இந்தியர்களுக்கு கூகுள் மேப்ஸ் தரும் இன்ப அதிர்ச்சி.!

ற்கனவே கூகுள் மேப்பில் ஒரு இடத்தை தெரிந்து கொள்ள புறப்படும் இடம், செல்லுமிடம் குறிப்பிட்டு அந்த இடத்தை தேடி கொள்வதை போலத்தான் இந்த வசதியும் என்றாலும் இதில் சில கூடுதல் அம்சங்கள் உள்ளன.

|

ஆண்ட்ராய்டு மொபைலில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தி வரும் இந்திய பயனாளிகளுக்கு கூகுள் ஒரு சிறப்பு சலுகையை வழங்கி இன்ப அதிர்ச்சியை வழங்கியுள்ளது. இதன்படி கூகுள் மேப்பில் நமக்கு தேவையான 14 இடங்கள் குறித்த தகவல்களை பெறலாம். குறிப்பாக நமக்கு அருகில் உள்ள உணவகம், மால்ஸ், மெட்ரோ நிலையங்கள், மற்றும் வீடு மற்றும் அலுவலகத்திற்கு செல்லும் வழி ஆகிய வசதிகளை பெறலாம். இந்த புதிய வசதி கூகுள் மேம்ப்ஸ் 9.72.2 வெர்ஷனை பயன்படுத்தும் ஒருசில இந்திய பயனாளிகளுக்கு மட்டும் கிடைக்கும்.

இந்தியர்களுக்கு கூகுள் மேப்ஸ் தரும் இன்ப அதிர்ச்சி.!

சமீபத்திய ஆண்ட்ராய்ட் மொபைல் கூகுள் மேப் வெர்ஷனில் ஒரு சிறிய கார்டு தெரியும். அதில் உள்ள மெனுவில் மூன்று ஷார்ட்கட் செலக்ட் செய்து கொள்ளலம். தேவைப்பட்டால் மேலும் சில மெனுவையும் ஆட் என்ற பட்டன் மூலம் செய்து கொள்ளலாம். இந்த கார்ட் மேலே உள்ள எடிட் பட்டனிலும் இருக்கும். இதன் மூலம் ஏதேனும் நான்கு ஷார்ட் கட்களை உருவாக்கி கொள்ளலாம்.

இதன் மூலம் நமக்கு அருகில் உள்ள உணவகம், மால்ஸ், சினிமா தியேட்டர், மெட்ரோ ரயில் நிலையம், பேருந்து நிலையம், மற்றும் வீட்டுக்கு செல்லும் வழி, அலுவலகம் செல்லும் வழி ஆகியவற்றை கூகுள் மேப் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒரே ஒரு சிங்கிள் ஸ்டெப் மூலம் இந்த விபரங்களை நேவிகேஷன் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி தற்போது கிடைத்துள்ளது

இந்தியர்களுக்கு கூகுள் மேப்ஸ் தரும் இன்ப அதிர்ச்சி.!

ஏற்கனவே கூகுள் மேப்பில் ஒரு இடத்தை தெரிந்து கொள்ள புறப்படும் இடம், செல்லுமிடம் குறிப்பிட்டு அந்த இடத்தை தேடி கொள்வதை போலத்தான் இந்த வசதியும் என்றாலும் இதில் சில கூடுதல் அம்சங்கள் உள்ளன. இந்த ஷார்ட்கட் மூலம் செல்ல வேண்டிய இடம் மட்டுமின்றி அருகில் உள்ள முக்கிய இடங்களளஇயும் தெரிந்து கொள்ளும் மிகவும் பயனளிக்கின்றது. கூகுள் மேப்பின் இந்த ஷார்ட்கட்கள் கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

இந்த வசதி இந்தியாவில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வர் பக்கமிருந்து கிடைக்கும் அப்டேட்டை பொறுத்தே ஒருசிலருக்கு இந்த வசதி கிடைக்கும். மேலும் இந்த வசதி இந்தியாவில் உள்ள ஐஒஎஸ் பயனாளிகளுக்கும் கிடைக்காது.

இந்தியர்களுக்கு கூகுள் மேப்ஸ் தரும் இன்ப அதிர்ச்சி.!

ஆனால் அதே நேரத்தில் கூகுள் குழுவினர் இந்தியாவில் மேலும் சில புதிய வசதிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் கூகுள் மேப்ஸ் இயக்குனர் சுரேன் ரெஹிலா அவர்கள் கூறியபோது கொல்கத்தா பயனாளிகளுக்கு இந்த வசதி கடந்த ஆண்டே கிடைத்துவிட்டது என்றும், இந்த வசதி சென்னை, டெல்லி மற்றும் மும்பை போக்குவரத்து காவலர்களுக்கு பயன்படும் வகையில் இந்த வசதியை மேம்படுத்தவுள்ளதாகவும் கூறினார். இதன் மூலம் டிராபிக் அதிகமாகி பிரச்சனை ஏற்படும் இடங்களை போக்குவரத்து காவலர்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)

இந்தியர்களுக்கு கூகுள் மேப்ஸ் தரும் இன்ப அதிர்ச்சி.!

மேலும் கூகுள் மேப்ஸ் ஒரு புதிய வசதியாக முகவரியை பதிவு செய்து அந்த இடத்தை தேடும் வசதியையும் அளித்துள்ளது. முகவரி, பின்கோடு ஆகியவற்றை பதிவு செய்து அந்த இடத்தை மேப்பில் தெரிந்து கொள்ளலாம். இந்த வசதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, பெங்காளி ஆகிய மொழிகளில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google Maps Shortcuts Now Available for Select Users in India Let You Choose From 14 Quick Actions ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X