கூகிள் எச்சரிக்கை: ஆபத்தான 17 ஆப் பட்டியல்- யோசிக்காம உடனே டெலிட் செய்யுங்கள்!

|

கூகிள் நிறுவனம் 17 தீங்கிழைக்கும் செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இந்த செயலிகள் தங்களது மொபைல் போனில் இருந்தால் உடனடியாக அன்-இன்ஸ்டால் செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வைரஸ், மால்வேர், சைபர் தாக்குதல்

வைரஸ், மால்வேர், சைபர் தாக்குதல்

வைரஸ், மால்வேர், சைபர் தாக்குதல் போன்ற செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. அப்படி இந்த பட்டியலில் தற்போது புதிதாக தீங்கிகழைக்கும் செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. கூகிள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து மீண்டும் புதிதாக 17 மொபைல் ஆப்ஸ்களை ஆபத்தானது என்று அறிவித்து நீக்கம் செய்துள்ளது.

ஜோக்கர் என்ற மால்வேர்

ஜோக்கர் என்ற மால்வேர்

கடந்த சில ஆண்டுகளாகத் தனது தாக்குதலை நடத்தி வரும் ஜோக்கர் என்ற மால்வேர், தற்போது மீண்டும் தனது கைவரிசையைச் சமீப காலமாகக் காட்டத் தொடங்கியுள்ளது. எதிர்பார்த்திடாத பல மொபைல் ஆப்ஸ்களில் தற்போது இந்த ஜோக்கர் மால்வேர் தனது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கூகிள் சில அதிரடி நடவடிக்கைகள்

கூகிள் சில அதிரடி நடவடிக்கைகள்

இதற்காகக் கூகிள் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உடனே கீழ கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஸ்களை உங்கள் போனில் இருந்து அன்-இன்ஸ்டால் செய்து நீக்கிவிடுங்கள். பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, ஆண்ட்ராய்டு ஆப்ஸ் வழியாக ஸ்மார்ட்போன்களில் மால்வேரை செலுத்துவதன் மூலம் பயனர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் இந்த மால்வேர் தாக்குதல் நடந்து வருகிறது.

17 மொபைல் ஆப்ஸ்கள்

17 மொபைல் ஆப்ஸ்கள்

கூகிள் நிறுவனம் ஜோக்கர் மால்வேர் இருக்கும் தடயங்களை உறுதி செய்து தற்போது பாதிக்கப்பட்ட 17 மொபைல் ஆப்ஸ்களையும் தனது கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்துள்ளது. கூகிள் நிறுவனம் இதற்கு முன்பும் ஜோக்கர் மால்வேரால் பாதிக்கப்பட்ட சில ஆப்ஸ்களை கண்டறிந்தது நீக்கியது குறிப்பிடத்தக்கது.

ஜோக்கர் தீம்பொருள்

ஜோக்கர் தீம்பொருள்

ஜோக்கர் தீம்பொருள் பயன்பாடுகளை scaler ThreatLabZ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். ஜோக்கர் மால்வேர் தாக்குதல் உள்ள பயன்பாடுகள் குறித்து கூகுள் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மையுடன் நான்கு திட்டங்களை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.!குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மையுடன் நான்கு திட்டங்களை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.!

சுமார் 1,20,000 பதிவிறங்கள்

சுமார் 1,20,000 பதிவிறங்கள்

தற்போது கூகிள் அறிவிக்கப்பட்டுள்ள 17 பயன்பாடுகளும் சுமார் 1,20,000 பதிவிறங்களை கொண்டுள்ளது. இதில் பெரும்பாலானவை ஸ்கேனர் பயன்பாடுகளாகவே உள்ளன. அதோடு சில மெசேஜிங் ஆப்ஸ் மற்றும் போட்டோ எடிட்டர்கள் செயலிகளும் இடம்பெற்றுள்ளது. கூகுள் இந்த செயலிகளை கண்காணித்து ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய அறிவுறுத்தல்

உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய அறிவுறுத்தல்

கூகிள் தற்போது பட்டியலிட்டுள்ள இந்த 17 செயலிகளும் உங்கள் மொபைலில் இருந்தால் உடனடியாக அன்இன்ஸ்டால்(நீக்கம்) செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள 17 செயலிகள் குறித்து பார்க்கலாம்.

ஆப்ஸ் பட்டியல்

ஆப்ஸ் பட்டியல்

  • ஆல் குட் பிடிஎஃப் ஸ்கேனர்-(All Good PDF Scanner)
  • மின் லீஃப் மெசேஜ்- தங்கள் பிரைவேட் மெசேஜ் (Mint Leaf Message-Your Private Message)
  • யுனிக்யூ கீபோர்ட்- பேன்சி எழுத்து வடிவும் மற்றும் ஃப்ரீ எமோடிக்கனஸ் (Unique Keyboard - Fancy Fonts & Free Emoticons)
  • டாங்கிராம் செயலி பூட்டு (Tangram App Lock)
  • டைரக்ட்(நேரடி) மெசஞ்சர் (Direct Messenger)
  • தனிநபர் எஸ்எம்எஸ் (Private SMS)
  • ஒரு வார்த்தை மொழிமாற்றம்- One Sentence Translator - Multifunctional Translator)
  • ஸ்டைல் போட்டோ கொலாஜ் (Style Photo Collage)
  • மெடிக்யூலஸ் ஸ்கேனர் (Meticulous Scanner)
  • டிசைர் டிரான்ஸ்லேட் (Desire Translate)
  • போட்டோ எடிட்டர் மற்றும் ஸ்கேனர் செயலிகள்

    போட்டோ எடிட்டர் மற்றும் ஸ்கேனர் செயலிகள்

    • டேலண்ட் போட்டோ எடிட்டர் - ப்ளர் ஃபோகஸ் (Talent Photo Editor - Blur focus)
    • கேர் மெசேஜ் (Care Message)
    • பார்ட் மெசேஜ் (Part Message)
    • பேப்பர் டார் ஸ்கேனர் (Paper Doc Scanner)
    • ப்ளூ ஸ்கேனர் (Blue Scanner)
    • ஹம்மிங்பேர்ட் பிடிஎஃப் கன்வெர்டர் - போட்டோ டூ பிடிஎஃப் (Hummingbird PDF Converter - Photo to PDF)
    • ஆல் குட் பிடிஎஃப் ஸ்கேனர் (All Good PDF Scanner)
    • தீங்கிழைக்கும் பயன்பாடுகள் கண்காணிப்பு

      தீங்கிழைக்கும் பயன்பாடுகள் கண்காணிப்பு

      கூகிள் தற்போது தனித்துவமான வகைக்களுக்குள் வரும் தீங்கிழைக்கும் பிரெட் எனப்படும் பயன்பாட்டை வடிகட்டுவதில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜோக்கர் தீம்பொருளின் புதிய மாறுபாடு உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கூகுள் தொடர்ந்து தீங்கிழைக்கும் பயன்பாடுகளை கண்டறிந்து வருவதோடு 17,000-க்கும் மேற்பட்ட பயன்பாடுகளை கூகிள் அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Google Listed 17 Joker Malware Apps Removed From PlayStore

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X