WhatsApp-ற்கு போட்டியாக Google Messages RCS ஆப் அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

|

கூகிள் நிறுவனம் வாட்ஸ்அப் பயன்பாட்டிற்குப் போட்டியாகப் புதிதாக Google Messages என்ற புதிய ஸ்மார்ட்போன் அப்பை அறிமுகம் செய்துள்ளது. விரைவில் நீங்கள் WhatsApp மற்றும் iMessage போன்ற பயன்பாடுகளுக்குப் பதிலாகக் கூகிள் நிறுவனத்தின் இந்த புதிய Google Messages App பயன்பாட்டை பயன்படுத்தத் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகிள் மெசேஜஸ் RCS

கூகிள் மெசேஜஸ் RCS

கூகிள் நிறுவனத்தின் இந்த புதிய மெசேஜிங் பயன்பாட்டில், கூகிள் நிறுவனம், வாட்சஅப் பயன்பாட்டில் உள்ளது போன்ற சில அம்சங்களையும் வழங்கப் போகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கூகிளின் இந்த புதிய முயற்சி நிச்சயம் வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக மையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயன்பாடு பல Android சாதனங்களில் முன்பே நிறுவப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்திற்கு கூகிள் RCS என்று பெயரிட்டுள்ளது.

RCS என்றால் என்ன?

RCS என்றால் என்ன?

RCS என்பது கூகிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அதன் மிகப்பெரிய அம்சமாகும். RCS என்பது ரிச் கம்யூனிகேஷன் சர்வீஸ் (Rich Communication Services) ஆதரவை குறிக்கிறது. இந்த அம்சம் உங்களை வாட்ஸ்அப் போலவே மல்டிமீடியா மெசேஜ், எச்.டி புகைப்படங்கள், வீடியோக்கள், GIF-கள் மற்றும் தேவையான டாக்குமெண்ட் பைல்-களையும் நீங்கள் அனுப்பலாம். இந்த புதிய RCS அம்சம் தற்போது லிமிட்டட் ஆபரேட்டர்களை ஆதரிக்கிறது.

WhatsApp பயனர்களே உஷார்! வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க!WhatsApp பயனர்களே உஷார்! வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க!

வைஃபை அல்லது டேட்டா நெட்வொர்க் இருந்தால் போதும்

வைஃபை அல்லது டேட்டா நெட்வொர்க் இருந்தால் போதும்

பிரான்ஸ், மெக்ஸிகோ மற்றும் பிரிட்டனைத் தொடர்ந்து, இந்தியா, இத்தாலி மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கூகிளின் இந்த RCS மெசேஜ் ஆதரவு பயன்பாட்டிற்குக் கிடைக்கிறது. கூகிள் நிறுவனம் தற்பொழுது இந்த புதிய சேவையை வைஃபை அல்லது டேட்டா நெட்வொர்க் மூலம் அனைவருக்கும் பயன்படுத்தக் கிடைக்கும்படி விரிவுபடுத்தி வருகிறது. வாட்ஸ்அப் போல, பயனர் டடைப்பிங் நோட்டிபிகேஷன், மெசேஜ் ரீட் நோட்டிபிகேஷன் அனைத்தும் இதில் உள்ளது.

iMessage போன்ற இமோஜி ரியாக்ஷன்

iMessage போன்ற இமோஜி ரியாக்ஷன்

இந்த பயன்பாட்டிற்கான புதிய ஈமோஜி ரியாக்ஷன்களை கூகிள் சோதித்து வருகிறது. இந்த அம்சம் வந்த பிறகு, நீங்கள் மெசேஜ்ஜை நீண்ட நேரம் அழுத்தி, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ரியாக்ஷனை தேர்வு செய்யலாம். பேஸ்புக் மெஸ்சேன்ஜர் பயன்பாட்டில் உள்ளது போன்றே, பயனரின் மெசேஜை நீண்ட நேரம் அழுத்தி தம்ஸ் அப், தம்ஸ் டவுன், கோபம், சிரிப்பு போன்ற ஈமோஜிகள் வழங்கப்பட்டுள்ளது.

சும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்!சும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்!

எண்டு-டு-எண்டு என்க்ரிப்ஷன்

எண்டு-டு-எண்டு என்க்ரிப்ஷன்

சமீபத்தில் வெளியான தகவலின் படி, கூகிள் நிறுவனத்தின் இந்த புதிய ரிச் கம்யூனிகேஷன் ஆதரவு வாட்ஸ்அப் பயன்பாட்டில் இல்லது போல முதல் எண்டு-டு-எண்டு என்க்ரிப்ஷன்உடன் வருகிறது. இந்த அம்சத்தின் உதவியுடன் உங்கள் சாட்கள் மற்றும் மெசேஜ்கள் முற்றிலுமாக பாதுகாப்பாக இருக்கும்.

மூன்றாம் நபருக்கு அனுமதி இல்லை

மூன்றாம் நபருக்கு அனுமதி இல்லை

இதனால், அனுப்புநர் மற்றும் பெறுநரைத் தவிர வேறு எந்த வெளிநபரும் உங்கள் மெஸ்சேஜ்களை படிக்க முடியாது. இதே போன்ற அம்சம் வாட்ஸ்அப்பிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google Messages RCS Feature May Takeover Whatsapp Messaging Platform Users : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X