Home
Apps

Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது! புதிய நகரங்களின் பட்டியல் இதோ!

கொரோனா வைரஸின் பரவலுக்கு எதிரான போராட்டத்தை இந்தியா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கூகிள் பே பயன்பாடு தனது பயன்பாட்டு மேடையில் புதிதாக ஒரு ஹோஸ்ட் விருப்பத்தைச் சேர்த்துள்ளது, இந்த புதிய விருப்பம் கொரோனா ஊரடங்கு காலத்தில் பயனர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கமாக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகிள் பே புதிய அம்சம்

கூகிள் பே புதிய அம்சம்

கோவிட் -19 இன் பரவலுக்கு எதிரான போராட்டம் இந்தியாவில் கடுமையாகி உள்ளது, நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் 5 ஆம் கட்ட ஊரடங்கிற்கு இந்தியா தயாராகி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. கூகிள் பே பயனர்களின் சமூக தொலைதூரத்தில் கவனம் கொண்டுள்ளதால், பயனர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்குவதற்காகத் தயாரிப்பு பிரிவில் சில புதிய விருப்பங்களைச் சேர்த்தது.

35 நகரங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது

35 நகரங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது

கூகிள் பே பயன்பாட்டில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட அருகிலுள்ள ஸ்டோர்ஸ் விருப்பம் தற்பொழுது நாடு ம் உழுவதும் உள்ள 35 நகரங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம், பயனர்களுக்கு எந்தெந்த கடைகளில், அத்தியாவசிய பொருட்களைக் கிடைக்கிறது என்ற தகவலைக் கூகிள் பே மூலம் பார்க்க அனுமதிக்கிறது. முதலில் இந்தியா முழுவதும் ஒரு சில நகரங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்பாட் அம்சம், இப்போது நாடு முழுவதும் 35 நகரங்களில் கிடைக்கிறது.

 கூடுதல் வசதி

கூடுதல் வசதி

கூடுதலாக, இந்த அம்சம் தற்பொழுது வணிக நிறுவனங்கள் தங்களின் வணிக நேரங்களையும் குறிக்கக் கூடிய அனுமதியையும் வழங்கியுள்ளது. கடையில் சமூக இடைவெளி நடவடிக்கைகள் உள்ளனவா மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு உள்ளனவா என்பதையும் வணிக நிறுவனங்கள் பயன்பாட்டில் குறிப்பிடலாம். இதன் மூலம் பயனர்கள் அருகில் உள்ள கடைகளுக்குப் பாதுகாப்பாகச் சென்று வரக் கூகிள் எளிதாக்கியுள்ளது.

புதிய நகரங்களின் பட்டியல்

புதிய நகரங்களின் பட்டியல்

கூடுதலாக, மும்பையில் உள்ள பயனர்களுக்கு, கடைகள் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் இருக்கிறதா இல்லையா என்ற விபரங்களையும் கூகிள் பே காட்டுகிறது. தற்பொழுது இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ள 35 நகரங்களின் பட்டியலைப் பார்க்கலாம். தெலுங்கானாவில் ஹைதராபாத், ரங்க ரெட்டி, மற்றும் செகந்திராபாத் பகுதியில் கிடைக்கிறது. கர்நாடகாவில் பெங்களூரு மற்றும் மைசூரு பகுதியில் கிடைக்கிறது.

இந்த நகரங்களில் புதிய சேவை

இந்த நகரங்களில் புதிய சேவை

மகாராஷ்டிரா பகுதியில் மும்பை, நாக்பூர், நவி மும்பை மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியிலும், டெல்லி என்.சி.ஆர்: புது தில்லி, ஹரியானாவில் குருகிராம், ஃபரிதாபாத், குஜராத் பகுதியில் சூரத், அகமதாபாத், பீகாரில் பாட்னா, உத்தரபிரதேசம் பகுதியில் வாரணாசி, லக்னோ, காஜியாபாத், பிரயாக் ராஜ், கான்பூர், நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா, ஆந்திராவில் விசாகப்பட்டினம், மத்தியப் பிரதேசம் பகுதியில் இந்தூர் நகரங்களில் கிடைக்கிறது.

தமிழ்நாட்டில் சென்னையில் அறிமுகமா?

தமிழ்நாட்டில் சென்னையில் அறிமுகமா?

அதேபோல், மேலும் மேற்கு வங்கம் பகுதியில் கொல்கத்தா, ஒரிசாவில் புவனேஸ்வர், பஞ்சாப் பகுதியில் லூதியானா, சாஹிப்சாதா அஜித் சிங் நகர், சண்டிகர், கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி மற்றும் எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் தற்பொழுது இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் முதற்கட்டமாக இந்த சேவை கிடைக்கிறது. பின்வரும் நாட்களில் இந்த அம்சம் தமிழ்நாட்டில் ஊழல் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர் புக்கிங்

சமையல் எரிவாயு சிலிண்டர் புக்கிங்

நாடு முழுவதும் உள்ள கூகிள் பே பயனர்கள் தற்பொழுது தங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களான ஹெச்பி கேஸ், பாரத் பெட்ரோலியம் அல்லது இந்தியேன் ஆகியவற்றைக் கூகிள் பே பயன்பாட்டின் மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். இந்த மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர் சேவை வழங்குநர்களும் தற்பொழுது Google Pay பயன்பாட்டின் மூலம் தங்கள் சேவையை வழங்குகின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pay Nearby Stores Feature Expands To 35 Cities In India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X