கணவர் சென்ற இடத்தை காட்டிக்கொடுத்த Google Maps - மனைவியிடம் சிக்கியது எப்படி தெரியுமா?

|

கூகிள் மேப் பொய் சொல்லாது டா என்று நண்பர்களுக்குள் வசனம் பேசுவது போல, ஒரு குடும்பத் தலைவியும் இதே வசனத்தைச் சொல்லி அவரின் கணவரை சும்மா லெப்ட் ரைட் என்று வாங்கி கிழித்து இருக்கிறார். கூகிள் மேப்ஸ் இல் லொக்கேஷன் ஹிஸ்டரி தகவலை ஆராய்ந்து பார்த்து மனைவி தன்னை கொடுமை செய்வதாகக் கூறி காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட கணவர், கூகிள் மேப்ஸ் நிறுவனத்தின் மீது புகாரளித்துள்ளார்.

கூகிள் மேப்ஸ் மடித்து வழக்கு பதிவு செய்த கணவர்

கூகிள் மேப்ஸ் மடித்து வழக்கு பதிவு செய்த கணவர்

மயிலாடுதுறை பகுதியில் உள்ள லால் பகதூர் நகரைச் சேர்ந்தவர் ஆர்.சந்திரசேகரன், இவர் தான் தற்பொழுது கூகிள் மேப்ஸ் பொய்யான தகவலை வழங்கி என் குடும்பத்தில் பெரிய பிரளயம் ஏற்படச் செய்துள்ளது என்று காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இவர் அதேபகுதியில் உள்ள பெரிய கடைவீதியில் வணிக நிறுவனம் வைத்து நடத்திவருகிறார். வீட்டிலிருந்து நேராக நிறுவனம் சென்று த்திரும்பும் எனக்கு இப்படி ஒரு நிலையா? என்று குமுறுகிறார்.

தினமும் 'யுவர் டைம் லைன்' செக் செய்யும் மனைவி

தினமும் 'யுவர் டைம் லைன்' செக் செய்யும் மனைவி

சந்திரகேரனின் மனைவி, அவர் தினமும் அலுவலகம் சென்றுவிட்டு வீடு திரும்பியதும், அவரின் ஸ்மார்ட்போனில் உள்ள கூகிள் மேப்ஸ் பயன்பாட்டை திறந்து சந்திரகேரனின் 'யுவர் டைம் லைன்' பகுதியைத் தினமும் ஆராய்ந்து பார்ப்பதை வழக்கமான பழக்கமாகவே பின்பற்றியிருக்கிறார். அப்படி சமீபத்தில் கூகிள் மேப்ஸ் இல் லொகேஷன் ஹிஸ்டரி தகவலை ஆராய்ந்து பார்த்த மனைவிக்கு சந்திரகேரன் சொல்லாத இடங்களுக்கும் சென்று வந்ததாகக் காட்டியுள்ளது.

வீட்டிற்கு வராமல் ஊர் சுற்றிய கணவர்

வீட்டிற்கு வராமல் ஊர் சுற்றிய கணவர்

வேலை முடித்துவிட்டு நேராக வீட்டிற்கு வராமல், பல இடங்களுக்குச் சென்று ஊர் சுற்றி வந்திருப்பதாகக் கூறி, சந்திரகேரனின் மனைவி அவரை சந்தேகப்பட்டு சண்டை போட்டிருக்கிறார். கூகுள் மேப் சந்திரசேகரன் செல்லாத இடங்களுக்குக் கூட சென்றுவந்ததாகக் காட்டிய தகவல் அவர் மனைவியைத் தூக்கம் இல்லாமல் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இதனால் சந்திரகேரன் மட்டுமின்றி, அவரது குடும்பமே பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

கூகிள் மேப்ஸ் காரணத்தால் மனைவி கொடுமை செய்கிறார்

கூகிள் மேப்ஸ் காரணத்தால் மனைவி கொடுமை செய்கிறார்

மே மாதம் 20ம் தேதி சந்திரகேரன் செல்லாத இடங்களுக்கும் அவர் சென்றுவந்துள்ளதாகக் கூகிள் மேப்ஸ் காட்டியதால் தான் தனது நிம்மதி உருக்குலைந்துள்ளது என்று சந்திரகேரன் கொந்தளிக்கிறார். தவறான தகவலைக் கூகிள் மேப்ஸ் காட்டியதால் சந்தேகப்பட்டு தன்னை தன் மனைவி கொடுமைப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். குடும்ப உறவினர்கள், மனநல மருத்துவர்கள் எனப் பலரும் அவர் மனைவிக்கு ஆலோசனை கூறியும் அவர் கூகிள் மேப்ஸ் தகவலை மட்டுமே நம்பியுள்ளார்.

கூகிள் மேப்ஸ் பொய் சொல்லாது - மனைவி

கூகிள் மேப்ஸ் பொய் சொல்லாது - மனைவி

கூகிள் மேப்ஸ் பொய் சொல்லாது என்று அவரின் மனைவி ஆணித்தரமாக நம்புகிறார். ஆனால், அவரின் மனைவி தன்னை நம்பத் தயாராக இல்லை என்று சந்திரசேகரன் கூறியுள்ளார். இதனால், கூகுள் மேப்ஸ் லொகேஷன் தகவல் பதிவுகளை இணைத்து, கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், நீதி வழங்கவும், நஷ்ட ஈடு கோரியும் சந்திரசேகரன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கூகிள் மேப்ஸ் பயன்பாட்டில் எப்படி லொஸ்ஷன் ஹிஸ்டரி பார்ப்பது?

கூகிள் மேப்ஸ் பயன்பாட்டில் எப்படி லொஸ்ஷன் ஹிஸ்டரி பார்ப்பது?

 • முதலில் கூகிள் மேப்ஸ் பயன்பாட்டை ஓபன் செய்யுங்கள்.
 • கூகிள் மேப்ஸ் பயன்பாட்டின் வலது மேல் மூலையில் காணப்படும் பயனரின் ப்ரொஃபைல் படத்தை கிளிக் செய்யுங்கள்.
 • இப்பொழுது உங்களுக்கு மெனுவில் யுவர் டைம்லைன் என்ற விருப்பம் தெரியும்.
 • இந்த விருப்பத்தை கிளிக் செய்ததும், Day டேப் கீழ் நீங்கள் இன்று சென்ற இடத்தின் லொக்கேஷன் மற்றும் சென்ற நேரம் காண்பிக்கப்படும்.
 • உலகில் எங்கு சென்றாலும் பின்தொடரும் கூகிள் மேப்ஸ்

  உலகில் எங்கு சென்றாலும் பின்தொடரும் கூகிள் மேப்ஸ்

  • Places என்ற அடுத்த டேப் விருப்பத்தை கிளிக் செய்தால் இதுவரை நீங்கள் சென்ற அனைத்து இடங்களின் தகவலும் காண்பிக்கப்படும்.
  • Cities விருப்பத்தைத் தேர்வு செய்தல் நீங்கள் இதுவரை சென்ற நகரங்களைக் காண்பிக்கும்.
  • World டேப் கிளிக் செய்தால் உலகத்தில் நீங்கள் எங்கெல்லாம் பயணம் செய்துள்ளீர்கள் என்று காண்பிக்கும்.

Best Mobiles in India

English summary
Google Maps Showing Fake Location History Mayiladuthurai Husband Complaints To Police : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X