Google Pay: NFC மூலம் ஒரே டச்சில் பணம் அனுப்பலாம்! இனி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தேவையில்லை!

|

கூகிள் நிறுவனம் தனது கூகிள் பே ஆப்ஸ் மூலம் பணம் செலுத்துவதை எளிதாக்க NFC முறையை அறிமுகம் செய்துள்ளது. புதிய NFC முறைப்படி 'Tap & Pay' என்ற கட்டண முறையை உருவாக்கி முதற்கட்டமாக தற்பொழுது சோதனை செய்து வருகிறது. இந்த சேவை கிடைத்தால் இனி கூகிள் பே பயனர்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கையில் இல்லாமல் ஒரே ஒரு டச் மூலம் பணம் செலுத்தலாம்.

புதிய NFC முறை

புதிய NFC முறை

கூகிள் தற்பொழுது சோதனை செய்து வரும் இந்த புதிய NFC முறையைப் பயன்படுத்தப் பயனர்கள் முதலில் அவர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விபரங்களைக் கூகிள் பே ஆப்ஸ் உடன் இணைக்க வேண்டும், அதை எப்படி செய்வது என்று கீழே விளக்கப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே

தற்பொழுது இந்த அம்சத்தை வரையறுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 வயது மாணவன் உருவாக்கிய ஆப்ஸ்-க்கு கூகிள் 28 ஆண்டு ஒப்பந்தம்! என்ன ஆப் தெரியுமா?13 வயது மாணவன் உருவாக்கிய ஆப்ஸ்-க்கு கூகிள் 28 ஆண்டு ஒப்பந்தம்! என்ன ஆப் தெரியுமா?

NFC முறைப்படி ‘Tap & Pay' சேவையை எப்படி பயன்படுத்துவது

NFC முறைப்படி ‘Tap & Pay' சேவையை எப்படி பயன்படுத்துவது

  • Google Pay பயன்பாட்டைத் முதலில் ஓபன் செய்யுங்கள்.
  • அடுத்தபடியாக Settings > Payment methods > Add card என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
  • அட்டையில் உள்ள பெயர், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு எண், காலாவதி தேதி (Expiry Date), அட்டையின் பின்புறத்தில் உள்ள CVV எண் ஆகியவற்றை உள்ளிடுங்கள்.
  • விதிமுறை மற்றும் நிபந்தனைகளை Accept கொடுத்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
  • OTP எண்
    • சரிபார்ப்பு முறையை தேர்வு செய்யுங்கள்.
    • உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை உள்ளிடவும்.
    • அடுத்து கார்டு விபரத்திற்கு அருகில் உள்ள Activate விருப்பத்தைக் கிளிக் செய்யுங்கள்.
    • இது NFC இயக்கப்பட்ட டெர்மினல்களில் ‘Tap & Pay' பயன்முறையில் பணம் செலுத்த அனுமதிக்கும்.
    • இந்த முறைப்படி நீங்கள் உங்களுடைய புதிய NFC சேவையை பயன்படுத்தலாம்.
    • ஆன்லைன் வங்கி சேவை என்று நம்பியதால் 4 லட்சம் போச்சு! இவர் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள்!ஆன்லைன் வங்கி சேவை என்று நம்பியதால் 4 லட்சம் போச்சு! இவர் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள்!

      கூகிள் பே settings > Payment Methods and then Remove card

      அதேபோல், நீங்கள் ஆட் செய்த கார்டு விபரங்களை அகற்ற நீங்கள் கூகிள் பே settings > Payment Methods and then Remove card என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் போதும். எனும் ஆப்ஷன்களைத் தேர்வு செய்வதன் மூலம் கார்டை அகற்ற முடியும்.

      NFC Tap & Pay சேவை

      புதிய அப்டேடில் சில பயனர்களுக்கு இந்த NFC Tap & Pay சேவை கிடைக்கிறது. கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம் வெகு விரைவில் உங்களுக்கும் இந்த சேவை கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Google Pay rolls out NFC-based contactless card payment option in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X