கூடுதலாக 39 மொழிகளில் சேவை வழங்கும் கூகுள் மேப்.!
பேசும் மக்கள் தொகையின் சதவீதத்தை பொறுத்து பெரும்பாலான மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
2004 ஆம் ஆண்டு துவங்கும் போது ஆங்கிலத்தில் மட்டுமே சேவை வழங்கியது கூகுள் மேப். பின்னர் சில வருடங்கள் கழித்து, ஸ்பேனிஷ், பிரென்சு போன்ற அதிக மக்களால் பேசக்கூடிய மொழிகளும் சேர்க்கப்பட்டன.

கூகுள் நிறுவனத்தின் தரவுகளின் படி, தினமும் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் கூகுள் மேப் ஆப் மூலம் தங்கள் பயணங்களை திட்டமிடல் மற்றும் இடங்களை தேடவும் கூகுள் மேப்பை பயன்படுத்துகின்றனர். தற்போது 39 மொழிகளில் சேவையை விரிவுபடுத்துவதன் மூலம் மேலும் 1.25 மில்லியன் பயனர்களை ஈர்க்க முடியும் என நம்புகிறது.

ஆப்பிரிக்கன்ஸ், அல்பேனியன், ஆம்ஹரிக், அர்மேனியன், அசர்பைஜனி, போஸ்னியன், பர்மீஸ், குரோடியன், கிசிஞ், டேனிஷ், எஸ்டோனியன், பிலிப்பினோ, பின்னிஷ், ஜியோர்ஜியன், ஹுப்ரு, ஐஸ்லேண்டிக், இந்தோனேசியன், கசாக், கமிர், கேரீஸ், லயோ, லேட்வியன், லிதுனியன், மசடோனியன், மலாய், மங்கோலியன், நார்வேஜியன், பெர்சியன், ரோமேனியன், செர்பியன், ஸ்லோவக், ஸ்லோவேனியன், ஸ்வாகிலி, ஸ்வீடிஸ், துர்கீஸ், உக்ரேனியன், உஸ்பெக், வியட்னேமிஸ், ஜூலூ ஆகிய 39 மொழிகளை புதிதாக இணைத்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

பேசும் மக்கள் தொகையின் சதவீதத்தை பொறுத்து பெரும்பாலான மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, துர்கீஸ் 9% ஐரோப்பிய மக்களால் பேசப்படுகிறது. ஆப்ரிக்கன்ஸ் மொழி 13.5% தென்னாப்பிரிக்க மக்களால் பேசப்படுகிறது.

கூகுள் மேப்பின் இந்த அப்டேட் ஆண்ராய்டு, ஐ ஓ.எஸ் களிலும், கணிணியில் விண்டோஸ் மற்றும் மேக் ஓ.எஸ் இயங்குதளங்களிலும் கிடைக்கிறது.
Comments
Best Mobiles in India
English summary
Google Maps get support for 39 new languages ; Read more about this in Tamil GizBot
Story first
published: Monday, April 2, 2018, 17:08 [IST]


Click it and Unblock the Notifications