Google Lens மூலம் கையால் எழுதிய வார்த்தைகளை ஒரே கிளிக்கில் எப்படி டிஜிட்டலாக மாற்றுவது?

|

கூகிள் நிறுவனம் கூகிள் லென்ஸ் பயன்பாட்டில் புதிய அம்சத்தைக் களமிறங்கியுள்ளது. இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் கையால் எழுதிய எழுத்துகளை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்து அந்த தகவலை காப்பி பேஸ்ட் செய்ய அனுமதிக்கிறது.

Google Lens புதிய அம்சம்

Google Lens புதிய அம்சம்

Google Lens மூலம் கையால் எழுதிய வார்த்தைகளை ஒரே கிளிக்கில் டிஜிட்டலாக மாற்ற முடியும் என்பது சிலருக்கு அதிசயமாக தான் இருக்கும். உங்கள் ஸ்மார்ட் போன் கேமரா உதவியுடன் கூகிள் இதை நடைமுறைப்படுத்தி சாத்தியமாக்கியுள்ளது. கையால் எழுதிய வார்த்தைகளைக் காப்பி பேஸ்ட் செய்வது மட்டுமின்றி இதை உங்கள் கணினியில் டிஜிட்டல் வடிவத்திற்கும் மாற்றம் செய்து சேவ் செய்துகொள்ளலாம். இதை எப்படிச் செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

மாணவர்களுக்கு பெரிதும் உதவும் இந்த சேவை

மாணவர்களுக்கு பெரிதும் உதவும் இந்த சேவை

கூகிள் நிறுவனம் அதன் கூகிள் லென்ஸ் பயன்பாட்டில் புதிய அம்சத்தைக் உருவாக்கியுள்ளது, இந்த புதிய அம்சம் குறிப்பாக மாணவர்களுக்கு மற்றும் காகிதத்தில் உள்ள வார்த்தைகளை டிஜிட்டல் வடிவமாக மாற்ற வேண்டும் என்ற தேவைக்கொண்ட அனைவருக்கும் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை. கையால் எழுதப்பட்ட குறிப்புகளை ஸ்கேன் செய்து அதை டிஜிட்டல் வடிவத்திற்கு நொடியில் இந்த புதிய அம்சம் மாற்றிவிடுகிறது.

தமிழகத்தில் ஆன்லைன் மதுபாட்டில் விற்பனை: எப்படி தெரியுமா?தமிழகத்தில் ஆன்லைன் மதுபாட்டில் விற்பனை: எப்படி தெரியுமா?

தேவையான குறிப்புகளையும் தேர்வு செய்ய அனுமதி

தேவையான குறிப்புகளையும் தேர்வு செய்ய அனுமதி

காகிதத்தில் கையால் எழுதப்பட்ட வாக்கியங்களை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றம் செய்ய இந்த அம்சம் அனுமதிக்கிறது என்பதுடன், நீங்கள் கூகிள் லென்ஸ் கேமரா மூலம் ஸ்கேன் செய்த எழுத்துக்களில் உங்களுக்குத் தேவையான குறிப்புகளையும் தேர்வு செய்ய அனுமதிக்கிறது. நீங்கள் தேர்வு செய்து வார்த்தைகளை காப்பி செய்து, அதை உங்கள் கணினியில் எங்குவேண்டுமானாலும் நீங்கள் பேஸ்ட் செய்துகொள்ளவும் அனுமதிக்கிறது.

புதிய வெர்ஷன் புதிய அம்சம்

புதிய வெர்ஷன் புதிய அம்சம்

இந்த புதிய அம்சத்தைப் நீங்கள் கூகிள் லென்ஸ் அல்லது கூகிள் பயன்பாடு மற்றும் கூகிள் குரோம் ஆகிய பயன்பாடுகளின் வழி பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த பயன்பாடுகளின் சமீபத்திய வெர்ஷனில் மட்டுமே இந்த புதிய சேவை கிடைக்கிறது. புதிய வெர்ஷன் கூகிள் லென்ஸ் மற்றும் கூகிள் பயன்பாடுகள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு தளங்களிலும் கிடைக்கிறது.

Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!

பயன்பாடு இல்லாமலும் அணுக வழி உள்ளது

பயன்பாடு இல்லாமலும் அணுக வழி உள்ளது

கூகிள் லென்ஸ் அம்சம் கொண்ட பயன்பாடுகளை ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதேபோல், ஆப்பிள் ஐபோன் பயனர்கள் தங்களுக்குத் தேவையான கூகுள் லென்ஸ் பயன்பாட்டை அப்பிளின் ஆப் ஸ்டார் வாயிலாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உங்களிடம் கூகிள் லென்ஸ் பயன்பாடு இல்லையென்றால், நீங்கள் Google பயன்பாட்டிலிருந்தும் இந்த அம்சத்தை அணுகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கையால் எழுதிய குறிப்புகளை எப்படி டிஜிட்டல் முறைக்கு மாற்றி காப்பி பேஸ்ட் செய்வது?

கையால் எழுதிய குறிப்புகளை எப்படி டிஜிட்டல் முறைக்கு மாற்றி காப்பி பேஸ்ட் செய்வது?

  • முதலில் கூகிள் லென்ஸ் பயன்பாட்டைத் திறக்கவும் அல்லது கூகிள் பயன்பாட்டில் உள்ள லென்ஸ் பட்டனை கிளிக் செய்யவும்.
  • நீங்கள் காகிதத்தில் எழுதியுள்ள கையெழுத்து குறிப்புகளை நோக்கி உங்கள் கூகிள் லென்ஸ் கேமராவை காட்டவும்.
  • கையால் எழுதப்பட்ட எழுத்துக்களுக்கு நேராக கேமராவை வைத்து ஒரு புகைப்படத்தை எடுக்கவும்.
  • மிக எளிதாக கையெழுத்துக்களை டிஜிட்டலாக மாற்றலாம்

    மிக எளிதாக கையெழுத்துக்களை டிஜிட்டலாக மாற்றலாம்

    • ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படத்திலிருந்து நீங்கள் மாற்ற விரும்பும் குறிப்புகளை இப்பொழுது தேர்ந்தெடுக்கவும்.
    • பின்னர் கீழே தோன்றும் copy to computer விருப்பத்தை கிளிக் செய்யவும்.
    • தற்பொழுது நீங்கள் தேர்வு செய்த உங்கள் குறிப்புகள் உங்கள் கணினியில் நகலாக மாட்டப்பட்டிருக்கும்.
    • இதை இப்பொழுது இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பேஸ்ட் செய்துகொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Google Lens Now Allows You To Copy Paste Handwritten Notes To Your PC : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X