Home
Apps

உங்கள் 4ஜி இன்டர்நெட் டேட்டா வீணாகாமல் தடுக்க கூகுள் உருவாக்கிய புதிய வழி.!

டேட்டாலி அப்ளிகேஷன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 5.0 வெர்சனுக்கு மேல் உள்ள அனைத்து இயங்குதளத்திலும் பயன்படுத்த முடியும்.

By Prakash S

கூகுள் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி ஸ்மார்ட்போனில் 4ஜி இன்டர்நெட் டேட்டா வீணாகாமல் தடுக்க கூகுள் நிறுவனம் இப்போது புதிய முயற்சிகளை உருவாக்கிய வண்ணம் உள்ளது. மேலும் வருங்காலத்தில் அனைவருக்கும் பயன்படும் வகையில் மிக அதிமான அப்ளிகேஷன்களை உருவாக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் 4ஜி இன்டர்நெட் டேட்டா வீணாகாமல் தடுக்க கூகுளின் புதிய வழி.!


ஸ்மார்ட்போனில் 4ஜி இன்டர்நெட் டேட்டா வீணாகாமல் தடுக்க கூகுள் நிறுவனம் டேட்டாலி (Google Datally) எனும் புதிய அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளது. இந்த செயலியின் முக்கிய அம்சம் என்னவென்றால் மொபைலில் பயன்படுத்தப்படும் 4ஜி டேட்டாவை சேமிக்கும், அதன்பின்பு அருகில் பொது வைபை கிடைத்தால் அதைத் தெரியப்படுத்தும் வகையில் இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

உங்கள் 4ஜி இன்டர்நெட் டேட்டா வீணாகாமல் தடுக்க கூகுளின் புதிய வழி.!

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள டேட்டாலி எனும் அப்ளிகேஷன் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது, இந்த அப்ளிகேஷனை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தபின்பு பல்வேறு அனுமதி கேட்கப்படும், அதற்கு தகுந்தபடி தேர்வுசெய்து கொள்ள வேண்டும்.

மேலும் இந்த அப்ளிகேஷனில் தினசரி நீங்கள் உபயோகம் செய்த இன்டர்நெட் பயன்பாடுகளை பற்றி எளிமையாக தெரிந்து கொள்ள முடியும். மேலும் உங்களுக்கு தேவையில்லா செயலியை இந்த டேட்டாலி அப்ளிகேஷனை கொண்டு நீக்க முடியும்.

உங்கள் 4ஜி இன்டர்நெட் டேட்டா வீணாகாமல் தடுக்க கூகுளின் புதிய வழி.!

டேட்டாலி அப்ளிகேஷனில் உள்ள manage data-எனும் பகுதியை தேர்வு செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும், தேவையில்லா செயலியை லாக் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)

இந்த டேட்டாலி அப்ளிகேஷனில் ஸ்பீடோமீட்டர் வசதி இருப்பதால் எந்த இடத்திலும் இன்டர்நெட் ஸ்பீடை அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது, மேலும் தேவையற்ற அப்ளிகேஷன் பேக் கிரவுண்டில் செயல்படுவதைத் தடுக்கிறது, இதனால் டேட்டா சேமிக்கப்படுகிறது.

உங்கள் 4ஜி இன்டர்நெட் டேட்டா வீணாகாமல் தடுக்க கூகுளின் புதிய வழி.!

டேட்டாலி அப்ளிகேஷன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 5.0 வெர்சனுக்கு மேல் உள்ள அனைத்து இயங்குதளத்திலும் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூகுள் ஸ்டோரில் இருந்து மிக எளிமையாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
Google new app for Save Mobile internet Data ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X