Google Photos 'சவுண்ட் இல்லா'மல் செய்து வரும் வேலை இதுதான்! இப்படி ஒரு அம்சமா?

|

கூகிள் நிறுவனம் தனது கூகிள் போட்டோஸ் பயன்பாட்டில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்யத் தயாராகிவருகிறது. யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் கூகிள் நிறுவனம் இந்த புதிய அம்சத்தைச் சோதனை செய்து வருகிறது. கூகிள் போட்டோஸ் இல் 'சவுண்ட் இல்லா'மல் சோதனை செய்யப்பட்டு வரும் அந்த புதிய அம்சம் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கூகிள் போட்டோஸ் ஒரு சாதாரண போட்டோ கேலரி பயன்பாடு அல்ல

கூகிள் போட்டோஸ் ஒரு சாதாரண போட்டோ கேலரி பயன்பாடு அல்ல

கூகிள் போட்டோஸ் சாதாரண போட்டோ கேலரி போல் மட்டுமில்லாமல் தனது பயனர்களுக்குப் பல விதமான சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. குறிப்பாகச் சிறந்த முறையிலான போட்டோ தொகுப்புமுறை, பேஸ் ரெகக்னிஷன், உங்கள் போட்டோஸ் மற்றும் விடியோக்களை கிளவுட் ஸ்டோரேஜ் செய்ய வரம்பற்ற ஸ்டோரேஜ் வசதி, கூகிள் அக்கௌன்ட் மூலம் பல சாதனத்தில் அணுக அனுமதி போன்று பல அம்சங்களுடன் இந்த பயன்பாடு பயன்படுத்த அனுமதிக்கிறியாது.

புதிய வீடியோ எடிட்டிங் டூல்

புதிய வீடியோ எடிட்டிங் டூல்

இப்பொழுது இந்த அம்சங்களுடன் கூகிள் புதிதாக ஒரு வீடியோ எடிட்டிங் டூல் அம்சத்தை உருவாக்கி சோதனை செய்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. கூகிள் சத்தமில்லாமல் உருவாக்கி வரும் இந்த புதிய அம்சம் சோதனையின் கீழ் தான் உள்ளது, இன்னும் அனைத்து பயனர்களுக்கான பயன்பாட்டிற்கு வெளியிடப்படவில்லை என்று தெளிவாக தகவல் குறிப்பிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Airtel அதிரடி! 1 வருட Disney+ Hotstar சந்தா இலவசம்; தினமும் 3 ஜிபி டேட்டா - விலை என்ன தெரியுமா?Airtel அதிரடி! 1 வருட Disney+ Hotstar சந்தா இலவசம்; தினமும் 3 ஜிபி டேட்டா - விலை என்ன தெரியுமா?

சத்தமில்லாமல் கூகிள் சோதனை செய்து வரும் அம்சம்

சத்தமில்லாமல் கூகிள் சோதனை செய்து வரும் அம்சம்

சத்தமில்லாமல் கூகிள் சோதனை செய்து வரும் இந்த வீடியோ எடிட்டிங் டூல் அம்சம், பயனர்கள் கூகிள் போட்டோஸ் இல் வீடியோ எடிட் செய்யும் பொழுது வீடியோவில் உள்ள ஆடியோ சவுண்ட்களை நீக்கம் செய்கிறது. வீடியோ ஃபைல்களில் உள்ள ஆடியோ சவுண்ட்களை மட்டும் நீக்கம் செய்யும் இந்த அம்சத்தை ஜேன் மஞ்சுன் வோங் தலைமையில் கூகிள் உருவாக்கியுள்ளது.

புதிய ரிமூவ் ஆடியோ பட்டன்

புதிய ரிமூவ் ஆடியோ பட்டன்

கூகிள் போட்டோஸ் பயனர்கள், கூகிள் போட்டோஸ் பயன்பாட்டின் வீடியோ எடிட்டர் UI இன் கீழ் உள்ள இடது மூலையில் புதிய சவுண்ட் மியூட் ஐகான் இப்பொழுது புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பட்டனை தட்டினால் உங்கள் வீடியோவிலிருந்து ஆடியோ டிராக் ஒரே கிளிக்கில் அகற்றப்படும், பின்னர் எடிட் செய்யப்பட்ட இந்த சுண்ட உள்ளதாக வீடியோவின் நகலை நீங்கள் கூகிள் போட்டோஸ் கேலரியில் சேவ் செய்துகொள்ளலாம்.

Cognizant நிறுவனத்திற்கு இப்படியொரு நிலைமையா? சைபர் அட்டாக்.! work from home காரணமா?Cognizant நிறுவனத்திற்கு இப்படியொரு நிலைமையா? சைபர் அட்டாக்.! work from home காரணமா?

கூகிள் போட்டோஸ் 4.48 வெர்ஷன்

கூகிள் போட்டோஸ் 4.48 வெர்ஷன்

கூகிள் போட்டோஸ் பயன்பாட்டில் இப்பொழுது வீடியோகளை ரொட்டேட் செய்யும் அம்சம், ட்ரிம் செய்யும் அம்சம் மற்றும் வீடியோவில் இருந்து போட்டோ எக்ஸ்போர்ட் செய்யும் அம்சம் போன்ற அம்சங்களுக்குக் கூகிள் தற்பொழுது அனுமதி வழங்குகிறது. கூகிள் இப்பொழுது சோதனை செய்து வரும் ஆடியோ நீக்கம் அம்சம் 4.48 வெர்ஷனில் கிடைக்கிறது. விரைவில் அனைத்து பயனர்களுக்காக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Google Photos Added New Remove Audio From Video Feature To It's Video Edit Tool : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X