கூகுள் பே தளத்தில் களமிறங்கிய பயோமெட்ரிக் சேவை! இனி பின் நம்பர் தேவையில்லை!

|

கூகுள் பே சேவையில் ஒருவழியாக அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த பயோமெட்ரிக் சேவையைக் கூகுள் நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் பே சேவையில் பயோமெட்ரிக் சேவை

கூகுள் பே சேவையில் பயோமெட்ரிக் சேவை

இதற்கு முன்பு வரை கூகுள் பே சேவையில், பணப்பரிமாற்றம் செய்வதற்குப் பயனர்கள் பழைய முறையான PIN -பின் நம்பர் முறையைப் பயன்படுத்தி வந்தனர். தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு 10 மற்றும் iOS 13 பதிப்புகளுக்கு பிறகு ஒருவழியாக பயோமெட்ரிக் சேவையைக் கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

வெர்ஷன் 2.100 அப்டேட்

வெர்ஷன் 2.100 அப்டேட்

கூகுள் நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ள கூகுள் பே வெர்ஷன் 2.100 அப்டேட்டில் புதிய பயோமெட்ரிக் சேவைக்கான ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் கூகுள் பே பயனர்கள் பணப்பரிமாற்றம் செய்வதற்குக் கைரேகை அல்லது பேஸ் அன்லாக் முறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

'ஏரியா 51 ஏலியன்கள், நிலவில் மனிதர்கள்' பற்றிய உண்மையை போட்டுடைத்த எட்வர்ட் ஸ்னோடென்!'ஏரியா 51 ஏலியன்கள், நிலவில் மனிதர்கள்' பற்றிய உண்மையை போட்டுடைத்த எட்வர்ட் ஸ்னோடென்!

புதிய அப்டேட் புதிய சேவை

புதிய அப்டேட் புதிய சேவை

ஆண்ட்ராய்டு 10 பதிப்பில் இயங்கிவரும் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த புதிய அப்டேட் தற்பொழுது கிடைக்கிறது. இந்த புதிய அப்டேட்டை பயன்படுத்தி பயனர்கள் பயோமெட்ரிக் முறையை ஆக்ட்டிவ் செய்துகொள்ளலாம்.

455 நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.!455 நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.!

பயோமெட்ரிக் செட்டிங்ஸ்

பயோமெட்ரிக் செட்டிங்ஸ்

உங்கள் கூகுள் பே செயலியில் உள்ள 'Sending Money Settings' சென்று பயோமெட்ரிக் முறையை ஆக்ட்டிவேட் செய்துகொள்ளுங்கள். இனி பணப்பரிமாற்றத்திற்கு PIN நம்பரை டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை. இதற்கு உங்கள் போன் ஆண்ட்ராய்டு 10 -திற்கு அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google Pay Introduced Biometric Authentication For Money Transfer For Android And iPhone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X