கூகுள் மேப் கோ மேப் ஆகியவற்றில் உள்ள புதிய வசதிகள்.!

ரெட் பஸ் நிறுவனத்துடன் கூட்டணி: கூகுள் மேப் தற்போது ஆன்லைன் பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் நிறுவனமான ரெட் பஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது.

By Lekhaka
|

இண்டர்நெட் உலகின் முடிசூடா மன்னனாக திகழும் கூகுள் நிறுவனம் 'கூகுள் இந்தியா' என்ற நிகழ்ச்சியின்போது கூகுள் மேப் மற்றும் மேப் கோ ஆகிய செயலிகளில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கூகுள் மேப் அறிமுகமாகி பத்து வருடங்கள் ஆகியதை அடுத்து நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த புதிய வசதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் மேப் கோ மேப் ஆகியவற்றில் உள்ள புதிய வசதிகள்.!

கூகுள் மேப் இந்தியாவின் துணை தலைவர் காயத்ரி ராஜன் என்பவர் இந்த நிகழ்ச்சியில் பேசியபோது, 'கூகுள் மேப் மிக அதிகமாக பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்றார். இந்த புதிய வசதி என்பது 'பிளஸ் கோட்ஸ்' என்று கூறப்படுகிறது. இந்த புதிய வசதியின் மூலம் சமீபத்தில் கொல்கத்தாவில் மட்டும் சுமார் 25000 குடும்பத்தினர் பயன் பெற்றுள்ளனர். விர்ட்டியுவல் முகவரி மூலம் முகவரியே இல்லாமல் இடத்தை கண்டுபிடிக்க உதவி செய்வதுதான் இந்த புதிய வசதியின் சிறப்பு ஆகும்

கூகுள் மேப்பில் விரைவில் வரக்கூடிய வசதிகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்

கூகுள் மேப் கோ மேப் ஆகியவற்றில் உள்ள புதிய வசதிகள்.!

ரெட் பஸ் நிறுவனத்துடன் கூட்டணி: கூகுள் மேப் தற்போது ஆன்லைன் பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் நிறுவனமான ரெட் பஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது. இதன்மூலம் முக்கிய நகரங்களுக்கு இடையே செல்லும் பேருந்துகளின் நிலை குறித்து கூகுள் மேப் மூலம் அறிந்து கொள்ள முடியும். பயனாளிகள் தாங்கள் புக் செய்த பேருந்தின் நிலை அதன் விபரங்கள் ஆகியவை குறித்து கூகுள் மேப்பின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி ரெட் பஸ் நிறுவனம், பேருந்துகள் நிற்குமிடம் மற்றும் பேருந்துகளின் பயண தூரம் உள்ளிட்ட விபரங்களளயும் தருகிறது. இந்தியாவில் சுமார் 20000 ரூட்களில் இந்த வசதியை கூகுள் நிறுவனம் பெறவுள்ளது.

இந்தி மற்றும் ஆங்கிலத்தின் வாய்ஸ் நேவிகேசன் வசதியும் கூகுள் மேப்பில் உண்டு: மேலும் கூகுள் மேப்பில் இனிமேல் வாய்ஸ் நேவிகேஷன் மூலம் நாம் விரும்பும் இடத்தை தேடி கொள்ளலாம். இப்போதைக்கு இந்த வசதி ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் கொண்டு வரப்படுகிறது. இந்த வசதியின் மூலம் நாம் பயணம் செய்ய வேண்டிய பேருந்து இருக்குமிடம், செல்லுமிடம், மற்றும் பிர விபரங்களை கூகுள் மேப் செயலியில் வாய்ஸ் மூலம் கேள்வி கேட்டு நம்முடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

கூகுள் மேப் கோ மேப் ஆகியவற்றில் உள்ள புதிய வசதிகள்.!

மேப் கோ'வில் புதிய ஹோம் ஸ்க்ரீன் மற்றும் ஷார்ட்கட்: சமீபத்தில் கூகுள் மேப் கோ செயலி அப்கிரேட் செய்யபப்ட்டுள்ளது. இதனால் புதிய ஹோம் ஸ்க்ரீன் மற்றும் பொது பயணத்திற்கு தேவையான ஷார்ட்கட்டுக்களும் இதில் கிடைக்கின்றது.

அதேபோல் லைட்டர் மேப்ஸ் கோ வெர்ஷனும் ஆண்ட்ராய்ட் போன் பயனாளிகளுக்கு உதவுகிறது. அதேபோல் மெதுவான இண்டர்நெட் வசதியான 2ஜி போன் வைத்திருப்பவர்களுக்கு இந்த லைட்டர் வெர்ஷன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

கூகுள் மேப் கோ மேப் ஆகியவற்றில் உள்ள புதிய வசதிகள்.!

இந்த 2018ஆம் ஆண்டில் மட்டும் இன்னும் 50 மில்லியன் பேர் இந்த கூகுள் மேப்பை அதிகம் பயன்படுத்தும் வகையில் இருக்க போகிறது. அதுமட்டுமின்றி கூகுள் மேப்பை இருசக்கர வாகங்கள் பயனப்டுத்தும் 20 மில்லியன் மக்களும் பயனப்டுத்தவுள்ளனர்.
Best Mobiles in India

English summary
Google Maps Go app set to get new features: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X