட்சியளிக்கும், அதனை கிளிக் செய்தால் அதனை அனிமேஷன் வடிவில் பார்த்து ரசிக்க முடியும்.

இதுவரை லைவ் போட்டோஸ் அம்சம் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்தது. சில சமூக வலைத்தளங்களான பேஸ்புக் போன்றவை லைவ் போட்டோஸ் அம்சத்தை வழங்குகின்றன என்றாலும் இவற்றை ஐபோன் சாதனங்களில் மட்டுமே பார்க்க முடியும்.

அந்த வகையில் கூகுள் நிறுவனமும் லைவ் போட்டோஸ் அம்சத்தினை மோஷன் போட்டோஸ் என்ற பெயரில் வழங்கியுள்ளது. பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL சாதனங்களில் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் கணினிகளை யு.எஸ்.பி. டிரைவ் மூலம் லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி?விண்டோஸ் கணினிகளை யு.எஸ்.பி. டிரைவ் மூலம் லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி?

ஆப்பிளின் லைவ் போட்டோஸ் மற்றும் கூகுள் மோஷன் போட்டோஸ் சேவைகளில் எவ்வித வித்தியாசமும் காணப்படவில்லை. சில காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அம்சம் காலதாமதமாக வழங்கப்பட்டிருந்தாலும், அனைவராலும் வரவேற்கப்படும் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது.

ஐபோன் பயன்படுத்துபவர்களும், கூகுள் போட்டோஸ் கிளவுடில் புகைப்படங்களை சேமித்து கொண்டு அவற்றை எவ்வித மாற்றமும் இன்றி பார்க்க முடியும். ஆண்ட்ராய்டு சாதனங்கள் மட்டுமின்றி கூகுள் போட்டோஸ் சேவையின் டெஸ்க்டாப் பதிப்பிலும் லைவ் போட்டோஸ் மற்றும் மோஷன் போட்டோஸ் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Google Pixel 2 and Pixel 2 Xl also have a feature called Motion Photos, which is similar to Apple's Live Photos.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X