கூகிள் நிறுவனத்திடமிருந்து இப்படி ஒரு அறிவிப்பை எதிர்பார்க்கவில்லை! இதுக்கு இனிமேல் கட்டணமா?

|

கூகிள் நிறுவனம் தற்பொழுது யாரும் எதிர்பார்த்திடாத புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. கூகிள் மீட் வீடியோ காலிங் சேவையின் இலவச பயனர்களுக்கான மீட்டிங் கால அவகாசம் தற்பொழுது 60 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. கூடுதலாக நிறுவனம் சில தகவல்களையும் வெளியிட்டுள்ளது அவை என்னவென்று பார்க்கலாம்.

புதிய அறிவிப்பு

புதிய அறிவிப்பு

இந்த புதிய அறிவிப்பு கூகிள் மீட்டிங் தளத்தில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. புதிய மாற்றங்கள் தவிர்த்து ப்ரோமோ மாற்றங்கள் மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்கள் காலாவதியாவது பற்றி எந்த தகவலையும் கூகிள் வெளியிடவில்லை.

இலவச மீட்டிங் காலத்தில் மாற்றம்

இலவச மீட்டிங் காலத்தில் மாற்றம்

இவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், நிச்சயம் தகவல் வழங்குவோம் என கூகிள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திற்குத் தகவல் வழங்கியுள்ளார்.கூகிள் மீட் எக்ஸ்டென்ஷன் மூலம் கூகுள் அக்கவுண்ட் வைத்திருப்போர் அனைவருக்கு இலவச மீட்டிங் காலம் அதிகபட்சமாக 100 பேருடன் எந்த கால அவகாசமும் இன்றி பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும்.

கூகிள் எச்சரிக்கை: ஆபத்தான 17 ஆப் பட்டியல்- யோசிக்காம உடனே டெலிட் செய்யுங்கள்!கூகிள் எச்சரிக்கை: ஆபத்தான 17 ஆப் பட்டியல்- யோசிக்காம உடனே டெலிட் செய்யுங்கள்!

ஜி சூட் மற்றும் ஜி சூட் பார் எட்யூகேஷன்

ஜி சூட் மற்றும் ஜி சூட் பார் எட்யூகேஷன்

செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் ஜி சூட் மற்றும் ஜி சூட் பார் எட்யூகேஷன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். இந்த இரண்டு சேவைகளிலும் மீட்டிங் நேரத்தின் போது அதிகபட்சம் 250 பேர் வரை கலந்து கொள்ளும் வசதியை கூகிள் வழங்குகிறது.

ஒரு லட்சம் பேருடன் நேரலை

ஒரு லட்சம் பேருடன் நேரலை

அதேபோல், ஒற்றை டொமைனில் ஒரு லட்சம் பேருடன் நேரலை செய்யும் வசதியையும், மீட்டிங் ரெக்கார்டிங் செய்து கூகுள் டிரைவில் சேவ் செய்துகொள்ளும் வசதியையும் நிறுவனம் இவர்களுக்கு வழங்கியுள்ளது.பொதுவாக இந்த அம்சங்கள் ஜி சூட் என்டர்பிரைஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாத கட்டணமா?

மாத கட்டணமா?

இதற்கான மாத கட்டணமாக ஒவ்வொரு பயனர்களிடமும் சுமார் 25 டாலர் வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பின்படி இதன் கட்டணம் ரூ. 1800 என்ற விலையை நெருங்குகிறது. கூகிள் நிறுவனத்திடமிருந்து இப்படி ஒரு அறிவிப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.

Best Mobiles in India

English summary
Google Meet to Limit Meetings to 60 Minutes on Free Plans After September 30 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X