கூகுள் மேப்ஸ் இல் களமிறங்கும் புதிய சேவை! சீக்ரெட்டா இடங்களை தேடலாம்!

|

கூகுள் க்ரோம் பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 'Incognito Mode' சேவையின் கீழ் கூகுள் மேப்ஸ் சேவையை இணைக்கப்போவதாகக் கூகுள் நிறுவனம் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் மேப்ஸ் இல் களமிறங்கும் புதிய சேவை! சீக்ரெட்டா இடங்களை தேடலாம்

கூடுதல் தனியுரிமையை வழங்குவதற்கும், அதன் பயனர்களின் தரவைப் பாதுகாப்பதற்கும் கூகுள் நிறுவனம் ஒரு முக்கிய முயற்சியைக் கையில் எடுத்து அதை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகிள் இன்று கூகிள் வரைபடங்களில் (Google Maps) சேவையின் கீழ் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'மறைநிலை பயன்முறையை (Incognito Mode)' சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய சேவையின்படி கூகுள் மேப்ஸ் பயனர்கள், தங்கள் கூகுள் மேப் செயலியில் தேடும் இடங்களின் விபரங்கள் எதுவும் உங்கள் கூகுள் அக்கௌன்ட் உடன் சேமிக்கப்படாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக உங்கள் கூகுள் அக்கௌன்ட்டில் மட்டுமில்லாமல் உங்களின் ஸ்மார்ட்போன் சாதனத்திலும் சேமிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் மேப்ஸ் இல் களமிறங்கும் புதிய சேவை! சீக்ரெட்டா இடங்களை தேடலாம்

அதேபோல், இன்காக்னிட்டோ மோடு இன் கீழ் நீங்கள் பயன்படுத்தும், உங்களின் தனிப்பயனாக்கப்பட்ட (personalized) அனுபவம் அல்லது தேடும் எந்தவொரு தகவல்களும் சேமிக்கப்படமாட்டாது. அதேபோல் இவற்றை மீண்டும் ரீட்ரைவ் செய்யமுடியாது.

இன்காக்னிட்டோ மோடு முதலில் 2008 ஆம் ஆண்டு கூகுள் க்ரோமில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து யூட்யூப் சேவையிலும் இன்காக்னிட்டோ மோடு இணைக்கப்பட்டது. தற்பொழுது ஒருவழியாகக் கூகுள் மாக்ஸ் சேவையிலும் இன்காக்னிட்டோ மோடு இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google Maps Going To Roll Out Incognito Mode Soon Google New Announcement : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X