Google Pay பயனர்கள் உஷார்! ஒரு லட்ச ரூபாய் ஆன்லைன் மோசடி- இதை மட்டும் செய்யாதீங்க!

|

கூகிள் பே பயனர்கள் உஷார், பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் தனது நண்பருக்கு ரூ.300 தொகையை அனுப்ப முயன்று ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி, அவர் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் ஒரு லட்சத்தை இழந்துள்ளார். இவர் எப்படி ஒரு லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்தார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இவர் செய்த தவறை நீங்களும் செய்யாமல் பாதுகாப்பாக இருங்கள்.

ஒரு காலத்தில் மக்கள் கையில் உள்ள பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நேரடியாக வங்கிகளுக்குச் சென்று பணத்தைச் சேமித்து வைப்பதும், தேவைக்கு ஏற்ற நேரத்தில் பணத்தை எடுக்க வங்கிக்கு நேரில் சென்று வரும் நிலையே நிலவி வந்தது. ஆனால், பல நேரங்களில் இந்த செயல்முறை அனைவருக்கும் ஏற்றதாக இருக்கவில்லை, குறிப்பாகப் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் இருந்தது.

மக்களுக்கு ஏற்படும் சிரமம்

மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் பரிவர்த்தனை முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்கள் ஏடிஎம் சென்று பணம் டெபாசிட் செய்யும் முறை, மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், ஆன்லைன் பேங்கிங் என்று அனைத்து சேவைகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டது. இந்த ஆன்லைன் சேவைகளை மக்கள் பெரிதும் வரவேற்றனர்.

ஸ்மார்ட்போன் பயன்பாடு

அடுத்தகட்டமாக ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்ததும், தனியார் நிறுவனங்கள் வங்கிகளுடன் இணைந்து பல சலுகைகளுடன் வங்கி பரிவர்த்தனைகளை மொபைல் ஆப்ஸ் மூலம் செய்யத் துவங்கியது. இருந்த இடத்திலிருந்து வெகு எளிதாக சில நொடிகளில் பணப் பரிமாற்றத்தை இந்த மொபைல் பயன்பாடுகள் செய்துமுடித்தது. இதில் முன்னோடியாகத் திகழ்ந்த மொபைல் ஆப்ஸ் தான் கூகிள் நிறுவனத்தின் கூகிள் பே பயன்பாடு.

ரூ.300 தொகையை அனுப்பியுள்ளார்

பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர், ஆன்லைன் மோசடி மூலம் ரூபாய் ஒரு லட்சத்தை இழந்துள்ளார். இவர் தனது நண்பரின் கூகுள் பே எண்ணிற்கு ரூ.300 தொகையை அனுப்பியுள்ளார். ஆனால், இவர் செய்த பரிவர்த்தனை தோல்வியுற்றது, அந்த தொகை அவரின் நண்பருக்குச் சென்று சேரவில்லை. இதனால் அந்த நபர் இணையத்திலிருந்து கூகுள் பே வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை சர்ச் செய்து போன் செய்திருக்கிறார்.

கூகிள் பே சேவை மைய அதிகாரி

கூகிள் பே சேவை மைய அதிகாரி என்று கூறி எதிர்முனையில் பேசிய மர்ம கும்பல், பணத்தைத் திரும்ப அனுப்ப வங்கிக் கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனுப்பும்படி அவரிடம் தெரிவித்துள்ளது. இவரும் அவர்களின் பேச்சை நம்பி தனது வங்கி விவரங்களை சேவை மைய அதிகாரி போல் பேசிய நபரிடம் கொடுத்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் உங்கள் பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என்று அதிகாரி தெரிவித்துவிட்டு அழைப்பைத் துண்டித்திருக்கிறார்.

மோசடி கும்பலின் எண்

அழைப்பு துண்டிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், புகார் கொடுத்த நபரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் ஒரு லட்சம் திருடப்பட்டுள்ளது. அதற்குப் பின்னர் தான், அந்த நபருக்குத் தான் கூகிளில் தேடி பிடித்த எண் போலியான மோசடி கும்பலின் எண் என்பது புரியவந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த நபர் உடனடியாக சைபர் கிரைம் போலிஸாரிடம் புகாரளித்துள்ளார். எப்பொழுதும் வங்கி தொடர்பான சேவை மைய எண்களைக் கூகிள் தளத்தில் சர்ச் செய்யாதீர்கள்.

