இந்தியர்களுக்காகக் கூகுள் மேப்ல இப்படி எல்லாம் புது அப்டேட்டா?

|

இந்தியப் பயனர்களுக்காகக் கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப் செயலியில் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. டீகற்பொழுது இந்த புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஸ் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்காகக் கூகுள் மேப்ல இப்படி எல்லாம் புது அப்டேட்டா?

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புதிய அப்டேட்டின் படி, இந்திய பயனர்கள் பயணிக்கும் பேருந்து இருக்கும் அசல் இடம், உங்களுக்கும் பேருந்திற்கும் இடையில் உள்ள டிராபிக், தாமத நேரம் போன்றவற்றை நேரடியாகக் கவனித்துக்கொள்ள முடியும்.

அதேபோல் புதிதாக அறிமுகம் செய்துள்ள ரயில் சேவை மூலம் ரயில் வரும் நேரம், இருக்கும் இடம், தாமத நேரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். இந்த சேவையைக் கூகுள் நிறுவனம் "வெர் இஸ் மை ட்ரெயின்" செயலியுடன் இணைந்து செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக மிக்ஸுடு மோடு நவிகஷன்ஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவை மூலம் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு ஆட்டோவில் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் எங்கிருந்து மெட்ரோ எடுத்துக்கொள்ள வேண்டும், எங்கிருந்து பஸ் மாரி செல்ல வேண்டும் இதில் சென்றால் விரைவாகச் செல்வீர்கள் என்று அனைத்து தகவலையும் இந்த புதிய அப்டேட் உங்களுக்கு வழங்கும்.

Best Mobiles in India

English summary
New Update On Google Maps Brings Live Train And Bus Status And New Mixed Navigation Feature : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X