Home
Apps

Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா? மாஸ் காட்டிய கூகுள்!

கூகுள் ஃபார் இந்தியா 5ம் எடிஷன் (Google for India) நிகழ்ச்சி டெல்லியில் வெகு விமர்சையாக நிகழ்ந்தது. கூகுள் நிறுவனத்தின் சில அற்புதமான அறிவிப்புகள் இந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகக் கூகுள் பே சேவையை மையமாகக் கொண்டு, கூகுள் நிறுவனம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என்பது தெளிவாகத் அதன் அறிவிப்பிற்கு பின் தெரியவந்துள்ளது.

கூகுள் ஃபார் இந்தியா 2019

கூகுள் ஃபார் இந்தியா 2019

கூகுள் நிறுவனம் இந்த கூகுள் ஃபார் இந்தியா நிகழ்ச்சியில், கூகுள் பே சேவையின் கீழ் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. கூகுளின் அறிவிப்புப்படி, அடுத்த வாரத்திலிருந்து கூகுள் பே பயனர்களுக்கு டோக்கனைஸ்டு கார்டு, கூகுள் பே ஃபார் பிசினஸ், ஜாப் சர்ச் சேவை மற்றும் பலவகையான புதிய சேவைகளை கூகுள் நிறுவனம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

918 மில்லியன் பரிவர்த்தனைகள்

918 மில்லியன் பரிவர்த்தனைகள்

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை முறையை மக்கள் ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில், ஆகஸ்ட் 2019 வரை சுமார் 918 மில்லியன் பரிவர்த்தனைகள் கூகுள் பே சேவையின் மூலம் இந்தியாவில் மட்டும் நடந்துள்ளது என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ள பயன்பாட்டுச் செயலியாகக் கூகுள் பே இருந்துள்ளது.

கூகுள் பே டோக்கனைஸ்டு கார்டு

கூகுள் பே டோக்கனைஸ்டு கார்டு

கார்டுகளுடனான தடையற்ற பரிவர்த்தனைக்கு, கூகுள் பே செயலி உங்கள் கார்டு விவரங்களைச் என்கிரிப்ட்டட் வடிவில் சேமித்து வைத்துக்கொள்ளும். டோக்கனைஸ்டு செய்யப்பட்ட கார்டுகளைப் பயன்படுத்தும் பொழுது, ஆட்டோமேட்டிக் OTP விபரங்களை நிரப்பும்படி உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் NFC சேவையை ஆதரிக்கும் சாதனங்களைப் பயன்படுத்தி, பயனர்கள் நேரடியாக PoS சாதனம் மூலம் பணம் செலுத்திக்கொள்ளலாம்.

கூகுள் பே ஃபார் பிசினஸ்

கூகுள் பே ஃபார் பிசினஸ்

கூகிள் நிறுவனம் வணிகங்களுக்கான புதிய சேவையை 'கூகுள் பே ஃபார் பிசினஸ்' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி கூகிள் பேவின், வணிக பதிப்பை நேரடியாக ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து, அதன் பயன்பாட்டை உடனே பெறமுடியும். பிசினஸ் அக்கௌன்ட் சேவைக்கான சரிபார்ப்பு செயல்முறைகள், DUO வீடியோ அழைப்பின் மூலம் கூகிளின் பிரதிநிதியுடன் நேரடியாக நடைபெறும் என்று கூகுள் அறிவித்துள்ளது.

கூகுள் ஸ்பாட் பிலாட்ஃபோர்ம்

கூகுள் ஸ்பாட் பிலாட்ஃபோர்ம்

கூகிள் பே பயன்பாட்டிற்குள், வணிகர்களால் பயன்படுத்தப்படும் ஸ்டோர் பிராண்டுகளை அமைக்க இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் Google Pay பயன்பாட்டை விட்டு வெளியேறாமல் நேரடியாக ஷொப்ப்பிங் செய்துகொள்ளலாம்.

NFC அடிப்படையிலான தொடர்பு

NFC அடிப்படையிலான தொடர்பு

Google Pay செயலி மூலம் ஆர்டர் செய்ய, பணம் செலுத்த மற்றும் கண்காணிக்க நீங்கள் ஸ்டோர் ஃபிரண்ட் ஆப்ஷனை பயன்படுத்தும்போது, ஸ்பாட் குறியீடுகளுக்கான NFC அடிப்படையிலான தொடர்பு API மற்றும் QR ஸ்கேன் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

என்ட்ரி லெவல் ஜாப் சர்ச்

என்ட்ரி லெவல் ஜாப் சர்ச்

நுழைவு நிலை வேலைகளுக்கான தேடலை எளிதாக்கக் கூகுள் நிறுவனம் இந்த 'என்ட்ரி லெவல் ஜாப் சர்ச்' சேவையைக் கூகுள் பே சேவைக்குள் அறிமுகப்படுத்தியுள்ளது. வேலை தேடுபவர்கள் Google Pay பயன்பாட்டிலிருந்து நேரடியாக விண்ணப்பிக்கலாம், புதிய வேலைக்காகத் திட்டமிடலாம் மற்றும் வேலை நேர்காணல்களுக்குப் பயிற்சி பெறலாம் என்று கூகுள் அறிவித்துள்ளது. இந்த அனைத்து புதிய சேவைகளும் அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் என்று கூகுள் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Google Pay Launched Tokenized Card Support, Job Search And Storefronts With New Interface : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X