Home
Apps

Google Pay-வில் ஈஸி லோன்.. எளிமையாக ரூ.10,000 முதல் 9 லட்சம் வரை கடன்.. வீட்டிலிருந்தபடி எப்படி வாங்குவது?

நண்பர் ஒருவர் தனது அவசர தேவைக்காக கடன் கேட்டு அலைந்துகொண்டிருந்தார். அவர் நண்பர்களும் இல்லையென்று கைவிரித்திவிட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் சுற்றிக்கொண்டிருந்தவர். இறுதியில், அவருடைய கூகுள் பே ஆப்ஸில் (Google Pay Apps) இருந்து அவருக்கு தேவையான தொகையை பெற்றுக்கொண்டார்.

ஆம் மக்களே, கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (PhonePe) போன்ற ஆப்ஸ்களில் இருந்து நீங்கள் இப்போது சுலபமாக லோன் பெற முடியும். ஆம் மக்களே, கூகுள் பே ஆப்ஸை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான தொகையை கடனாக பெற முடியும். உண்மையாக தான் சொல்கிறோம், நீங்கள் நினைப்பது போல, வெறும் ரூ. 25,000 அல்லது ரூ. 50,000 வரை தான் கிடைக்கும் என்று தவற நினைத்துவிடாதீர்கள்.

Google Pay-வில் ஈஸி லோன்.. எளிமையாக ரூ.10,000 முதல் 9 லட்சம் வரை கடன்

கூகுள் பே ஆப்ஸ் மூலம் ஈஸியா கடன் வாங்கலாம் (Get Loan Easily From Google Pay Apps):
கூகுள் பே மூலம் லட்சங்களில் கடன் வாங்கலாம் மக்களே. லட்சம் என்றதும் அதிகமாக வெறும் 1 லட்சம் வரை தான் கிடைக்கும் என்று மீண்டும் தவறாக நினைத்துவிடாதீர்கள். கூகுள் பே மூலம் இப்போது நீங்கள் அதிகபட்சமாக ரூ. 9 லட்சம் வரை கடனாக பெறலாம். சரியாக சொல்ல வேண்டுமென்றால் கூகுள் பே மூலம் ரூ. 10,000 முதல் ரூ. 9 லட்சம் வரை கடனாக நீங்கள் பெற முடியும்.

கூகுள் பே மூலமாக இந்த கடன் தொகை வாங்க கிடைக்கிறது. ஆனால், இதை கூகுள் பே நிறுவனமே நேரடியாக வழங்குகிறது என்பது பொருளல்ல. கூகுள் பே நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த பல கடன் வழங்கும் நிறுவனத்தின் மூலம் இந்த தொகை இப்போது உங்களுக்கு கிடைக்கப்போகிறது என்பதே உண்மையாகும். ஆகையால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் கடன் வழங்கும் வல்லுனரை சரியாக தேர்வு செய்யுங்கள்.

கூகுள் பே ஆப்ஸ் மூலமாக கடனை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். முதலில் உங்கள் கூகுள் பே ஆப்ஸ் விருப்பங்களில் இருந்து, கேட் லோன் (Get Loan) என்ற விருப்பத்தை கிளிக் செய்து, அப்பளை நவ் (Apply Now) என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். இப்போது கூகுள் பே உங்களை மற்றொரு பக்கத்திற்கு அழைத்து செல்லும்.

Google Pay-வில் ஈஸி லோன்.. எளிமையாக ரூ.10,000 முதல் 9 லட்சம் வரை கடன்

வீட்டிலிருந்தபடி லோன் எடுக்க என்ன ஆவணங்கள் தேவை?
இப்போது உங்கள் விபரங்களை ஒன்றின் பின் ஒன்றாக சரியாக நிரப்பி வரவேண்டும். இதில் உங்கள் மொபைல் நம்பர் (Mobile number), ஈமெயில் ஐடி (email ID), முகவரி (Address), பின்கோடு (Pincode), அலுவலக வேலை விபரம் (Office and Job Details), அலுவலக முகவரி (Office address), பான் அட்டை விபரம் (PAN card details), ஆதார் அட்டை விபரம் (Aadhaar Card details) போன்ற விபரங்கள் உங்களிடமிருந்து கேட்கப்படும்.

உங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை வைத்து, உங்கள் சிபில் ஸ்கோர் (Cibil Score) மதிப்பெண்ணை கணக்கிடப்படும். அதை வைத்து, உங்களுக்கு கிடைக்கும் தொகை பற்றிய விபரங்கள் திரையில் காண்பிக்கப்படும். ரூ. 10,000 முதல் ரூ. 9 லட்சம் இடையிலான தொகை உங்களுக்கு கடனாக வழங்கப்படும். நீங்கள் எடுக்கும் தொகைக்கான தவணை விபரம் மற்றும் EMI விபரம் உங்களுக்கு காண்பிக்கப்படும்.

உதாரணமாக, கூகுள் பே மூலம் பெறப்படும் கடன் தொகைக்கு 13.9 சதவீதம் முதல் வட்டி வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கடனுக்கான தவணை மாதம் 6 மாதங்கள் முதல் 4 வருடங்களை செல்லுபடியாகும் விருப்பத்தை பெறுவீர்கள். இதே முறையை பின்பற்றி நீங்கள் போன்பே மூலமாகவும் கடன் தொகையை பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pay Apps Loan How to Get Easy Loan Amount From Rs 10000 to Rs 9 Lakh By Staying at Home
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X