கூகுள் பே இருந்த போதும் ரயில் டிக்கெட் இனி ஈசியா புக் பண்ணலாம்.!

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த கூகுள் பே சேவையை இந்தியா முழுதும் பலகோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் பே சேவையின் கீழ் தற்பொழுது ரயில் டிக்கெட் புக் செய்யும் புதிய சேவையைக் கூகுள் நிறுவனம்

|

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த கூகுள் பே சேவையை இந்தியா முழுதும் பலகோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் பே சேவையின் கீழ் தற்பொழுது ரயில் டிக்கெட் புக் செய்யும் புதிய சேவையைக் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி-யில் டிக்கெட் புக் செய்யலாம்

ஐ.ஆர்.சி.டி.சி-யில் டிக்கெட் புக் செய்யலாம்

கூகுள் பே பயனர்கள் இனி கூகுள் பே செயலி மூலம் ஐ.ஆர்.சி.டி.சி-யில் டிக்கெட் புக் செய்துகொள்ளும் வசதியை தற்பொழுது கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவை இன்று முதல் நடைமுறையும் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் பே செயலி

கூகுள் பே செயலி

ஐ.ஆர்.சி.டி.சி-யில் டிக்கெட் புக் செய்ய இனி ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்திற்குச் சொல்ல வேண்டியதில்லை, கூகுள் பே செயலி மூலமே உங்களின் ரயில் டிக்கெட்களை புக் செய்துகொள்ளலாம். டிக்கெட்களை பதிவு செய்து கூகுள் பே ஈசி பேமெண்ட் முறைப்படி எளிதாய் பணம் செலுத்திக்கொள்ளலாம்.

 உற்பத்தி முகாமைத்துவம் இயக்குநர் அம்பரிஷ் கெங்கே

உற்பத்தி முகாமைத்துவம் இயக்குநர் அம்பரிஷ் கெங்கே

இந்தியப் பயனர்களின் தேவையை உணர்ந்து இந்திய ரயில்வே துறையுடன் இணைந்து இந்த சேவையைத் தனது பயனர்களுக்கா அறிமுகம் செய்துள்ளதாகக் கூகுள் பே இன் உற்பத்தி முகாமைத்துவம் இயக்குநர் அம்பரிஷ் கெங்கே கூறியுள்ளார்.

ஐ.ஆர்.சி.டி.சி இன் முழு விபரம் இனி கூகுள் பே செயலியில்

ஐ.ஆர்.சி.டி.சி இன் முழு விபரம் இனி கூகுள் பே செயலியில்

கூடுதல் செய்தி என்னவென்றால் கூகுள் பே பயனர்கள், கூகுள் பே செயலி மூலம் ரயில் டிக்கெட் புக்கிங் உடன் சேர்த்து எத்தனை காலி இருக்கைகள் நிரப்பப்படாமல் உள்ளது, வெயிட்டிங் லிஸ்டு விபரம் மற்றும் ஆர்ஏசி டிக்கெட் நிலை விபரம் போன்ற அணைத்து சேவைகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஸ்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஸ்

இந்த புதிய சேவை தற்பொழுது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஸ் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உங்களின் கூகுள் பே செயலியை அப்டேட் செய்து இந்த சேவையை உடனே உங்கள் மொபைல் இல் பெற்றுகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Google Pay Now Allows Train Ticket Bookings in India Available on Both Android and iOS : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X