திடீரென காணாமல் போன Google Pay ஆப்ஸ்! பீதியான பயனர்கள் - கூகிள் சொன்ன பதில் இதுதான்!

|

சீனா ஆப்ஸ் பயன்பாடான டிக்டாக் தடைக்குப் பிறகு, பிளே ஸ்டோரிலிருந்து நேற்று கூகிள் நிறுவனத்தின் கூகிள் பே ஆப்ஸ் திடீரென காணாமல் போனது நெட்டிசன்ஸ் மடியில் புதிய பீதியை உருவாக்கியுள்ளது. எதனால் கூகிள் பே பயன்பாடு திடீரென மயமானது என்று கூகிள் பே டிவிட்டர் பக்கத்தில் பயனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பயனர்களின் கேள்விக்குக் கூகிள் நிறுவனமும் தற்பொழுது பதில் அளித்துள்ளது.

திடீரென காணாமல் போன கூகிள் பே

திடீரென காணாமல் போன கூகிள் பே

கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து நேற்று (திங்களன்று) கூகிள் பே பயன்பாடான டிஜிட்டல் வாலட் மொபைல் ஆப்ஸ் திடீரென காணாமல் போனது, இந்த நிகழ்வு நெட்டிசன்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. கூகிள் பே திடீரென மயமானதற்கு என்ன காரணம்? கூகிள் பே பாதுகாப்பானதா? பாதுகாப்பாகத் தான் இருக்கிறதா என்று பல கேள்விகள் கூகிள் பே நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தை நிரப்பியுள்ளது.

தடை செய்யப்பட்ட ஆப்ஸ்களின் பட்டியல்

தடை செய்யப்பட்ட ஆப்ஸ்களின் பட்டியல்

சீனாவுடனான வெளிப்படையான தொடர்புகளுக்காகப் பிரபலமான வீடியோ பகிர்வு பயன்பாடான டிக்டாக் மற்றும் பல சீனா தொடர்பான நிறுவனங்களின் ஆப்ஸ்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. சீனா பொருட்களை வாங்கவும் மக்கள் இப்பொழுது ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் இந்தியா தயாரிப்புகளுக்கு தற்பொழுது உள்நாட்டில் மவுசு கூடியுள்ளது. இன்னும் தடை செய்யப்பட்ட ஆப்ஸ்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

செவ்வாய் கிரகத்தை இப்படி நீங்கள் பார்க்க வாய்ப்பில்லை! 15 ஆண்டு ஆய்வை நிறைவு செய்த நாசா!செவ்வாய் கிரகத்தை இப்படி நீங்கள் பார்க்க வாய்ப்பில்லை! 15 ஆண்டு ஆய்வை நிறைவு செய்த நாசா!

இதே சந்தேகம் தான் நேற்று எழுந்துள்ளது

இதே சந்தேகம் தான் நேற்று எழுந்துள்ளது

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குப் பின்னர், கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து பயன்பாடுகள் காணாமல் போனால் அதை அரசாங்கம் நீக்கிவிட்டது என்று மக்கள் கருதத் துவங்கியுள்ளனர். இதே சந்தேகம் தான் நேற்று திடீரென கூகிள் பே பயன்பாடு காணாமல் போனதும் உருவாகியுள்ளது. கூகிள் பே பயன்பாடு திடீரென காணாமல் போனதும், அரசு எதுவும் தடை விதித்துவிட்டதோ என்று பயனர்கள் பீதி அடைந்துவிட்டனர்.

கூகிள் பதில்

கூகிள் பதில்

கூகிள் பே பயன்பாட்டை இந்தியாவில் அதிகப்படியானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சமூக ஊடகங்களில் கேள்விகளும், புகார்களும் காட்டு தீ போல நேற்று பரவ தொடங்கியது. இதற்குக் கூகிள் நிறுவனம் அதன் சார்பில் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் வழியாக அதன் பதிலை வெளியிட்டுள்ளது.

கடையில் ரீசார்ஜ் செய்த இளம்பெண்! வாட்ஸ்அப் எண்ணிற்கு வந்த ஆபாச வீடியோ! கடைக்காரர் கைது!கடையில் ரீசார்ஜ் செய்த இளம்பெண்! வாட்ஸ்அப் எண்ணிற்கு வந்த ஆபாச வீடியோ! கடைக்காரர் கைது!

இந்த சிக்கல் தற்காலிகமானது

கூகிள் பே இந்தியா அதிகாரிகள் இந்த சிக்கல் "தற்காலிகமானது" என்றும், அதைச் சரிசெய்வதில் ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும் ஒரு ட்வீட் மூலம் கோளாறு இருப்பதாய் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்னும் சிலர் இதற்கும் இந்தியத் தேசிய கொடுப்பனவு கழகத்திற்கும் (NPCI) ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று குழம்பியுள்ளனர்.

கூகிள் பே எப்போதும் பாதுகாப்பானது தான்

கூகிள் பே எப்போதும் பாதுகாப்பானது தான்

பயனர்கள் பீதி அடைய இதில் பெரிய சிக்கல் எதுவும் இல்லை என்றும், பாதுகாப்பு குறித்த கவலை பயனர்களுக்கு எப்பொழுதும் வர வேண்டாம் என்றும் கூகிள் பே நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்ததிடீர் மாயம் ஹேக் செய்யப்பட்டதனால் உருவானதுஇல்லை என்றும், இது வெறும் சாப்ட்வேர் கோளாறு மட்டும் தான் என்று நிறுவனம் தெளிவாக தெரிவித்துள்ளது. கூகிள் பே எப்போதும் பாதுகாப்பானது தான் என்று உறுதி அளித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Google Pay's Sudden Disappearance From Play Store Creates Panic Among Users : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X