கூகுல் மேப்ஸ் கோ - இப்போது பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்
கடந்த வாரம் புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், கூகுல் நிறுவனம் மூலம் இந்தியாவில் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ பதிப்பு) அறிமுகம் செய்யப்பட்டது.

ஆண்ட்ராய்டு கோ என்பது துவக்க நிலை சாதனங்களைச் சீராக இயங்க செய்யும் வகையில், ஆண்ட்ராய்டின் நவீன பதிப்பாக அமையும் இது, மேலும் மேம்படுத்தப்பட்ட ஓரியோவின் ஒரு மெல்லிய பதிப்பாகும். 512எம்பி இலிருந்து 1ஜிபி வரையிலான ரேம் கொண்ட சாதனங்களை தவிர, மற்றவை ஓஎஸ்ஸில் சிறப்பாக இயங்கும்.
இதேபோல ஒரு கூட்டம் இலகுவான ஆப்களை (ஜிமெயில், அசிஸ்ட்டெண்ட், ஃபைல்ஸ் கோ மற்றும் மேப்ஸ்) கூகுல் அறிமுகப்படுத்தி உள்ள நிலையில், அவை மேற்கூறிய ஸ்மார்ட்போன்களுக்கு விரைவில் கிடைக்கப் பெறும். ஆனால் இப்போதைக்கு ஃபைல்ஸ் கோ ஃபைல் மேனேஜர் மட்டும் தனிப்பட்ட முறையில் கூகுல் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்தக் கூற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது கூகுல் பிளே ஸ்டோரில் கூகுல் மேப்ஸ் கோ அப்ளிகேஷனும் பதிவிறக்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. கூகுல் நிறுவனத்தின் கூற்றுப்படி, இதேபோல கூகுல் அசிஸ்ட்டெட் மற்றும் ஜிமெயில் ஆகியவற்றின் இலகுவான கோ வகைகளும் விரைவில் வரவுள்ளன.
புதிய கூகுல் மேப்ஸ் கோ அப்ளிகேஷன் குறித்து கூறுகையில், ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் இயங்கும் ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்காகவே, இது பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ளது. இவை 1ஜிபி அல்லது அதற்கு குறைந்த ரேம் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களாக இருக்கும். குறைந்த ரேம் திறன் கொண்ட ஃபோன்களுக்கு பிளே ஸ்டோரில் இருந்து மேம்ஸ் கோ அளிக்கப்படுகிறது.
இது அடிப்படையில் கூகுல் மேப்ஸ் அப்ளிகேஷனின் ஒரு இலகுவான பதிப்பு என்பதால், வரையறுக்கப்பட்ட நினைவகத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் சீராக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நம்பகம் இல்லாத நெட்வெர்க்குகளிலும், இந்த அப்ளிகேஷனில் முக்கிய அம்சங்களான இருப்பிடம், ரியல்-டைம் ட்ராஃபிக் புதுப்பிப்புகள், வழிகள் மற்றும் மற்ற தகவல்கள் ஆகியவை சீராக வேலைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, பயனர்களுக்கு தேவைப்படும் ஃபோன் நம்பர்கள் மற்றும் முகவரிகள் உள்ளிட்ட எண்ணற்ற பகுதிகளைக் குறித்த தகவல்களை தேடவும் கண்டறியவும் முடியும்.
70க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கும் கூகுல் மேப்ஸ் கோ, 200 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் குறித்த விரைவான மற்றும் துல்லியமான வரைபடத்தை அளிப்பதோடு, 100 மில்லியனுக்கும் மேலான இடங்களைக் குறித்த வணிகத் தகவல்களை விரிவாக அளிக்கப்படுகிறது.
மேலும் ஏறக்குறைய 7,000 ஏஜென்ஸிகள், 3.8 மில்லியன் நிலையங்கள் மற்றும் 20,000க்கும் அதிகமான நகரங்களின் தகவல்களையும் பயனர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
முன்னதாக, கூகுல் ஃபார் இந்தியா நிகழ்ச்சியில் இன்ஜினியரிங்கிற்கான கூகுல் துணை தலைவர் சசிதர் தாகூர் கூறுகையில், கூகுல் கோ மேம்படுத்தப்பட்டதற்கான முக்கிய நோக்கம் என்னவென்றால், இணையதளத்திற்குள் நுழையும் புதிய ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு உதவுவதோடு, அவர்கள் தளங்களை எளிதாக பயன்படுத்த உதவுவது ஆகும்.
இந்திய சந்தையை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ பதிப்பு), அதிகளவிலான பயனர்கள் மலிவான ஹார்டுவேரில் ஆண்ட்ராய்டு அனுபவத்தை எளிதாக பெற உதவ வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டது.


Click it and Unblock the Notifications