டிஜிட்டல் பணபரிமாற்ற முறை

டிஜிட்டல் பணபரிமாற்ற முறை

டிஜிட்டல் பணபரிமாற்ற முறை ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் மூலம் நமக்கு அதிக பலன்களை வழங்கி வருகிறது. எனினும், இந்த சேவையில் அதற்கென ரிஸ்க் மற்றும் ஆபத்துகள் நிறைந்துள்ளது. சமீபத்தில், மகாராஷ்டிராவின் தானே பகுதியில் வசிக்கும் நபர் டிஜிட்டல் வாலெட் மூலம் ஒரு லட்சம் ரூபாயினை இழந்தார். பணத்தை பறிகொடுத்தவர் தனது நிலையை சமூக வலைதளங்களில் விளம்பரமாக வெளியிட்டார்.

கூகுள் பே மூலம் மோசடி

கூகுள் பே மூலம் மோசடி

இணையத்தில் ஏமாற்றியவர், மொபைல் வாலெட்களான பேடிஎம் அல்லது கூகுள் பே மூலம் பணம் செலுத்த கோரியிருக்கிறார். எனினும், பணத்தை அனுப்புவதற்கு மாற்றாக, விற்பனையாளரிடம் அவர் பணத்தை வழங்க கோரிக்கை விடுத்து அதற்கான ஒடிபியை கேட்டிருக்கிறார். பணத்தை பறிகொடுத்தவர் தனது பணம் கிடைக்க போவதாக நம்பி, ஒடிபியை தெரிவித்தார். பின் அவர் தனது வங்கி கணக்கில் இருந்த ஒரு லட்சம் ரூபாயை இருமுறை இழந்துள்ளார்.

குறிப்பிட்ட நபரை நீங்கள் பிளாக் செய்யலாம்

குறிப்பிட்ட நபரை நீங்கள் பிளாக் செய்யலாம்

இதுபோன்ற ஊழல்களில் சிக்காமல் இருக்க, கூகுள் பே சேவையில் உங்களிடம் பணம் கோரும் அம்சத்தை சிலருக்கு மட்டும் பிளாக் செய்ய அனுமதிக்கிறது. கூகுள் பே மூலம் உங்களை தொடர்பு கொள்ள நினைக்கும் குறிப்பிட்ட நபரை நீங்கள் பிளாக் செய்யலாம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ்

இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். என இருவித இயங்குதளங்களிலும் கிடைக்கிறது. இதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

பாதுகாப்பாக இருக்கும் செயல்முறை

பாதுகாப்பாக இருக்கும் செயல்முறை

  • ஸ்மார்ட்போனில் கூகுள் பே செயலியை திறக்க வேண்டும்
  • இனி நீங்கள் மேற்கொண்ட பரிவர்த்தனைகளை பார்க்க ஸ்லைடு அப் செய்ய வேண்டும். இதே பகுதியில் உங்களிடம் பணம் கோரிய காண்டாக்ட் விவரங்களும் பட்டியலாகி இருக்கும்
  • பிளாக் செய்ய வேண்டிய நபர்

    பிளாக் செய்ய வேண்டிய நபர்

    • இங்கு நீங்கள் பிளாக் செய்ய வேண்டிய நபரை க்ளிக் செய்ய வேண்டும்
    • நம்பர் உங்களது போன்புக்கில் சேவ் செய்யப்பட்டு இருந்தால், மோர் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
    • பிளாக் ஆப்ஷன்

      பிளாக் ஆப்ஷன்

      • இங்கு பிளாக் ஆப்ஷன் தெரியும், அதனை க்ளிக் செய்ய வேண்டும்
      • ஒருவேளை நம்பர் சேவ் செய்யப்படவில்லையெனில், பிளாக் செய்வதற்கான ஆப்ஷன் தானாக தெரியும்
      • கூகுள் போட்டோஸ் மற்றும் ஹேங் அவுட்ஸ் பிளாக்

        கூகுள் போட்டோஸ் மற்றும் ஹேங் அவுட்ஸ் பிளாக்

        கூகுள் பே செயலியில் யாரையும் பிளாiக் செய்தால், அவர்கள் மற்ற கூகுள் சேவைகளான கூகுள் போட்டோஸ் மற்றும் ஹேங் அவுட்ஸ் போன்றவற்றிலும் பிளாக் செய்யப்பட்டு விடுவர்.

Best Mobiles in India

English summary
Google Pay Users Alert: One Lakh Rupees Online Scam - Don't Ever Do This Mistake : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X