விளம்பரத்தை பணமாக்கலாம்.!கூகுளின் புதிய மொழி வெளியீட்டாளர் சேவை "நவேலிகா".!
இந்தியாவின் நான்காவது 'கூகுள் ஃபார் இந்திய(Google for India)' நிகழ்ச்சியில், கூகுள் நிறுவனம் தனது புதிய திட்டம் "நவேலிகா(Navelkha)" வை நேற்று அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தியாவின் நான்காவது 'கூகுள் ஃபார் இந்திய(Google for India)' நிகழ்ச்சியில், கூகுள் நிறுவனம் தனது புதிய திட்டம் "நவேலிகா(Navelkha)" வை நேற்று அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த புதிய திட்டம், இந்தியாவில் உள்ள 1,35,000 இந்திய மொழிகளின் சேவையை வழங்கும். இந்திய மொழி வெளியீடுகளை ஒரே தொகுப்பாக கொண்டு வருவதற்கான புதிய முயற்சி தான் நவேலிகா என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எழுதுவதற்கான புதிய முறை
நவேலிகா என்பது சமஸ்க்ரிதத்தில் " எழுதுவதற்கான புதிய முறை" என்று பொருள். இந்த புதிய வலைத்தளம் உள்ளூர் வெளியீட்டாளர்கள் முழு மனநிறைவுடன் அவர்களின் படைப்புகளை எளிதில் ஆன்லைன் இல் வெளியிடும் அனுமதியை இந்தச் சேவை வழங்குகிறது.

டிஜிட்டல் ஸ்கேன் அனுபவம்
இந்த புதிய சேவைத் திட்டம் மிக எளித்தில் ஆவணங்களை ஸ்கேன் செய்து பயனருக்கு உடனுக்குடன் தனி வெளியீடு தளத்தை உருவாக்கித் தருகிறது. இதற்கென்று பயனர்களுக்கு தனி டிஜிட்டல் அனுபவம் மற்றும் டிஜிட்டல் அறிவு தேவையில்லை என்று கூகுள் தெரிவித்துள்ளது.

அனைத்து இந்திய மொழி
இந்த புதிய தளம் முதலில் ஹிந்தி மொழியில் வெளியீடுகளின் சேவைக்கு அனுமதி வழங்குமென்றும், வரும் நாட்களில் அனைத்து இந்திய மொழிகளிலும் படைப்புகள் வெளியிடுவதற்கான சேவை வழங்கப்படும் என்று கூகுள் கூறியுள்ளது. வெகு விரைவில் தமிழ்,தெலுகு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் நவேலிகா சேவை துவக்கப்படுமென்று கூகுள் ஃபார் இந்திய விழாவில் தெரிவிக்கப்பட்டது

விளம்பரங்களைப் பணமாக்கும் வசதி
இத்துடன் கூடுதலாக உங்களுக்கான முதல் மூன்று ஆண்டு சேவை முற்றிலும் இலவசம் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது, கூடுதலாக விளம்பரங்களைப் பணமாக்கும் வசதியையும் வழங்கியுள்ளதாக விழாவில் கூகுளின் ராஜன் ஆனந்தன் கூறினார்.


Click it and Unblock the Notifications