கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா?
அனைத்து அம்சங்களும் ஸ்மார்ட் போனிலே வந்து விட்ட நிலையில் அது நமது மூன்றாவது கரம் போலவே ஆகிவிட்டது.

அதிகமாக கைப்பேசியில் நேரம் கழிப்பதால் நம் கண்கள் பாதிப்படையக் கூடும், மேலும் இதற்காகப் பெற்றோரிடம் திட்டு வாங்கிய அனுபவம் அனைவருக்குமே இருக்கும்.

சிஸ்டம் வைட் டார்க் மோடு
இதற்கு இப்பொழுது ஒரு விடிவு காலம் வரப் போகிறது. கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை எப்போது வேண்டுமானாலும் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யும் என்ற நிலையில், அதன் செயலிகள் அனைத்தையும் "சிஸ்டம் வைட் டார்க் மோடு" என்ற சேவைக்குள் கொண்டுவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 10 அல்லது ஆண்ட்ராய்டு 9 பை
கூகுளின் சில செயலிகள் ஏற்கனவே டார்க் மோடு சேவையில் செயல்பட்டு வரும் நிலையில், இன்னும் சில செயலிகளை அதன் பட்டியலில் சேர்த்துள்ளது கூகுள். இந்த சேவையைப் பயன்படுத்த ஆண்ட்ராய்டு பை அல்லது ஆண்ட்ராய்டு 10 இணக்கமான ஸ்மார்ட் போனை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கூகிள் பே வெர்ஷன்
கூகிள் பே v2.96.264233179 வெர்ஷனில் இந்த டார்க் மோடு சேவை செயல்படும். டார்க் மோடு சேவையில் செயல்படுவதன் மூலம் பேட்டரியின் ஆயுட்காலமும் அதிகரிக்கும். பேட்டரி சேவேர் மோடிலும் இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

டார்க் மோடு சேவை உள்ள மற்ற செயலிகள்
கூகுள் பே செயலியை போல கூகிள் பிட் (Google fit), பைல்ஸ் பை கூகிள் (Files by Google) மற்றும் கூகிள் கீப் ஆகிய செயலிகள் ஒரு மாதத்திற்கு முன் இருந்தே இந்த டார்க் மோட் சேவையில் செயல்பட்டு வருகின்றன.

கூகுள் தீவிரம்
ஆண்ட்ராய்டு 10 வெளியிடப்படுவதற்கு முன் அணைத்து முக்கிய செயலிகளையும் டார்க் மோடு இணக்கமாக்கக் கூகுள் நிறுவனம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications