இண்டர்நெட் இல்லாமல் Google Maps எப்படி பயன்படுத்துவது! அவசரக் காலத்தில் உதவும் டிப்ஸ்!
உலகத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் ஒரு முக்கிய ஆப் ஆகா கூகிள் மேப்ஸ் இருக்கிறது. கூகிள் மேப்ஸ் பயனர்களுக்குப் பல விதமான சேவையை வழங்கி வருகிறது. ஆனால், இன்னும் பலருக்குக் கூகிள் மேப்ஸ் பயன்பாட்டில் இன்டர்நெட் சேவை இல்லாமல் கூட உங்களால் மேப்-ஐ நேவிகேஷனை பயன்படுத்த முடியும் என்பது தெரியாமல் இருக்கிறது. அதை எப்படி பயன்படுத்தலாம் என்ற டிப்ஸை பார்க்கலாம்.

கூகிள் மேப்ஸ் ஆஃப்லைன்
நீங்கள் ஒரு புதிய இடத்திற்குச் செல்லும்போது கூகிள் மேப்ஸ் உங்களுக்கு ஒரு நண்பனாக உதவிபுரிகிறது. இந்த பயன்பாட்டுச் செயலி மேப்பாக மட்டுமில்லாமல் பல வழிகளில் மக்களுக்கு உதவி வருகிறது. குறிப்பாக இதில் ஏராளமான சேவைகளைக் கூகிள் மேப்ஸ் வழங்கி வருகிறது. ஆனால், கூகிள் மேப்ஸ் பயன்பாட்டில் 'கூகிள் மேப்ஸ் ஆஃப்லைன்' என்ற ஆஃப்லைன் மேப் சேவை இருப்பது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.

இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் கூட பயன்படுத்தலாம்
இந்த கூகிள் மேப்ஸ் ஆஃப்லைன் சேவையைப் பயன்படுத்தி, உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு இல்லாத இடம் மற்றும் குறைந்த இன்டர்நெட் இணைப்பு கொண்ட லோ-கவரேஜ் பகுதிகளில் கூட மேப்ஸ் சேவையை எந்தவித சிக்கலும் இல்லாமல் பயன்படுத்திக்கொள்ளக் கூகிள் நிறுவனம் இந்த அம்சத்தை வழங்கியுள்ளது. இன்டர்நெட் இல்லாத இடங்களிலும், அவசரமான இக்கட்டான சூழ்நிலையிலும் இது கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆஃப்லைனில் வழிகள் மற்றும் திசைகள்
இந்த கூகிள் மேப்ஸ் ஆஃப்லைன் அம்சத்தைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களுக்குத் தேவைப்படும் ஆஃப்லைன் மேப்ஸ் வரைபடத்தையா தங்களின் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் மேப்ஸ் வரைபடத்தைக் கொண்டு ஆஃப்லைனில் வழிகளையும் மற்றும் திசைகளையும் மிகத் துல்லியமாகக் கூகிள் மேப்ஸ் காட்டுகிறது. இதை எப்படிச் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

ஆஃப்லைன் கூகிள் மேப்ஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
- முதலில் உங்கள் கூகிள் மேப்ஸ் பயன்பாட்டிற்குச் செல்லுங்கள்
- ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு தளங்களிலும் இந்த சேவை உங்களுக்குக் கிடைக்கிறது.
- மேல் இடது மூலையில் உள்ள மெனு ஐகானைத் கிளிக் செய்து, ‘ஆஃப்லைன் மேப்ஸ்' கிளிக் செய்யவும்.
- இப்போது Select Your Own Map ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- இப்போது உங்களுக்கு நீங்கள் விரும்பும் இடத்தின் வரைபடத்தைப் பதிவிறக்கம் செய்ய ஒரு சதுர பெட்டி கொடுக்கப்படும்.
- இந்த சதுரங்க பெட்டியை உங்களுக்குத் தேவைப்படும் இடத்தில் வைத்து Download கிளிக் செய்யுங்கள்.
- நீங்கள் செலக்ட் செய்த வரைபடத்தைப் பதிவிறக்கம் செய்ய எவ்வளவு டேட்டா தேவை என்பதைக் கூகிள் மேப்ஸ் உங்களுக்குக் காட்டும்.
- Ok கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
- இதன் மூலம் நீங்கள் ஆஃப்லைன் மேப்ஸ் சேவையை இனி இன்டர்நெட் இல்லாமல் கூட பயன்படுத்தலாம்.

ஆஃப்லைன் மேப்ஸ் டவுன்லோட்

ஆண்ட்ராய்டு 10 பயனர்கள்
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் இயங்கும் போனிகளில் உள்ள மேப்ஸ் பயன்பாட்டில் சில மாற்றங்கள் உள்ளது. ஆகையால் ஆஃப்லைன் மேப்ஸ் சேவையைக் கண்டறிய உங்கள் ப்ரொபைல் படத்தை கிளிக் செய்யுங்கள்.

ஆட்டோமேட்டிக்கலி அப்டேட் கிளிக் செய்ய மறக்க வேண்டாம்
அதன் பின், கீழ் உள்ள ஆஃப்லைன் மேப்ஸ் சேவையை கிளிக் செய்து, மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளைப் ஒன்றின்பின் ஒன்றாகபின்பற்றுங்கள். உங்கள் ஆஃப்லைன் வரைபடங்கள் தானாகவே புதுப்பிக்க ஆட்டோமேட்டிக்கலி அப்டேட் ஆப்ஷனை கிளிக் செய்ய மறக்கவேண்டாம்.


Click it and Unblock the Notifications